Header Ads



இலங்கையில் மத சுதந்திரத்தை, பாதுகாக்கப் போகிறதாம் அமெரிக்கா

இலங்கையில் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் திட்டங்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது. அமெரிக்கா ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு இது தொடர்பிலான உதவிகளை வழங்க உள்ளது.

இலங்கையில் மதச் சுதந்திரத்தை பாதுகாக்கவும் அதனை உறுதி செய்யவும் அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் மட்டத்திலும் தேசிய ரீதியிலும் மதச் சுதந்திரத்தை ஊக்குவித்து மேம்படுத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினருக்கும் மத சுதந்திரத்தை உறுதி செய்ய,  சிவில் சமூகத்தின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.

வெறும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு மட்டும் இந்த திட்டம் வரையறுக்கப்படக் கூடாது எனவும் விரிவான விடயங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் பொறிமுறைமையை உருவாக்குதல் அவற்றை கண்காணித்தல், மத சுதந்திரத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத சுதந்திரத்தை உறுதி செய்யும் நிறுவனங்கள் உதவிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

7 comments:

  1. முதலில் BBS தான் விண்ணப்பிக்கும்.

    ReplyDelete
  2. Firstly the USA should protect the religious rights in their country.
    If they protect the religious rights, they must arrest the Donald Drump

    ReplyDelete
  3. முதலில் உனது நாட்டில் மத சுதந்திரத்தையும் மனிதாபிமானத்தையும் நிலை நாட்டு அப்போது எந்த நாட்டிலும் பிரச்சினை வராது.தற்போது இலங்கையில் புகைந்து கொண்டு இருக்கும் இனப்பிரச்சினையை ஊதி தீ மூட்டும் வேலைதான் இது.

    ReplyDelete
  4. அமெரிக்கா உதவுகிறது என்றால் BBS மட்டுமே தகுதி பெரும் ...

    ReplyDelete
  5. இந்த சந்தர்ப்பத்தை முஸ்லீம் சமூக நிறுவனங்கள் பயன்படுத்துமா??

    ReplyDelete
  6. Kuruvi, நக்குண்டார் நாவிழந்தார். சோழியன் குடுமி சும்மா ஆடாது.

    ReplyDelete
  7. ஹனிபா, இது நக்கு இல்லை, சமூக சேவை, இதை தான் NGO ( non-governmental organization ) என்று கூறுவார்கள்; இதன் மூலம் நிறைய மக்களுக்கு சேவை செய்யலாம். அதே நேரம் நமது நேர்மையையும் உழைப்பையையும், தியாகத்தையும் ( உண்மை முஸ்லீம்) வெளிப்படுத்தினால் அவர்களுக்கு நம் மார்க்கத்தின் மீது மதிப்பும் பரியாதையும் ஏட்படும், அதே நேரம் பிறசமூகத்தினர் வந்து நமது வறிய மக்களை அலைய வைக்க வேண்டிய நிலைமையை தவிர்க்கலாம். கொஞ்சம் சிந்தியுங்கள் புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.