September 09, 2016

சிறைச்சாலைக்குள் பாரிய குற்றம் புரிந்த, துமிந்த சில்வா

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சிறைக்கைதிகளுக்கு வழங்கப்படும் உடற்பயிற்சிக்கான நேரத்தின் போது, சக கைதிகளுடன் இணைந்து, கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கில், மரணதண்டனை தீர்ப்புக்குள்ளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கொழும்பு - வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, யின் சீ-3 அறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை, பீ-3 அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

இதேவேளை, நேற்று சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட துமிந்த சில்வாவுக்கு, கைதிகள் அணிய வேண்டிய ஆடையை, சிறைச்சாலை அதிகாரிகள் வழங்கி, அவரது சிறைக்கூடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், அவர் அந்தச் சிறைக்கூடத்துக்குச் செல்லாது, நேரடியாக சிறைச்சாலைக் கண்காணிப்பாளரின் அலுவலகத்துக்கே சென்றுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவரோ அல்லது வேறு எந்தக் கைதியுமோ, சிறைச்சாலைக்குள் வேறு எந்த இடத்துக்கும் செல்ல அனுமதியில்லை. அவ்வாறு சென்றால், அது பாரிய குற்றமாகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், சிறைச்சாலைக் கண்காணிப்பாளரின் அறைக்குச் சென்றுள்ள துமிந்த சில்வா, சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னரே வெளியே வந்துள்ளார் என்றும், அதன் பின்னரே அவர், தனது சிறைக்கூடத்துக்குச் சென்றார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

2

மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் நிலை பரிதாபகரமாக மாறியுள்ளது.

சிறைச்சாலையின் சீ- 3 அறையின் தனி செல்லில் துமிந்த அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிட்டத்தட்ட 20 மீற்றர் நீளமான அறையை கொண்ட கட்டிடத்தொகுதியின் ஒரு செல்லில் ஒரு கைதி தடுத்து வைப்பது சாதாரணமானதாகும். எனினும் தற்போது ஒரு செல்லில் துமிந்த உட்பட மூவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த செல்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை கைதிகளுக்கு ஒரு நாளைக்கு அரை மணித்தியாலம் மாத்திரம் வெளியில் சென்று உடற்பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில் உடற்பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட காலப்பகுதியில் துமிந்த கிரிக்கெட் விளையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வெளியில் அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மேலும் சிலருடன் கிரிக்கெட் விளையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதேவேளை வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ள துமிந்தவினால் அனுமதி கோரப்பட்ட போதும், சிறைச்சாலை பிரதானி அதற்கு அனுமதி வழங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

2 கருத்துரைகள்:

இப்ப வீட்டிலிருந்து சாப்பாடு பிறகு மாது
மது குடு எல்லா சுக போகலும் தாராளமாக வழங்கப்படும் பிறகு ஆதாரம் இல்லை என்று நீநீநீதீதீதீ....க்கு மரண தண்டனை வழங்கி பண நீநீதீதீபதிகளுக்கு,வேண்டிய மது மாது பல கோடி மற்றும் குடும்பத்தோடு பல வெளிநாட்டு சுற்றுலா அத்தோடு மாமாமாமா வேலை பார்த்த,சகல,அல்ப அஅதிதிகாரிகளுக்கும் எலும்புகள் வீசப்படும்

இவர்தான் பாரிய குற்மான கொலைக் குற்றம் செய்து உச்சகட்ட தண்டனையான மரண தண்டனை விதிக்கப்பட்டது இதன் பிறகு எவ்வாறு சொல்வது சிறைச்சாலையில் பாரிய குற்றம், செய்தார் என்று,எல்லாம் அதன் கீழ் தான் ஆனால் தண்டனை வழங்கும் முறைதான் பிரச்சினை [தலைக்கு மேல் தண்ணீர் போனால் சாண் என்ன முழம் என்ன ,சாக துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தயாம்,இவ்வாறு பழமொழிகளை சும்மாவா பழயவர்கள் சொல்லி இருப்பார்கள்?

Post a Comment