Header Ads



"மையவாடி விவகாரம்" - நீதியை நிலைநாட்ட, முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் கோரிக்கை


-விடிவெள்ளி ARA.Fareel-

மாளி­கா­வத்தை மைய­வா­டிக்­காணி தனியார் ஒரு­வ­ரினால் கடந்த காலங்­களில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு கட்­டடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் கட்­ட­டத்­துக்கு சொந்­த­மா­னவர் முன்னாள் பாது­காப்பு செய­ல­ாளரின் நண்பர் என்­பதால் நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்­லை­யெ­னவும் நல்­லாட்­சியில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்கம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளது. 

பிர­தமர் ரணி­லுக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தின் பிர­திகள் முஸ்லிம் சமய விவ­கார தபால் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், மகா­காண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா ஆகி­யோ­ருக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. 

இலங்கை முஸ்லிம் மத உரி­மைகள் சங்­கத்தின் தலைவர் எம்.அஸ்லம் ஒத்மான் பிர­த­ம­ருக்கு அனுப்­பி­வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

மைய­வாடி காணியை அப­க­ரித்து சட்­ட­வி­ரோ­த­மாக கட்­ட­ட­மொன்­றினை நிர்­மா­ணித்து விரும் உபாலி ஜய­சிங்­க­வுக்கு எதி­ராக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து தடுக்க முயற்­சித்­த­போதும் அது முடி­யாமற் போனது. அவர் அப்­போ­தைய பாது­காப்புச் செய­லா­ளரின் நண்­ப­ராக இருந்­த­மையே இதற்குக் கார­ண­மாகும். 

வழங்­கப்­பட்­டி­ருந்த கட்­டட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் 2013 ஆம் ஆண்டு காலா­வ­தி­யாகி இருந்­தாலும் அது புதுப்­பிக்­கப்­ப­ட­வில்லை. கட்­டட நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் புதுப்­பிக்­கப்­ப­டாது தொடர்ந்து 2014 ஆம் ஆண்டும் நிர்­மாண வேலைகள் நடை­பெற்­றன. 

இதற்கு எதி­ராக நாம் பல எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தாலும் மாந­கர சபை அதி­கா­ரிகள், மாளி­கா­வத்தை சுற்­றாடல் பொலிஸ் பிரிவு இதனைக் கண்டு கொள்­ள­வில்லை. இதற்குக் காரணம் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை என நாம் கரு­து­கிறோம். 

2015 ஆம் ஆண்டில் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றுள்­ளது. உங்கள் ஆட்­சியில் நீதி நிலை நாட்­டப்­ப­டு­மென நாம் கரு­து­கிறோம். 
நாம் 2016 ஏப்ரல் மாதம் கொழும்பு மாந­கர சபை மேய­ரிடன் இது தொடர்­பாக பல கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினோம்.

இத­னை­ய­டுத்து மேயர் சட்ட விரோத கட்­டட நிர்­மா­ணத்­திற்கு எதி­ராக வழக்கு தொட­ரு­மாறு மாந­கர சபையின் சட்­டப்­பி­ரி­வுக்கு உத்­த­ர­விட்டார். 

கொழும்பு மாந­கர சபை கட்­டட நிர்­மாணப் பணிக்­கான அனு­ம­தியை நிறுத்­தி­யுள்ள நிலையில் தொடர்ந்தும் நிர்­மாணப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதை நிறுத்தும் படியும் கட்­ட­டத்தை உடைக்க உத்­த­ர­வி­டு­மாறும் கோரி இவ்­வ­ழக்கு நகர அபி­வி­ருத்தி அதி­கார சபையின் 28 ஏ(3) ஆம் பிரிவின் கீழ் தொட­ரப்­பட்­டது. 

வழக்­கினை விசா­ரித்த கொழும்பு நீதிவான் நீதி­மன்றம்  எழுத்து மூலம் அறி­விக்­கப்­படும் வரை குறிப்­பிட்ட கட்­ட­டத்தின் எந்­த­வித நிர்­மாணப் பணி­க­ளையும் முன்­னெ­டுக்கக் கூடா­தெ­னவும் வேறு எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்ளக் கூடா­தெ­னவும் உத்­த­ர­விட்­டது. 
கடந்த ஜுன் மாதம் 15 ஆம் திகதி இரு­த­ரப்பும் தமது எழுத்­து­மூல நியா­யங்­களை முன்­வைத்­தன.

தீர்ப்பு வழங்கும் திகதி ஜூலை 27 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது. என்­றாலும் வழக்­கினை தாக்கல் செய்­தி­ருந்த கொழும்பு மாந­கர சபை வழக்­கினை வாபஸ் பெற்றுக் கொண்­டது. 

கொழும்பு மாந­கர சபையின் இச் செயலை நாம் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். நாம் மீண்டும் பழைய ஆட்­சி­யா­ளர்­களின் காலத்தை நோக்கிச் செல்­கி­றோமா என்று நினைக்கத் தோன்­று­கி­றது. 

இந்­நி­லையில் எமக்கு நீதி பெற்­றுத்­தர வேண்டும். எமது பள்­ளி­வாசல் மைய­வாடி காணியை மீள பெற்­றுத்­தர நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அதனால் உங்­க­ளுடன் இது தொடர்பில் நாம் கலந்­து­ரை­யாட விரும்­பு­கிறோம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

கொழும்பு மாந­கர சபை 2009 ஆம் ஆண்டு உபாலி ஜயசிங்கவுக்கு 8 மாடிக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவினால் நியமிக்கப்பட்ட விஷேட ஆணையாளரின் கீழேயே மாநகர சபை நிர்வாகம் இயங்கியது. இந்த அனுமதி சட்டத்துக்கு முரணானதாகும். ஏனென்றால் பிரகடன காணி உறுதியுள்ள ஒரு காணியில் கட்டடம் நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்க முடியாது.

1 comment:

  1. Invoke the almighty Allah for justness. Convey this violation to the human rights commission, Muslim diplomats and to Geneva.

    ReplyDelete

Powered by Blogger.