Header Ads



அகதிகளினால் ஏற்பட்ட தோல்வியா...?

ஜேர்மனி நாட்டில் நடைபெற்ற உள்மாகாண தேர்தலில் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி படுதோல்வியை சந்தித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் தற்போது சீனாவில் நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், ஜேர்மனியில் உள்ள Mecklenburg-Western Pomerania மாகாணத்தில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்த தேர்தலில் முக்கிய கட்சியான Social Democrats (SPD) என்ற கட்சி 30 சதவிகித வாக்குகளும், AfD என்ற கட்சி 21 சதவிகித வாக்குகளும் பெற்றுள்ளன.

தற்போது ஆளும்கட்சியான ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி (CDU) 19 சதவிகித வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இத்தேர்தலின் முடிவுகள் சீனாவில் உள்ள ஏஞ்சலா மெர்ல்லிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஏஞ்சலா மெர்க்கல் பேசியபோது, ‘நான் தான் CDU கட்சியின் தலைவர், நான் தான் இந்நாட்டின் சான்சலர். எனவே, நடந்து முடிந்த தேர்தலில் எனது கட்சி தோல்வியை சந்தித்தற்கு நான் பொறுப்பேற்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

ஜேர்மனி நாட்டில் எண்ணில் அடங்காத அளவிற்கு புலம்பெயர்ந்தவர்களை புகலிடத்திற்காக அனுமதி அளித்ததால் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.