Header Ads



முஸ்லிம் சேவையில் புகா­ரி மௌலவியின் 'வர­லாற்றில் ஓர் ஏடு' கேட்­காமல், நான் உறங்­கு­வது கிடை­யாது - நீதிபதி கணே­ச­ராசா

-Metro-

நீதி­மன்­றத்­திற்கு வரும் அதி­க­மான இளை­ஞர்கள் பல்­க­லைக்­க­ழகம் மற்றும் மாண­வர்­க­ளாக இருப்­ப­தாக மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிவான் எம்.கணே­ச­ராசா தெரி­வித்தார்.

மட்­டக்­க­ளப்­பி­லி­ருந்து இயங்கிவரும் எழுத்­தாளர் ஊக்­கு­விப்பு மையம் வழங்கும் 7 ஆவது தமி­ழியல் விருது – 2015  நிகழ்வு நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை மாலை மட்­டக்­க­ளப்பு தேவ­நா­யகம் மண்­ட­பத்தில் பாலு­ம­கேந்­திரா தமி­ழியல் அரங்கில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இதனை தெரி­வித்தார். இங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர், எமது இள­மைக் கா­லங்­களில் புரட்­சி­க­ர­மான மற்றும் பல்­வே­று­பட்ட நூல்­களை வாசிக்கும் பழக்­கங்­களை கொண்­டி­ருந்தோம்.

ஆனால் இன்­றைய இளை­ஞர்கள் வாசிப்­ப­தற்கு கூட நேர­மில்­லாத நிலையில் மோட்டார் சைக்­கிள்­க­ளிலும் கைய­டக்க தொலை­பே­சி க­ளிலும் தங்­க­ளது காலங்­களை கழிக்­கின்­றனர்.

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மௌலவி புகா­ரியின் வர­லாற்றில் ஓர் ஏடு எனும் நிகழ்ச்­சியை நான் கேட்­காமல் உங்­கு­வது கிடை­யாது.  
எழுத்­தா­ளர்கள் வாழ்க்­கையில் சிறந்த அனு­ப­வங்­க­ளைப் ­பெற்­றி­ருப்­பார்கள். கண்­ண­தா­ச­னிடம் ஒருவர் நீர் மது,மாது, போதை­வஸ்­துக்கு அடி­மை­யான நீர் எவ்­வாறு அர்த்­த­முள்ள இந்­து­ம­தத்­தினை எழு­துவாய் என்று கேட்­டுள்ளார்.

அதற்கு அவர் நான் அத­னை­யெல்லாம் கடந்து வந்­ததன் கார­ண­மா­கவே இதனை எழுத முடிந்­துள்­ளது என கூறி­யுள்ளார்.

ஆகவே வாழ்க்­கையின் அனு­ப­வங்­களை கற்­ற­வர்கள் அதனை இலக்­கி­யங்கள் மூல­மாக வெளிப்­ப­டுத்­தும்­போது அது உணர்­வு­பூர்­வ­மாக மக்­களை ­துள்­ளது என கூறியுள்ளார்.

ஆகவே வாழ்க்கையின் அனுபவங் களை கற்றவர்கள் அதனை இலக்கி யங்கள் மூலமாக வெளிப்படுத்தும்போது அது உணர்வுபூர்வமாக மக்களை சென்றடையும்.

1 comment:

  1. கணேசராசா ஐயா!
    நீங்கள் இஸ்லாத்தைப் பற்றி மேலும் படிக்க விரும்பினால் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பினையும் வாங்கி படியுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.