Header Ads



இலங்கையில் பௌத்தத்திற்கு முன்னுரிமையில், ஒரு துளி மாற்றமும் இருக்கக் கூடாது - கர்தினால் மெல்கம் ரஞ்சித்

இலங்கையில் சிங்கள பௌத்தத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையில், ஒரு துளி மாற்றமும் இருக்கக் கூடாது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த மதம் தொடர்பில் அரசியல் சாசனத்தின் 9ம் திருத்தச் சட்டத்தில்  கை வைக்கக்கூடாது என  தெரிவித்த அவர், மதங்களற்ற நாடாக இலங்கை மாற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறியுள்ளார்.

சில மேற்குலக நாடுகளில் மதங்களற்ற நாடு என்னும் கொள்கை பின்பற்றப்படுகின்ற போதிலும் அவற்றில் மனித விழுமியங்கள் போற்றப்படுவதில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், 2000த்திற்கும் மேற்பட்ட ஆன்மீக பெறுமானங்களைக் கொண்ட பௌத்த கலாச்சார நாடான இலங்கையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் பௌத்த நாடு என்ற கொள்கையில் மாற்றம் செய்யாத ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கொள்கை வரவேற்கப்பட வேண்டியது என மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. He is trying to put icing on the cake.just to please the Buddhists, maybe the bodu Bala sena

    ReplyDelete
  2. Etayum tawaraha puriyum muttal.COMMANT panna mun konchan sindikkanum.fawsan hassan awargale.

    ReplyDelete

Powered by Blogger.