Header Ads



சவூதி மீது வழக்குதொடுக்க அமெரிக்க பாராளுமன்றம் ஆதரவு - ஒபாமா எதிர்ப்பு

அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழிசெய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கியுள்ளது.

இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராகரிக்கப்படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவுடனான உறவுகளை, இந்த மசோதா சட்டமானால் பாதிக்கும் என அதை எதிர்ப்பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவையான செனட் இதற்கு ஒப்புதல் வழங்கியது.
அதிபர் ஒபாமா இந்த மசோதாவை தான் நிராகரிக்கவுள்ளதை வலியுறுத்தியுள்ளார்.

இரட்டை கோபுரத் தாக்குதல்களில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியப் பிரஜைகள்.

4 comments:

  1. is that reason acceptable?

    ReplyDelete
  2. இதில் "இரட்டை கோபுரத் தாக்குதல்களில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியப் பிரஜைகள்." என்ற வார்த்தையின் பொருள் என்ன? அல் கய்தா தாக்கியது என்கிறீர்களா

    ReplyDelete
  3. இந்த தாக்குதல் முஸ்லீம் களால் செய்யப்பட்டதுக்கு எந்த ஆதாரமும் இது வரை இல்லை.பிபிசி யிலும் cnn யிலும் சொல்லுவதை தவிர ஆனால் இசுரேல் இனால் செய்யப்பட்டதட்கு நிறைய சான்றுகள் உள்ளன அவை இஸ்ரேல் இன் அடி வருடிகளான பிபிசி மற்றும் சcnn இனால் கட்சிதமாக மறைக்கப்படுகின்றன இப்படி இருக்க jffnamuslim முஸ்லிம்கள் செய்த மாதிரி கூறுவது வெறுக்கத்தக்கது.

    ReplyDelete
  4. then y usa don't attack like afghan?

    ReplyDelete

Powered by Blogger.