Header Ads



எழுக தமிழ், கிழக்கின் எழுச்சி, சிங்ஹலே பெயர்களில் இனவாத சக்திகள் தலைதூக்குகின்றன - ஹக்கீம்

வடக்கில் 'எழுக தமிழ்' என்றும்  கிழக்கில் 'கிழக்கின் எழுச்சி' என்றும்   தெற்கில் 'சிங்ஹ லே' என்றும்  வித­வி­த­மான  இன­வாத தீவி­ர­சக்­திகள்  தலை­தூக்க தொடங்­கி­யி­ருக்­கின்­றன என முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நீர்­வ­ழங்கல், வடி­கா­ல­மைப்பு மற்றும் நகர திட்­ட­மிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பாக வேண்­டு­மென்று முஸ்லிம் மக்­களை தூண்­டி­விடும் வகை­யி­லான விப­ரீ­தக்­க­ருத்­துக்­களை ஒரு சில தரப்­புக்கள் பரப்பி வரு­கின்­றன என்றும் அவர் தெரி­வித்­துள்ளார். 

கொழும்பு கிங்ஸ்­பெரி ஹோட்­டலில் நேற்­று­முன்­தினம் ஆரம்­ப­மான அரச தனியார் ஒத்­து­ழைப்பு தொடர்­பி­லான மாநாட்டில் கலந்­து­கொண்ட அமைச்சர் ஹக்­கீமை ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் பிரத்­தி­யே­க­மாக சந்­தித்து வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.  இதன்­போது அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில், 

அர­சி­ய­ல­மைப்பு நிர்­ண­ய­ச­பையின்  பிர­தான வழி­ந­டத்தல் குழு­வா­னது  இனப்­பி­ரச்­சினை தீர்வு தொடர்பில்  பேச்­சு­வார்த்­தை­களை   நடத்தி வரு­கி­றது.  குறிப்­பாக அதி­காரப் பகிர்வு குறித்து அத்­தி­யாயம் தொடர்பில் தற்­போது ஆராய்ந்­து­கொண்­டி­ருக்­கின்றோம். 

அதா­வது மாகா­ண­சபை முறை­மையில் ஒத்­தி­யங்கு  நிரலை அகற்­று­வது தொடர்பில்  ஆராய்ந்து வரு­கிறோம். மத்­திய அரசு, மற்றும் மாகாண அர­சாங்­கங்­களின் அதி­கா­ரங்­களை மட்டும் வைத்­தி­ருக்கும் இரண்டு நிரல்­களை வைத்­தி­ருப்­பது தொடர்பில்  ஆராய்ந்து வரு­கிறோம்.  என்னைப் பொறுத்­த­வ­ரையில் இதன்­போது  மாகாண ஆளு­நர்­களின்  அதி­கா­ரங்கள் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.

சிறு­பான்­மை­யி­னங்கள் என்ற அடிப்­ப­டையில் இது தொடர்பில்  நாங்கள் விசே­ட­மாக கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

முன்னர்  வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில்  தொடர்ச்­சி­யாக  இரா­ணுவ அதி­கா­ரி­களே ஆளு­நர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்டு வந்­தனர். ஆனால் அதே பழக்­க­தோ­ஷத்தில் தற்­போது கூட ஆளு­நர்­களின் அதி­கா­ரங்கள் அர்த்­த­முள்­ள­நி­யா­ய­பூர்­வ­மான அதி­காரப் பகிர்வை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. 

வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டு­கின்ற ஆளு­நர்­களின் செயற்­பா­டு­க­ளையும் வடக்கு கிழக்­கிற்கு வெளி­யி­லுள்ள மாகா­ணங்­க­ளுக்கு நிய­மிக்­கப்­படும் ஆளு­நர்­களின் செயற்­பா­டு­க­ளையும்  பார்க்கும் போது  பாரிய வித்­தி­யா­சங்­களை  எம்மால்  கண்­டு­கொள்ள முடியும்.  என்னைப் பொறுத்­த­வ­ரையில் இது­தொ­டர்பில் மிகவும் இறுக்­க­மான ஏற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்பில் உள்­ளீர்க்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இது தொடர்பில் நான் தீவி­ர­மான நிலைப்­பா­டுடன் இருக்­கின்றேன். 

இந்த நாட்டின் ஆட்சி முறைமை தொடர்­பா­கவும் சில முரண்­பா­டுகள் தொடர்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றன. ஒற்­றை­யாட்சி, சமஷ்டி குறித்த விட­யங்கள், மிகவும் உணர்­வு­பூர்­வ­மாக இருக்­கின்ற ஒரு நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

அந்த விட­யத்­திலும் சில கருத்து வேறு­பா­டுகள் இருக்­கின்­றன. கட்சித் தலை­வர்கள் மத்­தியில் இவ்­வா­றான கருத்­து­வே­று­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

இந்த இரண்டு விட­யங்­க­ளையும் கடந்து  பிரி­ப­டாத  ஒரு நாடு போன்ற பதங்­களைப் பாவித்து  சமஷ்டி ஒற்­றை­யாட்சி என்ற பதங்­களைப் பயன்­ப­டுத்­தாமல் கூடு­த­லான அதி­கா­ரப்­ப­கிர்வை உறு­திப்­ப­டுத்த முடியும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும். 

இருந்­தாலும் ஒற்­றை­யாட்சி என்ற பதத்தை நீக்க முடி­யாது என்ற  நிலைப்­பாட்டில் ஒரு சில தரப்­புக்கள் பிடி­வா­த­மாக இருக்­கின்­றன.  ஆனால் இந்த  பிரச்­சி­னையை மேலும் சர்ச்­சைக்­குள்­ளாக்கும் வகையில் சில சக்­திகள் உரு­வெ­டுத்­துள்­ளன.  வடக்கில் எழுக தமிழ் என்றும்  கிழக்கில் எழுச்சி என்றும்   தெற்­கிலோ சிங்­ஹலே என்றும்  வித­வி­த­மான  இன­வாத தீவி­ர­சக்­திகள்  தலை­தூக்க தொடங்­கி­யி­ருக்­கின்­றன. 

இவர்கள்  வெவ்­வேறு  துரு­வங்­க­ளாக செயற்­ப­டு­வ­தாக தென்­பட்­டாலும்,  ஒரு­வ­ருக்­கொ­ருவர் உத­வு­கின்ற பாணி­யி­லேயே  செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இறு­தியில் இவர்கள் எல்­லோரும் எதி­ரியின் நண்­பர்கள் என்ற அடிப்­ப­டையில் செயற்­ப­டு­வதைப் போலத்தான் நாங்கள் காண்­கின்றோம். குறிப்­பாக மிகவும் பக்­கு­வ­மா­கவும் சாணக்­கி­ய­மா­கவும் கையா­ளப்­ப­ட­வேண்­டிய விட­யங்­களை பகி­ரங்­க­மாக போட்­டு­டைத்து  குழப்­பி­வி­டு­கின்ற  நில­வ­ரங்­களை   ஏற்­ப­டுத்தக் கூடாது. 

அவ்­வாறு மிகவும் கவ­ன­மாக இந்த விட­யங்­களை நாங்கள் கையா­ள­வேண்­டி­யுள்­ளது.  இதே­போன்­றுதான்  வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்­பா­கவும் வேண்­டு­மென்று முஸ்லிம் மக்­களை தூண்­டி­விடும் வகை­யி­லான விப­ரீ­தக்­க­ருத்­துக்­களை ஒரு சில தரப்­புக்கள்  ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

அதா­வது அர­சியல் ரீதியில் வங்­கு­ரோத்துக்கு வந்­து­விட்ட  ஒரு­சிலர்  இந்த விட­யங்­களை  தற்­போது தூக்கிப் பிடித்­துக்­கொண்டு திரி­கின்­றார்கள்.

 ஒன்­பது மாகா­ணங்கள் குறித்த விட­யத்தில் பிர­தான வழி­ந­டத்தல் குழு­வி­லுள்ள கட்சித் தலை­வர்கள் மத்­தியில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. மாகா­ணங்கள் இணை­வது தொடர்­பான செயற்­பா­டுகள் அர­சி­ய­ல­மைப்பில் ஏற்­க­னவே நிபந்­த­னைக்­குட்­பட்­டவை.  எனவே பாரா­ளு­மன்­றத்தில் ஒரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­ப­டாமல் அவை சாத்­தி­ய­மா­காது. அதே­வேளை இரண்டு மாகா­ணங்­க­ளுக்­கி­டையில் ஒரு சில இணக்­கப்­பா­டு­க­ளோடு சில விட­யங்­களில் மட்டும் ஒத்­து­ழைப்­புடன்  செயற்­ப­டு­வது தொடர்­பிலும் பரி­சீ­லிக்­கலாம். 

ஆனால் வேண்­டு­மென்றே இந்த இணைவு சம்­பந்­த­மான விட­யங்­களை அத­னு­டைய சாத்­தி­யப்­பாடு தொடர்­பான தெளிவில்லாமல் ஒரு புரளியாக  சில தரப்பினர் சொந்த சுயலாப அரசியலுக்காக கையிலெடுத்துள்ளனர். 

முஸ்லிம் காங்கிரஸ் இந்த விடயத்தில் வேண்டுமென்றே மௌனத்துடன் இருப்பதாகவும் ரகசிய உடன்பாடுகளுக்கு வந்துள்ளதாகவும் ஒரு சிலர் பேசித் திரிகின்றனர். அதாவது முன்னைய ஆட்சியாளர்களின் எடுபிடிகளாக இருந்த ஒரு சில அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட்டு பின்கதவால் இந்த ஆட்சியுடன் இணைந்து கொண்டவர்கள், இன்னும் இணைந்துகொள்வதற்கு காத்துக்கொண்டிருப்பவர்கள், போன்றவர்களின் மேற்குறித்த விபரீத விளையாட்டு மிகவும் ஆபத்தானது.

இதில் நாங்கள் எல்லோரும்  கவனமாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார். 

-விடிவெள்ளி-

10 comments:

  1. அட பச்சோந்தி கிழக்கின் எழுச்சி இன வாதமா நீயே மற்றவர்களுக்கு சொல்லிக்கின்றாயா இதுவரை இல்லாத ஒரு கருத்தை நீயே ஏற்படுத்தி கொடுக்கின்றாயா.உனக்கு சரியான பாடம் கற்பிக்கத்தான் வேண்டும் காத்திரு

    ReplyDelete
  2. இதுதான் ஒரு சமுதாயத்தை கட்டிக் காப்பவனின் பண்பு.

    ReplyDelete
  3. RAUF HALEEM Wartayil oru tawarum illai.unmayey than solli irikkirar.kilakkukku mattuma eluchchi? Matra muslim makkalukku enna KAVICHCHIYA?

    ReplyDelete
  4. அஷ்ரபை அழித்து விட்டு அவருடைய கிரீடத்தை அணிந்து கொண்டு இதுவரைக்கும் முஸ்லிம்களுக்கு செய்து கிழிச்சது என்னவென்று கிழக்கு முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் முழு நாடும் அறிந்து விட்டது . போதும் உங்கள் பம்மாத்து பேச்சு . முஸ்லிம்களின் உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை தெற்கிலும் வடக்கிலும் உள்ள பேரினவாதிகளின் உரிமைக்காக பாவிக்கின்ற தன்மானங்கெட்ட தலைவன் ஹக்கீம் என்பதை மக்கள் தற்போது புறிந்து கொண்டார்கள் . இனி இறைவனின் தீர்ப்பு உங்களுக்கு நெருங்கி விட்டது தலைவா .

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. வடக்கும் கிழக்கும் இணைவதர்க்கு முஸ்லிம் காங்கிரஸ் சம்மதித்தால் அதுதான்மு ஸ்லிம் காங்ரசின் அஸ்தமணம்

    ReplyDelete
  7. கிழக்கின் எழுச்சி எந்த வகையில் ஒரு இனவாதக் கட்சி..???? தலையங்கத்தை பார்த்தால் ஒரு தமிழ் குழு, சிங்கள குழு, ஆகவே கிழக்கின் எழுச்சி முஸ்லீம் குழுவாகத்தான் இருக்கும். கிழக்கின் எழுச்சி குழு உங்களின் தலைமைத்துவத்துக்கு எதிராகவே செயட்படுகிறார்கள். நீங்கள் கூறியபடி கிழக்கின் எழுச்சி இனவாதக் குழு வாக இருந்தால், நீங்கள் எந்த இனம்? எந்த மதம்?
    இதிலேயே சொதப்பல், பிறகு எப்படி ஒரு இனத்தின் பிரச்சினையை உங்களால் முன்னெடுத்து செல்ல முடியும்.

    ReplyDelete
  8. கிழக்கின் எழுச்சி எந்த வகையில் ஒரு இனவாதக் கட்சி..???? தலையங்கத்தை பார்த்தால் ஒரு தமிழ் குழு, சிங்கள குழு, ஆகவே கிழக்கின் எழுச்சி முஸ்லீம் குழுவாகத்தான் இருக்கும். கிழக்கின் எழுச்சி குழு உங்களின் தலைமைத்துவத்துக்கு எதிராகவே செயட்படுகிறார்கள். நீங்கள் கூறியபடி கிழக்கின் எழுச்சி இனவாதக் குழு வாக இருந்தால், நீங்கள் எந்த இனம்? எந்த மதம்?
    இதிலேயே சொதப்பல், பிறகு எப்படி ஒரு இனத்தின் பிரச்சினையை உங்களால் முன்னெடுத்து செல்ல முடியும்.

    ReplyDelete
  9. அந்த பச்சோந்தியின் அநியாய அக்கிரமத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்குத்தான் இது உருவானது.அதை இந்த அக்கிரமக்காறன் வேறு விதமாக திரிபு படுத்தி மற்றவர்களுக்கு காட்டி கொடுக்க எத்தனிக்கின்றான் நயவஞ்ஞகனான எட்டப்பன் இந்த பொறிக்கி.இவனுக்கு முடிவு காலம் நெரிங்கி விட்டது.எனவே இவனை எங்கள் நேர்மையான தலைவனின் கட்சியை விட்டு தூக்கி எறிந்தால் எல்லா பிரச்சினையும் ஒரு முடிவுக்கு வரும் இன்ஷா அல்லாஹ்.அவனை மட்டும் அல்ல அவனோடு இணைந்து கொண்டு வயிற்றை வளர்த்துக் கொன்டு சமூகத்தைப் பற்றிய அக்கறை இல்லாமல் தாளம் போடும் ஒவ்வொருவரையும் முஸ்லிம் காங்கிரஸை விட்டும் தொலைக்க வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.