September 26, 2016

முஸ்லிம்கள் வதந்திகள் பரப்புவதை, தவிர்த்துக்கொள்ள வேண்டும் - பொலிஸ் பொறுப்­ப­தி­காரி

-ARA.Fareel-

 சிறிய பிரச்­சி­னை­களை முஸ்­லிம்கள் வாயால் வதந்­தி­களைப் பரப்பி பெரி­து­ப­டுத்திக் கொள்­வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கல்­ஹின்­னையில் நடை­பெற்­றது இரு குழுக்­க­ளுக்­கி­டை­யி­லான மோதலே அன்றி இனக்­க­ல­வ­ர­மல்ல. நடந்து முடிந்­த­வை­களை மறந்து முஸ்­லிம்கள் சிங்­க­ள­வர்­க­ளுடன் ஒற்­று­மை­யாக வாழ வேண்டும் என அங்­கும்­புர பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி பாலித ஜய­ரத்ன தெரி­வித்தார்.

 கடந்த 14 ஆம் திகதி இரவு கல்­ஹின்­னையில் இடம்­பெற்ற இரு தரப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல்­க­ளை­ய­டுத்து கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த 10 சந்­தேக நபர்கள் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டதைத் தொடர்ந்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை கல்­ஹின்னை பெரிய ஜும்ஆ பள்­ளி­வா­சலில் சமா­தான முயற்­சி­யொன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

 ஜும் ஆ தொழு­கை­யை­ய­டுத்து ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த இந்தக் கூட்­ட­டத்தில் அங்­கும்­புர பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி பாலித ஜய­ரத்ன கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது,

 ‘போதையில் இருந்­த­வர்­களால் உரு­வான சிகரட் பிரச்­சி­னையே கல­வ­ர­மொன்­றுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கி­றது. அதன் பின்பு முஸ்­லிம்கள் வதந்­தி­களைப் பரப்­பி­ய­த­னாலே இது பெரி­து­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.

 கல்­ஹின்­னையில் உரு­வான பிரச்­சி­னையை ஒரு இனக்­க­ல­வ­ர­மாக ஒரு­போதும்பார்க்க வேண்டாம். இப்­ப­குதி சிங்­க­ள­வர்கள் பல தசாப்த கால­மாக முஸ்­லிம்­களை சகோ­த­ரர்­க­ளாக ஏற்று ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள்.

 பொலி­ஸாரும் மத­கு­ரு­மார்­களும் ஊர் பிர­மு­கர்­களும் சேர்ந்து இப்­ப­கு­தியில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்கள். அதனால் இதன் பின்பு நடந்து முடிந்த சம்­பவம் குறித்து எதுவும் பேச வேண்டாம்.

 வாயால் பரப்­படும் வதந்­தி­களே பார­தூ­ர­மா­ன­வை­யாகும். அதனால் இது­வி­ட­யத்தில் முஸ்­லிம்கள் எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்க வேண்டும். அவ்­வாறு வதந்­திகள் பரப்­பு­வோ­ருக்கு எதி­ராக அவர்கள் எந்தச் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­றாலும் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

 தற்­போது சமா­தான முயற்சி வெற்­றி­ய­ளித்­துள்­ளது.

 தொடர்ந்தும் சமா­தா­னத்­துக்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும் (இன்று) திங்­கட்­கி­ழமை உட­கம சிங்­கள பாட­சா­லையில் சமா­தான முயற்­சிக்­கான கூட்டம் ஒன்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இதில் முஸ்லிம் தரப்பும் பெரும்­பான்­மை­யி­னரின் தரப்பும் கலந்து கொள்­ள­வுள்­ளன என்றார்.

 இதே­வேளை கல்­ஹின்னை ஜும்ஆ பெரிய பள்­ளி­வா­சலின் தலை­வரும் முன்னாள் கென்யா நாட்­டுக்­கான இலங்­கையின் உயர் ஸ்தானி­கரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சா­ள­ரு­மான சட்­டத்­த­ரணி எச்.எம். பாரூக் கல்­ஹின்னை மக்­களை அமைதி காக்கும் படியும் சமா­தான முயற்­சி­க­ளுக்குப் பங்­க­ளிப்­பினை வழங்கி நல்­லு­ற­வினைப் பேணும்­ப­டியும் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

 கல்­ஹின்னை கிராமம் அயல் கிரா­மங்­களின் பெரும்­பான்மை மக்­க­ளுடன் நல்­லு­ற­வினைப் பேணு­வ­தற்­கான சகல முயற்­சி­க­ளையும் கல்­ஹின்னை பெரிய பள்­ளி­வாசல் மேற்­கொண்­டுள்­ள­தா­கவும் கூறினார்.

 கல்­ஹின்னை ஜம்­இய்­யத்துல் உலமா சபைத் தலைவர் மௌலவி ஷக்கி மொஹமட் (ரப்பானி) முஸ்லிம்கள் தமது பண்பாடுகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும். கல்ஹின்னைப் பகுதியில் நிரந்தர சமாதானம் நிலவுவதற்கு பங்காளர்களாக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 கல்ஹின்னையிலுள்ள 3 ஜும்ஆ பள்ளிவாசல்களுக்கும் 11 தக்கியாக்களுக்கும் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

1 கருத்துரைகள்:

Regardless of race.. If any citizen of Sri Lanka involved in destruction to a property or a living being, He should be immediately taken into custody by POLICE. If police delays in operation or favours any group.. there should be mechanism in law to question them for their irresponsible behaviour too.

As stated by POLICE.. the main reason for this issue is ALCOHOL and CIGERET, both these items which are bad for the society by intellect and from the views of all the religion, Government should band ALCOHOL and CIGGERET especially in public places.

Not merely dump the mistake on Muslims solder,, while they have been in peace and not started any problem. Rather they are the affected people.

But as a contribution to peace in the country as given by Muslim throughout the history.. Let us stay coll for the good will of the country and its people.

Post a Comment