Header Ads



ஷீமோன் பெரெஸின் இறுதிச்சடங்கில் மஹமூத் அப்பாஸ் பங்கேற்பு - ஹமாஸ் கடும் கண்டனம்

இஸ்ரேலை நிறுவிய மூதாதையர்களில் கடைசியானவரான ஷீமோன் பெரெஸின் உடல், உலகத் தலைவர்கள் பங்கேற்ற இறுதிச் சடங்கிற்கு பின்னர், ஜெருசலேமிலுள்ள தேசிய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளோடு நியாயமான அமைதியான சகவாழ்வு காணும் இஸ்ரேல் என்ற நோக்கத்திற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் செலவிட்ட பெரெஸின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று இறுதிச் சடங்கில் அஞ்சலி உரை வழங்கிய போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலா போல இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்களை ஷீமோன் பெரஸ் தனக்கு நினைவூட்டுவதாக ஒபாமா கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டோரில் பாலத்தீன தலைவர் மஹமூத் அப்பாஸூம் ஒருவர்.

ஐக்கிய ராஜ்ய இளவரசர் சார்லஸ், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்

ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் துன்புறும் பாலத்தீனர்களுக்கு காட்டுகின்ற அவமரியாதை என்று கூறி ஹமாஸ் கடும்போக்கு இயக்கம் அப்பாஸ் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை கண்டித்திருக்கிறது.

4 comments:

  1. What a joke is this???
    He killed your people and you go and mourning...
    You are one of them

    ReplyDelete
  2. நெல்சன் மண்டேலா போல இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்களை ஷீமோன் பெரஸ் தனக்கு நினைவூட்டுவதாக ஒபாமா கூறினார்.//// எந்த அளவு இவருடைய அறிவு !!!!

    ReplyDelete
  3. Joke of the day "resonance peace " created by Israel. I believe he should start lkg again

    ReplyDelete
  4. ஹமாஸ் கடும்போக்கு இயக்கம் அல்ல தனது சொந்த நிலத்துக்காக போராடும் மணிதர்கள் அப்பாஸ்தான் அமெரிக்காவின் அடிவருடி

    ReplyDelete

Powered by Blogger.