Header Ads



தாஜூடீன் வழக்கு, இழுத்தடிக்கப்படுகிறது..!


இந்த விடயத்தின் அடிப்படையில்இ மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

பிரதான சட்டவைத்திய அதிகாரியின் அலுவலக ஊழியர்கள் வழங்கிய வாக்குமூலங்களுக்கு அமைய தாஜூடீனின் உடல் மாதிரிகள்இ மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு கொண்டு சென்றமைக்கான சாட்சியங்கள் இருப்பதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

பிரதான சட்ட வைத்திய அதிகாரியான பணியாற்றிய ஆனந்த சமரசேகரஇ தான் ஓய்வு பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இந்த உடல் மாதிரிகளை அப்புறப்படுத்தியுள்ளார். தாஜூடின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இதனை கூறியுள்ளனர்.

அன்றைய கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரியாக பணியாற்றிய விசேட சட்டவைத்திய நிபுணர் மருத்துவர் ஆனந்த சமரக்கோன்இ தாஜூடீனின் உடல் பகுதிகளின் மாதிரிகளை உரப் பைகளில் இட்டு மாலபே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எடுத்துச் சென்றதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்

வசீம் தாஜூடீன் சுமார் 15 முதல் 20 வரை உடல் பகுதி மாதிரிகள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் உடல் பகுதி மாதிரிகளுக்கு என்ன நடந்தது என்ற தகவலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

3 comments:

  1. The former JMO should be arrested. He is the biggest thief here.....

    ReplyDelete
  2. This so-called good governance is good-for-nothing at all. They drag this matter without any tangible action.

    ReplyDelete
  3. SAITM forensic department should be sealed.

    ReplyDelete

Powered by Blogger.