Header Ads



இஸ்லாமியர்களை கிண்டலடித்து கேலிச்சித்திரம் தீட்டிய, கிறிஸ்தவர் நீதிமன்ற வாசலில் சுட்டுக்கொலை

ஜோர்டான் நாட்டில் வெளியாகும் பிரபல பத்திரிகையில் இஸ்லாமியர்களை கிண்டலடித்து கேலி சித்திரம் தீட்டியதால் மதஅவமதிப்பு வழக்கில் ஆஜராகவந்த பிரபல எழுத்தாளர் இன்று -25- கோர்ட் வாசலில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர் நஹீத் ஹட்டார். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர் இஸ்லாமியர்களுக்கு எதிரான சித்தாந்தத்தை பின்பற்றிவரும் பிரபல எழுத்தாளராக ஜோர்டான் மக்களிடையே பிரபலமானவர்.

சொர்க்கலோகத்தில் தாடிவைத்த ஒருவர் பெண்களுடன், புகைபிடித்தபடி கட்டிலில் படுத்துகொண்டு மதுவும், முந்திரிபருப்பும் கொண்டுவரும்படி கடவுளுக்கு கட்டளையிடுவதுபோல் கருத்துப்படத்துடன் (கார்ட்டூன்) வெளியான ஒரு கட்டுரையை இவர் சமீபத்தில் எழுதி இருந்தார்.

இந்த கட்டுரை தங்களது மத உணர்வுகளை புண்படுத்துவதாக ஜோர்டான் நாட்டு முஸ்லிம்கள் உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த மாதம்  நஹீத் ஹட்டாரை கைதுசெய்த போலீசார், பிறமதத்தவரின் உணர்வுகளை காயப்படுத்தியதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

தலைநகர் அம்மானில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் ஆஜராவதற்காக  நஹீத் ஹட்டா இன்று கோர்ட்டுக்கு வந்தார். அப்போது கோர்ட் வாசலில் இருந்தவர்களில் ஒரு மர்மநபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.. மூன்று குண்டுகள் உடலை துளைக்க ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரை கொன்றதாக சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபரை கைது செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

15 comments:

  1. Journalism should have limitations.
    Media freedom haand it limitations
    This is a lesson to all media persons to open their mouth with sense ..

    ReplyDelete
  2. இவர் ISIS ஐ கேலி செய்ததால் தான் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ISIS இஸ்லாம் இல்லை என்றுதானே இதுவரை நாம் சொல்லி வருகின்றோம்?

    ReplyDelete
    Replies
    1. @Yasmin, நீங்கள் சொன்னா மட்டும் சரியா?. எது உண்மை?
      ஏன் எனில்:-
      (1) ISIS யில் Islamic என ஒரு சொல் உள்ளது.
      (2) ISIS தாங்கள் முஸ்ஸிம் என்று தான் சொல்லுகின்றனர்.
      (3) தலைவர், உறுப்பினர்களில் பெயர்கள் எல்லாம் முஸ்லிம் பெயர்கள்
      (4) Wikipedia வில் search செய்தால் இது Al-Qaeda வின் இணைப்பு என்று உள்ளது.

      குறிப்பு:- உண்மையை அறிய கேட்ட கேள்வி இது, கோப்படுத்துவதற்காக அல்ல. தயவுசெய்து என்னையும் ..............., நன்றி.

      Delete
    2. ISIS யை கேலி செய்ததால் கொலை செய்தால் அதை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தான் செய்திருக்க வேண்டும் .
      ஆனால் இன்று சில மனிதாபிமானமற்ற முட்டாள்கள் மாட்டு இறைச்சி சாப்பிட்ட குடும்பத்தையே கொளகிறாரகளே.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  3. இஸ்லாம் என்றாலே சகிப்புத்தன்மை இல்லாத பயங்கரவாதம்தான் என்பதை ஏற்றுக்கொண்ட Atteeq Abu அவர்களே, நீங்கள் உங்களது புகைப்படம், தகவல்களுடன் தைரியமாக வந்து நீங்கள் ஒரு சிறந்த முஸ்லிம் என்பதைக் காட்டலாமே?

    Yasmin Lafir, எவ்வளவுதான் தக்கியா பண்ணினாலும், உண்மை ஒரு கட்டத்தில் வெளி வரத்தானே செய்யும்!

    ReplyDelete
  4. Of course, he was killed by ISIS

    ReplyDelete
  5. ISIS தான் இஸ்லாம் என்று ஏற்றுக்கொண்டு தலையில் மண்ணை அள்ளிப் போடுங்க. மண்டைய மறைச்சாலும், கொண்டய மறைக்க மறக்கக் கூடாது

    ReplyDelete
  6. Ajan Antonyraj
    நீங்களும் ISISஇல் சேரலாமே!

    சேருவதற்கான நிபந்தனைகள்
    1.ஏதாவது ஒரு முஸ்லிம் பெயரை வைக்க வேண்டும்.(ஆனால் இஸ்லாத்தில் இணையத் தேவையில்லை.)
    2.தாடி வளர்க்க வேண்டும்.
    3.லாயிலாக இல்லல்லாஹ் என்று கூறி கொலை செய்ய வேண்டும்.

    கிடைக்கும் நன்மைகள்.
    1.அதிக சம்பளம் கிடைக்கும்.
    2.முஸ்லிம்களைக் கொல்ல முடியும்.
    3.முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க முடியும்.

    ReplyDelete
  7. ISIS என்றால் என்ன என்று, முஸ்லிமிற்கே தெரியாது.

    ReplyDelete
  8. இலங்கையில் இருந்து இல் இணைந்து மரணித்தவர்
    யூதரில்லை
    அமெரிக்கரில்லை
    பாரம்பரிய படித்த முஸ்லிம்
    ஏன் அவருக்கு இல் போராட்டத்தில் இணைவது ஜிகாத் இல்லை என்று புரியாமல் போனது. எஙகே தவறு நடந்தது ?
    இல்லாவிட்டால் எல்லாம் தெரிந்தும் நீங்கள் தக்கியா செய்து உண்மையை மறைக்க முயல்கிறீரா?

    ReplyDelete
    Replies
    1. Many people went to ISIS for employment.

      And not to fight with anyone.

      Delete
  9. ISIS means Isreal Security Inteligent Service.
    Of cause they are not Muslims. Israel is occupieng the land to settle Jews over Iraq,Syria. And the America and Israel need to give definition as they are Muslims because they needs to underestimate Islam.
    Imagine, How many Muslims killed by ISIS? They always killing Muslims over Syria,Iraq to occupie the lands and oil.
    Muslims are not terrorist
    Terrorist are not Muslims.

    ReplyDelete
  10. நண்பர் சிராஜ் அவர்களின் கருத்து:

    மத உணர்வுகளைக் கொச்சைப்படுத்துபவர்கள் அல்லது சீண்டிப் பார்ப்பவர்கள் கொல்லப் பட வேண்டுமென்றால் நாம் முஸ்லிம்கள் அதிகமானோர் என்றோ கொல்லப்படிருக்க வேண்டும்.
    ஏனென்றால் 'கல்லை வணங்கும் கூட்டம்'
    'ஜீஸஸ் இறைவனின் மகனில்லை என்பதற்கு 10 காரணங்கள்'
    'காபிர்கள் அசுத்தமானவர்கள், மக்காவிற்குள் அனுமதிக்க முடியாது'
    என்றெல்லாம் காலாகாலமாக அவ்ரகளின் மத நம்பிக்கையை கொச்சைப் படுத்திக் கொண்டிருப்பது நாமதானே.

    யூத கிறிஸ்தவர்கள் இஸ்லாத்தின் எதிரிகளென்று குர்ஆனில் கிறிப்பிடப் படுவதாக சாகிர் நாயக் போன்றவரகள் அவர்களிடமே சொல்லும்போது, Isis அவர்களை இஸ்லாத்தின் பெயரால் கொன்றுகொண்டிருக்கும்போது, அவர்கள் இஸ்லாத்தை மதிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது நியாயமா?

    ReplyDelete

Powered by Blogger.