September 11, 2016

ஹஜ்ஜை தவறவிட்டவர்களின் மனதை உருக்கும் வலிகள்..!!!

இம்முறை (2016) ஹஜ் கடமை தவறிப்போன மக்களில் சிலரை 'விடிவெள்ளி' தொடர்புகொண்டது. அவர்கள் உங்களுடன் பேசுகிறார்கள்.

நம்பியிருந்த எனக்கு ஏமாற்றமே கிடைத்தது
பி.எம்.எம்.மன்சூர் – உடத்தலவின்னை

‘இலங்­கைக்கு கடைசி நேரத்தில் மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்கும் எனக்கும் புனித ஹஜ் கட­மையை நிறை­வேற்றிக் கொள்­ளலாம் என்ற நம்­பிக்­கையில் இருந்த எனக்கு ஏமாற்­றமே கிடைத்­தது. புனித கஃபாவின் காட்­சி­களே எனது மனக்கண் முன் நிழ­லா­டுகி­றது’ என்­கிறார் பி.எம்.எம்.மன்சூர். 

மன்சூர் உடத்­த­ல­வின்னை மடி­கேயைச் சேர்ந்­தவர். அவ­ரது வயது 67. மன்சூர் ஹஜ் பயணம் தவ­றி­விட்­டதை எம்­முடன் இவ்­வாறு பகிர்ந்து கொண்டார். நான் திணைக்­க­ளத்தில் ஹஜ் பய­ணத்­துக்­காக பதிவு செய்து கொண்­டி­ருக்­கிறேன். கொழும்­பி­லுள்ள ஹஜ் முகவர் நிலை­ய­மொன்­றினைத் தொடர்பு கொண்டேன். இம்­முறை இது­வரை 2240 கோட்­டாவே கிடைத்­துள்­ள­தா­கவும் அந்தக் கோட்டா பூர்த்­தி­யா­கி­விட்­ட­தா­கவும் முகவர் நிலைய உரி­மை­யாளர் கூறினார். 

எப்­ப­டி­யா­வது இந்த வருட ஹஜ் கடமை நிறை­வேற்­றி­யாக வேண்டும். அடுத்த வருடம் வரை காத்­தி­ருக்க முடி­யாது. அடுத்த வருடம் நான் இருப்­பேனோ இல்­லையோ எல்­லாம்­வல்ல அல்­லாஹ்வின் நாட்டம் என்றேன். முகவர் நிலைய உரி­மை­யாளர் எனக்கு ஆறுதல் வழங்­கினார்.

கடைசி நேரத்தில் மேல­திக ஹஜ் கோட்டா பெற்றுக்கொள்ள அமைச்சர் ஹலீமும் முயற்சி செய்­கிறார். உங்­க­ளுக்கு ஹஜ்­ஜுக்கு போகலாம் என்று அவர் எனது பாஸ்­போர்ட்டை பெற்றுக் கொண்டார். ஆனால் என்­னி­ட­மி­ருந்து முற்­பணம் எதுவும் பெற்றுக் கொள்­ள­வில்லை.  பாஸ்­போர்ட்டைக் கொடுத்­து­விட்டு எதிர்­பார்த்­தி­ருந்தேன். உற­வி­னர்கள் எல்­லோ­ரி­டமும் பய­ணமும் சொல்­லி­விட்டேன். எல்லா ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்தேன்.

ஆனால் இலங்­கைக்கு மேல­திக கோட்டா கிடைக்­காது என்ற அமைச்சர் ஹலீமின் அதி­ரடி தக­வலை பத்­தி­ரி­கையில் படித்­த­போது என்னால் தாங்கிக் கொள்­ளவே முடி­யா­மற்­போ­னது.

ஒவ்­வொரு நாளும் கனவில் கஃபாவைக் கண்டு கொண்­டி­ருந்த எனக்கு இது பேரி­டி­யாக இருந்­தது. வியர்த்துக் கொட்­டி­யது.  ஊரில் எல்­லோரும் என்­னிடம் ஏன் ஹஜ்­ஜுக்குப் போக­வில்லை என்று கேட்டு என்னை வதைக்­கி­றார்கள். சம்­ப­வத்தை மறக்க முயன்­றாலும் அவர்­களின் கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளிப்­பதால் மறக்க முடி­யா­ம­லி­ருக்­கி­றது.

இவ்­வ­ருடம் ஹஜ் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்தும் பயணிக்க முடி­யாமற் போன­வர்­க­ளுக்கு அடுத்த வருடம் முதலிடம் வழங்குவதாக அமைச்சர் ஹலீம் உறுதியளித்திருக்கிறார். அந்த எதிர்பார்ப்பில் இருக்கிறேன். அல்லாஹ் எனக்கு ஹஜ் பாக்கியத்தைத் தரவேண்டும் என்றார்.  

‘ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்­களின் ஹஜ்­க­னவு இவ்­வ­ருடம் கானல் நீரா­கி­விட்­டது. ஹஜ் குழு மேல­திக ஹஜ் கோட்­டா­வுக்­கான முயற்­சியை இறுதி நேரத்தில் முன்­னெ­டுத்­த­மையே மேல­திக கோட்டா கிடைக்­கா­மைக்கு காரணம். 

மேல­தி­க­மாக ஹஜ் கோட்டா கிடைக்­க­வுள்­ளது. இறுதி நேரத்தில் கிடைக்கும் என நம்­பிக்­கை­யூட்­டப்­பட்­டதால் நாங்கள் ஏமாந்து போய்­விட்டோம் என்­கிறார். கண்டி மாவட்டம் மட­வளை பஸாரைச் சேர்ந்த எச்.எம்.ஹில்மி (50 வயது)

ஹில்­மியைத் தொடர்பு கொண்டு அவ­ரது ஹஜ் பய­ணத்­துக்கு என்­ன­வா­யிற்று என்று வின­விய போது அவரால் உட­ன­டி­யாக பதி­ல­ளிக்க முடி­யா­மற்­போ­னது. அந்­த­ள­வுக்கு அவ­ருக்குள் துயரம் நிறைந்­தி­ருந்­தது. அவர் தனது ஆதங்­கத்தை விடி­வெள்­ளி­யிடம் இவ்­வாறு வெளி­யிட்டார். 

‘நானும் எனது மனை­வியும் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்தோம். எனது மனைவி அர­சாங்க பாட­சா­லையின் ஆசி­ரியை ஹஜ் பய­ணத்­துக்­காக வேண்டி மனைவியின் விடு­மு­றைக்­கான அனு­ம­தியும் பெற்­றி­ருந்தார். 

முன்­னைய வரு­டங்­களை விட தற்­போது இலங்­கை­யி­லி­ருந்து அதி­க­மானோர் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற தயா­ரா­கி­றார்கள். ஹஜ் கோட்டா சவூ­தி­யினால் வரை­ய­றுக்­கப்­பட்டு வழங்­கப்­ப­டு­கி­றது என்­பது உண்மை. ஆனால் ஹஜ் ஏற்­பா­டு­களைக் கவ­னிப்­ப­தற்­காக நிய­மிக்­கப்­படும் ஹஜ் குழு இலங்­கைக்கு அதி­க­மான கோட்­டாவைப் பெற்றுக் கொள்­வ­தற்கு முயற்­சிக்க வேண்டும். 

பொறுப்­பான அமைச்சர் சவூ­திக்கு பல விஜ­யங்­களை மேற்­கொண்டு அய­ராது பாடு­பட்­டி­ருக்க வேண்டும்.

வெறு­மனே ஹஜ் அமைச்­ச­ருக்கும் சவூதி மன்­ன­ருக்கும் கடிதம் எழுதி விட்டு எதிர்­பார்த்­தி­ருப்­பதால் எதுவும் ஈடே­றி­விடப் போவ­தில்லை. இதுதான் இந்த வருட ஹஜ்­ஜுக்கு நேர்ந்த அனர்த்தம் என்று கூட கூறலாம். 

ஹஜ் குழு ஹஜ் முக­வர்­களை நிய­மிப்­ப­திலும் கோட்­டாவைப் பகிர்­வ­திலும் நீதி­மன்றப் படி­களில் ஏறி இறங்­கி­ய­தி­லுமே காலத்தைக் கடத்­தி­யதை நாம் கண்டோம்.

கண்டி மாவட்­டத்தில் ஏரா­ள­மான ஆசி­ரிய ஆசி­ரி­யைகள் ஹஜ் எதிர்­பார்ப்­புடன் விடு­மு­றை­க­ளையும் பெற்­றுக்­கொண்டு காத்­தி­ருந்து ஏமாந்து போய் விட்­டார்கள். இனி வரும் காலங்­களில் இவ்­வா­றான நிலைமை ஏற்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கு ஹஜ்­குழு உறு­தி­ய­ளிக்க வேண்டும். 

சவூதி அர­சினால் வழங்­கப்­படும் பேஸா விசாக்கள் வச­தி­யற்­ற­வர்­க­ளுக்கே போய்ச் சேர வேண்டும். அவை அர­சி­யல்­வா­தி­க­ளுக்குப் பகிர்ந்தளிக்கப்படக் கூடாது. 

எனதும் மனைவியினதும் எம்மைப் போன்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் ஹஜ் கனவுகள் அடுத்த வருடம் நனவாகுமா? அரச ஹஜ் குழுவும் அமைச்சும் என்ன பதில் தரப்போகிறது பொறுத்திருக்கிறோம்.  

இறுதி நேரம் கை நழுவி விட்டது எல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்
எம்.எஸ்.எம்.நஸார் – கம்­ப­ளை

‘நானும் மனை­வியும் எனது தாயாரும் இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்ற எல்லா ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்தோம் என்­றாலும் கடைசி நேரத்தில் கைகூ­டாமற் போயி­விட்­டது.

எல்லாம் அல்­லாஹ்வின் நாட்டம். ஹயாத்­துடன் இருந்தால் அடுத்­த­வ­ருடம் எங்கள் நாட்டம் நிறை­வேறும் என்ற எதிர்­பார்ப்பில் மனதைத் தேற்றிக் கொண்டேன்’ என்­கிறார் கம்­ப­ளையைச் சேர்ந்த 50 வய­தான கடற்­படை கப்டன் எம்.எஸ்.எம்.நஸார். 

தனதும் மனை­வி­யி­னதும் தாயா­ரி­னதும் ஹஜ்­க­டமை தவ­றிப்­போ­னமை தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில் ‘எங்­க­ளது பாஸ்­போர்ட்­களை ஹஜ் முகவர் ஒரு­வ­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்தோம்.

இவ்­வ­ருடம் மேல­திக கோட்­டா­கி­டைக்க விருப்­ப­தா­கவும் அந்தக் கோட்­டாவில் பயண ஏற்­பா­டு­களைச் செய்­வ­தா­கவும் முகவர் என்­னிடம் கூறினார். எங்­க­ளிடம் முற்­பணம் எதுவும் அவர் பெற்றுக் கொள்­ள­வில்லை. 

நாங்கள் ஹஜ்  கட­மையை நிறை­வேற்றச் செல்­வ­தற்­கான சகல ஏற்­பா­டு­க­ளையும் செய்­தி­ருந்தோம். உற­வி­னர்­க­ளுக்கும் நண்­பர்­க­ளுக்கும் கூறி­யி­ருந்தோம். ஆனால் இறு­தியில் ஏமாற்­றமே கிடைத்­தது. 

மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­க­வில்லை எனவும் அதனால் இவ்­வ­ருடம் ஹஜ்­ஜுக்கு அனுப்­ப­மு­டி­யா­தெ­னவும் ஏஜன்ட் கூறினார். அமைச்­சர்கள் ஹலீம், பௌஸி ஆகியோர் மேல­திக கோட்டா பெற்றுக் கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மூலம் சவூதி மன்­ன­ரி­டமும் கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது.

என்றாலும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தன எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடந்து விட்டது என்றார்.  விடிவெள்ளி  ARA.Fareel

0 கருத்துரைகள்:

Post a Comment