September 21, 2016

நீதிகேட்டு ஜெனீவா செல்கிறார்கள், யாழ்ப்பாண முஸ்லிம்கள்


(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

சுவிஸ் - ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள் செல்லவுள்ளனனர்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் சர்வதேச அமைப்பு, இதனை ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குச் செல்லும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் அங்கு ஐ.நா. அதிகாரிகள், சர்வதேசப் பிரதிநிதிகள், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் பிரதிநிதிகள், அரபுமுஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்திக்கவுள்ளனர்.

இதற்கான அனுமதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமிருந்து கிடைந்துள்ளது. இதற்காக ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தனி அறை ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் சார்பில் சுமார் 30 பேரடங்கிய குழுவொன்று இதில் ஈடுபடவுள்ளது.

தமது பூர்வீக தாயகத்தில் மீள்குடியேற்றம், அதற்காக தமக்குள்ள தார்மீக உரிமை, மீள்குடியேற்றத்தில் உள்ள தடைகள், தடை ஏற்படுத்தும் சக்திகள் உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களை யாழப்பாண முஸ்லிம் பிரதிநிதிகள் இதன்போது தெளிவுபடுத்துவார்கள்.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் மொழியாற்றல்மிக்க உயர் கல்விகற்கும் பிள்ளைகளும் இதில் பங்குகொள்ளவுள்ளனர்.

இதற்காக லண்டன், பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, சுவீடன், இத்தாலி மற்றும் சுவிஸ் நாடுகளில் வாழ்கின்ற யாழ்ப்பாண முஸ்லிம்களின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் இந்த நிகழ்வில் யாழப்பாண முஸ்லிம்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு, அவர்களின் தற்போதை நிலவரம் அடங்கிய  வீடியோ ஒன்றும் காண்பிக்கப்படவுள்ளதுடன், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ஹுசைனிடம் மகஜரொன்றும் கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

11 கருத்துரைகள்:

Masha allah very useful and very good job .

நீங்கள் தானே சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் UN என்பது அமேரிக்கா/மேற்குலகின் அரிவருடி, நண்பத்தகாதவர்கள் என்றெல்லாம்.

ஏன் இப்போது தீடீரென அமேரிகாவிடம் சரண்டைய காரணம் என்னவோ?

Dont get panic Mr. Attathoni wait n see.

இது ஒரு ஆக்கபூர்வமான முயட்சியாக இன்ஷா அல்லாஹ் அமையும்

இவய்ங்க இப்புடித்தான் 10அமைச்சர் அரசாங்கத்துல இருக்காங்க மீள் குடியேற்ற முடியேல்லயாம்.கேட்டா எந்த அஅதிகாரமும் இல்லாம பொம்மை மாரி இருக்குற விக்கியை குத்தம் சொல்லுதுகள்.சரி விக்கி முதலமைச்சர்ஆனது 2013ல் யுத்தம் முடிஞ்சது 2009ல இடையில 5வருசம் மகிந்த வொட இருந்து என்ன பன்னீங்க.

அஐன் அந்தோனிராஜ் ஒருவிடயத்தை விளங்கிக் கொள்ளுங்கள் யாரையும் யாரும் யாருட்டையும் அடகுவைக்கவில்லை எங்களுக்கு அந்த தேவையுமில்லை.

90 ம் ஆண்டு வெளியேற்றத்தின் பிரகு இன்று வரையும் முஸ்லிம்களுடைய பிரச்சனைகள்
மீள் குடியேற்றம் நஸ்ட ஈடுகள் சம்மந்தமாக இதுவரைக்கும் வடமாகான சபை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது அந்தோனிராஜ் உங்கள் நிலம் பரிபோனால் ஜயோ அம்மா முஸ்லிம்களின்
நிலம் பறிபோனால் கீயா மய்யாவா?

ஆக்கபூர்வமாக முயற்சி. இந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் பாராட்டுக்ககுறியவர்கள்.ஆரம்பிக்கும் முயற்சியை நடுவில் கைவிட்டுவிடாது தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வது தான் மிக முக்கியம். ஆனால் துரதிருஷ்டவசமாக உங்கள் முயற்சிக்கு பாராளுமன்றத்தில் முஸ்லிம் பெயரால் பதவிவகிப்பவர்கள் பெரும் தடையாக இருந்து இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள். அதற்கு ஆக்கபூர்வமான ஒரு செயற்திட்டத்தை அமல்படுத்தி முன்னே செல்லுங்கள். நிச்சியம் அல்லாஹ்தஆலா உங்களோடு இருப்பான். மார்க்கத்தையும் குறிப்பாக அல்லாஹ்விடம் பிரார்த்தனையையும் கைவிடாமல் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் முயற்சிக்கு எங்கள் பிரார்த்தனைகள்.

அன்டனி..குமார் இரண்டும் வழியில் கிடக்கும் கல்.முள் போல தூக்கி ஓரமாக போட்டு விட்டு போய் போய்க்கொண்டே இருக்க வேண்டிய தான் ..

எந்த ராணுவத்தைக் கொண்டு பயங்கரவாதிகள் அடக்கப்பட்டு மக்களுக்கு அமைதியான வாழ்வு அளிக்கப்பட்டதோ அதே ராணுவத்தைக் கொண்டு, அநீதமாக வெளியேற்றப்பட்டவர்களை மீள் குடியேற்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது.

Post a Comment