Header Ads



இணையத்தளங்களின் பாதுகாப்பு - கவனம் செலுத்துமாறு அறுவுறுத்தல்

இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு கணனி அவசர கண்காணிப்பு பிரிவு அறுவுறுத்தல் விடுத்துள்ளது.

இதன் பொருட்டு நான்கு காரணிகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்த பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இணையத்தள சேர்வர்களுக்கான இயங்குதள மென்பொருட்களை புதுப்பித்தல் மற்றும் இணையத்தளங்களை உருவாக்குபவர் எனில், அதற்குரிய மென்பொருட்களை புதுப்பித்தல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமது இணையத்தளங்களில் வெளிநபர்கள் ஊடுருவுவதை தடுப்பதற்காக வலுவான பாதுகாப்பு மென்பொருட்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கணனி அவசர கண்காணிப்பு பிரிவின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தத்தமது கணனிகளில் பயன்படுத்தும் கடவுச் சொற்களையும் ஏனையவர்களுக்கு இலகுவில் அறிந்துகொள்ள முடியாதவாறு வலுவான முறையில் மாற்றியமைப்பது சிறந்தது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.