September 06, 2016

கபாவை எவ்வளவுநேரம் பார்த்தாலும், சலிக்காமலிருப்பது ஏன்..?

அல்லாஹ்வின் வீட்டுக்கு அடியார்களை அனுமதிப்பது மிகப்பெரும் பாக்கியம். நான் யாரை விரும்பவில்லையோ அவர்களை வீட்டின் உள்ளே அனுமதிப்பதில்லை. வெறுப்புமிக்கவரை யாரும் வீட்டில் விரும்புவதில்லை. நமக்கு நெருக்கமானவரை நாம் வரவழைக்கலாம்

நீங்கள் என் வீட்டுக்கு வரக்கூடாதா. இது புகார் அல்ல. குறை கூறவில்லை. மாறாக, அன்பு மிகுதியால் அழைக்கிறோம்.

சூரா ஆல இம்ரான் அத்தியாயம் 3, வசனம் 97 வலில்லாஹி அலன்னாஸி ஹிஜ்ஜுல பைத் மனிதர்கள் அல்லாஹ்வுக்கு செலுத்தவேண்டியது. எனக்கு உரிமையில்லையா. நீங்கள் என்நேசர். என் வீட்டுக்கு வருகை தாருங்கள். என்னுடன் தங்கியிருப்பீர். வீட்டுக்கு வருவதை அல்லாஹ் விரும்புகிறான்.

யாரை இபாதத் வழிபாடு செய்கிறீர்களோ அவனுடைய வீட்டுக்கு செல்வது கடமையாகும். மனிஸ்ததாஅ இலய்ஹி சபீலா தகுதியுள்ளவர் மீது கடமை. இஸ்ததாத். பலவீனர், ஏழை, பாமரர், வறுமையாளர், தேவையுள்ளோர் மீது நிர்ப்பந்தமல்ல. யாருக்கு வலிமையுண்டோ அவருக்கு கடமை. உடல் சவுகரியம், பணம் இருந்தால் கடமை. உண்மையென்னவென்றால் யாருக்கும் தகுதியில்லை. ஹயாத், இல்ம், இராதா, குத்ரத், பார்வை, செவிப்புலன், பேச்சு ஆகிய ஏழு பண்புகள் அல்லாஹ் வழங்கியவை. நமக்கு உரிமையில்லை.

படுத்த நிலையில் நோயாளிக்கு கடமையில்லை. சக்தியற்றவர். இறைவனின் ஆற்றல் கிடைக்கவில்லையென்றால் தூக்கம், தொழுகை, நோன்பு, நடமாடவே இயலாது. மரணமடைவதற்கும் இறையாற்றல் தேவை. மரணமடைந்த பின்பும் இறையாற்றல் தேவை. சூரா ஹதீத் அத்தியாயம் 57, வசனம் 4 வஹ§வ ம அகும் அய்னமாகுன்தும் நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். பூமிக்கு மேலேயிருந்தாலும், பாதாளத்திலிருந்தாலும் உங்களுடனிருக்கிறான்.

கபுர் சென்றதும் வானவர் கேட்கிறார் மன் ரப்புக. உமது ரப் யார். பூ உலகில் வாழும் போது மட்டுமல்ல மண்ணறையிலும் அல்லாஹ் ரப். இங்கே யார் ரப். பதில் கூறினால் நீர் வெற்றியாளர். மன் நபிய்யுக யார் உமது நபி. அங்கேயும் இங்கேயும் நபி உம்முடன் இருக்கிறார். எல்லா உலகங்கள் ஆலம்களில் உங்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.

ஆலமே அர்வாஹ், பர்சக், ஷஹாதத் அனைத்து உலகில் அல்லாஹ் உம்முடன் இருக்கிறான். ஹஜ் பயணத்துக்கு புறப்படுவோர் நினைவில் வையுங்கள். அல்லாஹ் வீட்டுக்கு அழைக்கிறான். அதே அல்லாஹ் உங்களுடன் பயணத்திலும் இருக்கிறான். விமான நிலையத்தில், விமானத்திலும் உங்களுடன் இருக்கிறான்.

வஹ§வ பிகுல்லி ஷையின் முஹ§த் அல்லாஹ் உங்களை சூழ்ந்துள்ளான். அல்லாஹ்வை விட்டு பிரியமுடியாது. பிரிந்துவிட்டால் வெளியேறிவிட்டால் பொருள் இருக்காது. விமானம், விமான பயணி இருவருமே அல்லாஹ்வின் ஆதிக்கத்தில் உள்ளனர். அது மட்டுமல்ல. ஒவ்வொரு வஸ்துவிலும் அல்லாஹ் உடன் இருக்கிறான்.

ஹிஜ், ஹஜ் என்றால் நோக்கம், இராதா. விரும்புவது உமது பணி. செயல்படுத்துவது இறைவனின் வேலையாகும். உங்களை பற்றி யோசிக்காதீர். நான் ஹஜ் செய்கிறேன். சிறந்தவனாகி விட்டேன். பிறரை குறை கூறாதீர். ஹஜ் செல்வதற்கு முன் சிறிய பிர்அவ்ன். ஹஜ் முடிந்ததும் முழு பிர்அவ்ன் ஆகிவிடுகிறார்கள். பிர்அவ்னிய்யத் ஆணவம் மெல்ல மெல்ல கூடி அதிகரித்து முழுமையாகிவிடுகிறது.

உமது திறமை, ஆற்றல், பண வலிமை கொண்டு ஹஜ் செல்ல முடியாது. அல்லாஹ் உங்களை செயல்பட தூண்டுகிறான். பூமியில் உள்ள செல்வந்தரின் தாழ்வாரத்தில் விரும்பாமலே நாம் செல்ல முடியும். அல்லாஹ் உண்மையான கொடையாளி. அல்லாஹ்வின் விருப்பமின்றி அவன் வீட்டுக்கு நாம் போக முடியாது. நான் ஹஜ் செய்கிறேன். சிந்தனை வரக்கூடாது. அல்லாஹ் தனது ஜாத் வெளிப்படை அந்த நான்கு சுவர்களில் போடுகிறான். இறைவனின் உள்ளமை பார்க்க விரும்பினால் கஃபாவை பார்க்கலாம். உலகம் முழுவதும் அல்லாஹ்வின் வெளிப்பாடு காணக்கிடைக்கிறது. என்றாலும், விசேஷ வெளிப்பாடு கஃபா. கஃபாவை எவ்வளவு நேரம் பார்த்தாலும், போரடிக்காது. சலிக்காது.

கஃபாவை பார்ப்பவர்கள் உடன் வந்தோரை மறந்து விடுவர். தாய் பிள்ளையை மறந்து விடுவர். கணவன் மனைவியை மறந்துவிடுவார். கஃபா ஒரு வெளிப்பாடு. ஆனால் ஆகிரத்தில் அல்லாஹ் முழுமையாக எதிரில் இருப்பான். யார் நினைவும் வராது. வெளிப்படையாக, பகிரங்கமாக எதிரில் வருவான். சூரா ஹஜ் அத்தியாயம் 22, வசனம் 2 யவ்ம தரவ்னஹா தஜ்ஹலூ குல்லு மர்லியதின் அம்மா அர்ள அத் பால்குடிதரும் தாய் மழலையை மறந்துவிடுவார். கர்ப்பிணிக்கு கர்ப்பம் கலைந்துவிடும். தன்னை, நிலை மறந்து நிற்பர். அல்லாஹ் காட்சி தரும்போது வேறு யாருடைய நினைவும் வராது. சகோதரன், தாய், தந்தை மனைவி, பிள்ளை, சுற்றத்தார், நண்பர், அனைவரிடமிருந்தும் விலகி ஓடுவார்கள்.

கஃபாவுக்கு போகிற பயணி வேறு எதை குறித்தும் சிந்திக்க மாட்டார்கள். யாரேனும் ஒரு உறவினர் நோய்வாய்ப்பட்டுள்ளார். சக்ராத் மரண படுக்கையில் உள்ளார். யாரையேனும் போலிஸ் பிடித்துக் கொண்டு போகிறது. அதனை பற்றி பயணிக்கு கவலையில்லை. நினைவு வராது. கஃபாவில் இறைவனை தரிசிப்பதே அவருடைய நோக்கம். சிந்தனை சிதறாது. கஃபா கறுமை நிறம். அல்லாஹ்வின் தஜல்லியை பார்த்தவர்கள் கருமையை உணர்கின்றனர். பாலூட்டும் தாய் குழந்தை பாலை மறுத்தால் வேதனைப்படுவார். வலி உணர்வார்.

மன் ஹஜ்ஜ வலம் யஜுர்னி ஃபகத் ஜபானி நபிகளார் கூறுகிறார்கள் யார் ஹஜ் செய்து என்னை பார்க்கவில்லையோ, அவர் எனக்கு தீங்கிழைத்தவர். நபிகளாரின் பணி கொடுப்பதாகும். ரஹ்மத்லில் ஆலமீன். எடுப்பவரல்ல. ஹஜ் செய்பவர்கள் நபிகளாரின் பணி, அசலை உணர வேண்டும். தவாபு, அரபாத் தங்கியிருந்தல் ஹஜ் கடமை. விளக்க வார்த்தையில்லை.

- செய்யது முஹம்மது ரஜாவுல்ஹக் அலிமி ஷாஹ் ஆமிரி

0 கருத்துரைகள்:

Post a Comment