Header Ads



பாகிஸ்தான் மீது, மோடி சரமாரியாக தாக்குதல்

தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்து வரும் பாகிஸ்தானை இந்த உலகிலிருந்து தனிமைப்படுத்தாமல் விடமாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  

பாஜக தேசியக் குழுவின் மூன்று நாள் கூட்டம், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், பாஜக தேசியக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கோழிக்கோடு வந்த பிரதமர் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: கேரளாவை நினைத்தாலே அது கடவுளின் நாடு என்பதுதான் நினைவுக்கு வரும். வளைகுடா நாடுகளுக்கு சென்று பணிபுரிபவர்களில் கேரள மக்களே அதிகம். வளைகுடா நாடுகளில் பணியாற்றும் கேரள மக்களுக்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்கும்.

ஏழை மற்றும் அடித்தட்டு மக்களின் உயர்வில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் முதன்மை கட்சியாக பாஜக திகழ்கிறது.

கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. நான் தேர்தல் அரசியலில் நுழையும் முன் பாஜகவில் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். கட்சி தொண்டர்களின் கடின உழைப்பும் தியாகமும் ஒருபோதும் வீண் போகாது என்றார்.

ஆசியாவில் உள்ள ஒரு நாடு தீவிரவாதத்தினை உலகமெங்கும் பரப்பி வருகிறது. அந்த நாடு மக்களை கொல்வதையும், தீவிரவாதத்தையும் விரும்பி செய்து வருகிறது. எங்கெல்லாம் தீவிரவாதத் தாக்குதல் குறித்த செய்திகள் எழுகின்றவோ, அங்கெல்லாம் பாதிக்கப்பட்ட நாடுகள் ஒரே ஒரு நாட்டையே சுட்டிக்காட்டுகின்றன. தீவிரவாதத்திற்கு இந்தியா ஒருபொழுதும் தலை வணங்காது. அதனை தோற்கடிக்க இந்தியா தொடர்ந்து போராடும். தீவிரவாதிகள் இதனை தெளிவாக கேட்டுக்கொள்ள வேண்டும். உரி தாக்குதலை இந்தியா ஒருபொழுதும் மறந்து விடாது. தீவிரவாதிகளின் செயல்பாடுகளை அண்டை நாட்டின் ஆட்சியாளர்கள் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். மனித குலத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய எதிரியான தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

இந்தியா மீது தீவிரவாத நாட்டிலிருந்து வந்த தற்கொலைப் படை தீவிரவாதிகள் 17 முறை தாக்குதலுக்கு முயன்றனர். அதனை நமது வீரர்கள் பதிலடி தந்து முறியடித்துள்ளனர். நமது 18 வீரர்களின் தியாகம் வீண் போகாது. ஆசியாவின் வளர்ச்சிக்குத் தடையாக தீவிரவாதத்தை மட்டுமே கொள்கையாகக் கொண்டு, அதனை ஏற்றுமதி செய்து வரும் அந்த நாட்டை (பாகிஸ்தானை) இந்த உலகில் இருந்து தனிமைப்படுத்தாமல் விடமாட்டோம் என்று பாகிஸ்தானை சரமாரியாக தாக்கி பேசினார்.

9 comments:

  1. காஷ்மீர மக்களின் தற்போதைய அழிவுகளுக்கு பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல்கள் தான் காரணம்.

    ReplyDelete
  2. Mukmapi modi nee oru payankaravathi

    ReplyDelete
  3. Kasmalam aadotta nattilairunthu tatkola thevira vathi vanthu takkutal natatha mutal onta nattu makkala tatkola saiya vakkiriyada muddal talit talit kudumpatta napakam padittipara naayai

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. First and foremost Modi and his RSS , Shiva shena goons must be be executed in order to inhibit the terrorism. Modi is the established criminal who was the main cause for Gujarat atrocities.

    ReplyDelete
  6. தீவிரவாதத்திற்கு இந்தியா தலைவணங்காதாம். சரதானே, உனக்கு நீயே எப்படி தலைவணங்குவது?

    ReplyDelete
  7. Ade Anthony Pakistani terrorist entral neengal 30yrs seithathattku ena peyyar.ungallukku help paniya M G R.indrakhandi.yellam yar madaiya.unudaiya amma amma mattavarhaludaiya ammavellam sumavada

    ReplyDelete

Powered by Blogger.