September 04, 2016

சினிமா பாணியில் போதைமருந்து, கடத்திய இலங்கை பெண் - அதிர்ந்துபோன அதிகாரிகள்

-Tw-

கொழும்பில் இருந்து சென்னைக்கு ரூ.2½ கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை நூதன முறையில் கடத்தி வந்த இலங்கை பெண்ணை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கொழும்பில் இருந்து சென்னை வந்து செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்படி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த சந்திரிகா ரூக்லாந்தி (வயது 28) என்ற பெண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அவரது உடமைகளில் ஏதும் கிடைக்காத நிலையில், அவர் போதை மருந்து சாப்பிட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவரது வயிற்றில் போதைமருந்து மாத்திரைகள் அதிகமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது போதைப்பொருளை மாத்திரை வடிவில் விழுங்கி கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து மருத்துவர்கள் உதவியுடன் வயிற்றில் உள்ள மாத்திரைகளை வெளியே எடுத்தனர். அந்த பெண்ணின் வயிற்றில் ரூ.2½ கோடி மதிப்புள்ள 1 கிலோ ஹெராயின் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

11 கருத்துரைகள்:

அல்லாஹ் காப்பாத்தினான், சந்திரிகா ரூக்லாந்தி முஸ்லிம் பெயர் அல்ல.

AMEER பெயர் முஸ்லிம் பேராக இருந்தால் போதைப்பொருள் கடத்தல் காரன் முஸ்லிமாக இருக்க முடியுமா?உண்மையான முஸ்லிம் அதை செய்யமாட்டான்.பெயர் அரபியிலும் அதற்க்கு ஒப்பானதாகவும் இருந்து சுன்னத்தும் வைத்துகொண்டு போதைப்பொருள் கடத்தல்,கூலிக்கு கொலை செய்தல்,கலவடுத்தல்,கொள்ளையடித்தல் போன்ற தீய செயலில் ஈடுபட்டால் முஸ்லிமாக இருக்க முடியுமா?.யார் ஒரு முஸ்லிம் தன கையாலோ தன் நாவாலோ மற்ற மனிதனுக்கு தீங்கு விலைவிக்கவில்லையோ அவன்தான் உண்மையான முஸ்லிம்.

jawfer, என்ன சொன்னேன் என்று புரியாமல் பேச வேண்டாம். போதைப் பொருள் கடத்தியவர் முஸ்லிம் பெயர் கொண்டவராக இருந்து இருதால் மொத்த அவதூறையும் இஸ்லாத்தின் மீதே வாரி இறைத்து இருப்பார்கள், அப்படி நடக்காமல் அல்லாஹ் காப்பாத்தினான் என்று சொன்னேன்.

ஒரு முஸ்லிம் குற்றம் செய்தாலும் அவன் முஸ்லிம்தான், நீங்கள் புதிய இஸ்லாம் உருவாக்க வேண்டாம். ஒரு முஸ்லிம் அநியாயமாக கொலை செய்தாலோ, போதைப்பொருள் கடத்தினாலோ, வட்டி சாப்பிட்டாலோ அவன் காபிர் ஆகிவிட மாட்டன், மாறாக அவன் குற்றவாளியாக மாறுவான்.

நீங்கள் சொல்வது படி பார்த்தால், இஸ்லாத்திற்காக பேசுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு மற்ற மனிதர்களின் மனங்களை இங்கே கொமண்ட்ஸ் இல் நோகடிக்கும் ஒரு முக்கியாமான நபரும், மற்றவர்களும் கூட முஸ்லிம் இல்லை என்று ஆகிவிடும்.

களவேடுப்பவன், கொள்ளை அடிப்பவன் முஸ்லிமாக இருக்க முடியும், ஆனால் இஸ்லாமிய அரசு தண்டனை கொடுக்கும், அவன் காபிர் ஆகுவதில்லை.

சமுதாயத்தை நாசமாக்கும் எந்த செயலையும் ஒரு முஸ்லிம் செய்யக்கூடாது.அதுதான் முஸ்லிமுக்கும் இஸ்லாத்துக்கும் அழகும் பெருமையும்,

Ameer Umad you are right. there are people who try to create new Theories is in Islam. just because a person is committing a sin he does not become a Kafir. Then there is no meaning for THAWBA.

அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே !,
அல்லாஹ் கூறுகிறான் " முஸ்லிமாக இல்லாமல் யாரும் மரணித்து விட வேண்டாம் அதாவது மரணிக்கும் போது முஸ்லிமாகத்தான் மரணிக்கணும், இன்னொரு இடத்தில் ரசூல் ஸல் அவர்கள் கூற்யுள்ளார்கள் ஒரு முஸ்லிம் பெரும் பாவம் செய்யும் போது முஸ்லிமின் ஈமான் தூரச் சென்று விடும் அதாவது பாவம் செய்யும் நேரம் முஸ்லிமாக இல்லை இந்த இரு செய்திகளையும் நாம் முக்கியமாக கருத்தில் கொள்வது சிறந்ததாக இருக்கும், சிறு பாவங்கள்,பெரும் பாவங்கள் என்று இருக்கிறது,பாவம் செய்து கொண்டு இருக்கும் போது எமது மௌத்(இறப்பு) வராதிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவனாக,..! வந்துவிட்டால்......?., அல்லாஹ் எங்களை காப்பானாக, ஆனால் இன்று நிறைய முஸ்லிம்களை சந்திக்கக்கூடியதாக இருக்கிறது ஹராமுடன் தொடர்புள்ளவர்களாக,பெரும் பாவம் செய்யும் எல்லோரும் முஸ்லிமாக இல்லை,இப்பொது நான் மேலே எழுதியுள்ள ரசூல் (ஸல்) கூறிய விடயங்களை வாசித்து நமது நிலை என்ன என்பதையும்,இந்த ஒரு விடயத்தை எம் சமூகத்துக்கு கொண்டு செல்லும் வேலையையும் நாம் செய்யவோம், ஆக ஹராமான விடயங்கள்,! எங்களை முஸ்லீம் என்ற இடத்திலிருந்து அப்புறப்படுத்துகிறது என்று நான் விளங்கியதை எழுதி உள்ளேன்

. போதைப் பொருள் கடத்தியவர் முஸ்லிம் பெயர் கொண்டவராக இருந்து இருதால் மொத்த அவதூறையும் இஸ்லாத்தின் மீதே வாரி இறைத்து இருப்பார்கள், அப்படி நடக்காமல் அல்லாஹ் காப்பாத்தினான்

@ Sayed Alakana Pathivu Jazakallah.

Post a Comment