Header Ads



ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்


வங்காளதேசத்தில், 1971 போர் குற்ற நடவடிக்கை வழக்கில் ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்காளதேசத்தில் உள்ள எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் குவாசிம் அலி. இவர் மிகப்பெரும் கோடீசுவரர்.

பாகிஸ்தானில் இருந்து பிரிந்த போது கடந்த 1971-ம் ஆண்டு வங்காளதேச சுதந்திர போராட்டத்தின் போது போர்க்குற்றம் இழைத்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. எனவே அவர் மீது சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் குற்றவாளி என அறிவித்து தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி ஆனது.

எனவே அவர் காசிம்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் இறுதியாக ஜனாதிபதியிடம் கருணை மனு அளித்து அதன் மூலம் தண்டனை குறைய வாய்ப்பு இருந்தது. ஆனால் குவாசிம் அலி ஜனாதிபதியிடம் மன்னிப்பு கோர விரும்பவில்லை என நேற்று அறிவித்து விட்டார். அதனால் அவர் தூக்கில் போடப்படுவது உறுதியாகி இருந்தது.

இந்நிலையில், ஜமாத்-இ- இஸ்லாமி கட்சி தலைவர் குவாசிம் அலிக்கு நேற்று இரவு தூக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

டாக்காவிற்கு புறநகரில் உள்ள கஷிம்பூர் மத்திய சிறையில் இரவு 10.30 மணியளவில் தூக்கு தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை மந்திரி அசாதுசமன் கான் தெரிவித்தார்.

தூக்கு தண்டனை நிறைவேற்றத்திற்கு முன்பாக குவாசிமை பார்ப்பதற்கு அவரது உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி அவரது 22 உறவினர்கள் சிறைக்கு சென்றனர்.

7 comments:

  1. Haseena wants to die with blood of innocent people in her hands..Murders and killing have become arts of Muslims today


    ReplyDelete
  2. Allah will punsh the bungaladesh present government

    ReplyDelete
  3. Allah let the culprits, sinners, dictators, and a depraved society for a stipulated period of time to get pleasure and entertainment until Allah's punishment and calamity reach them.
    Throughout the history we are well-aware about what happened eventually to Firouunn,Namroothh, Hitler,Musolinii... and so on. I regard this incumbent Bangladeshi president too not an exception.

    ReplyDelete
  4. These killing are politically motivated and only Allah is sufficient for victims.

    ReplyDelete
  5. இங்கு கருத்து தெரிவிக்கும் ஆக்கள் ராயல் கல்லூரியில் படித்தவர்கள். அவர்களுக்கு தமிழை திக்கித் திணறி வாசிக்க மட்டும்தான் தெரியும் தமிழில் எழுத தெரியாது. என்ன செய்ய ஆங்கிலம் தெரியாத நாமெல்லாம் வாயை மூடிக்கிட்டு இருக்க வேண்டியதுதான்............

    ReplyDelete
  6. ABU SHAMA சொல்லவது நூறு வீதம் செரியானது இப்பகிதியில் வாசகர்கள் அதிகம் ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் இதை அறியாமல் இவர்கள் தங்களின் (இங்கிலுசு) பெருமையை காட்டினால் என்ன செய்வது, தாங்களின் COMPUTER தமிழ் இல்லை என்று சொல்வார்கள்இவ்வலவு ஆங்கில அறிவு உள்ளவர்களுக்கு ஏன் தமிழை தரவிறக்கம் செய்ய முடியவில்லை?இதற்க்கு முதலிலும் பல வாசகர்கள் இந்தக்கருத்தை இத்தளத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete
  7. it is not about the fact that we can not type in Tamil or we can not know Tamil but it is matter of quickness. We can type so quickly in English than Tamil Simple is that.

    ReplyDelete

Powered by Blogger.