Header Ads



சீனாவுடனான ரணிலின் தேனிலவுக்கு, முடிவு கட்டுவாரா சந்து..?

சிறிலங்காவின் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு செல்வாக்கைக் கொண்டுள்ள இந்திய உயர் ஆணையாளரை சிறிலங்கா ஊடகங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. இந்தியா எமது அயல்நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும்.

சிறிலங்காவிற்கான இந்தியாவின் புதிய உயர் ஆணையாளராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்பட்டவுடன் இவர் தொடர்பான தகவல்களை சேகரிப்பதில் சிறிலங்கா ஊடகங்கள், அரசியல்வாதிகள், முன்னணி வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் போன்றன அதிக ஆர்வம் காண்பித்தன.

தரன்ஜித் சிங் சந்து 2000-2004 வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் இந்திய உயர் ஆணையகத்தின் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்ட காலப்பகுதியே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இக்காலப்பகுதியில் சிறிலங்காவில் அரசியல் கிளர்ச்சிகள் இடம்பெற்றன.

2001ல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் எஸ்.பி.திசநாயக்க உட்பட்ட குழுவினர் சந்திரிக்கா அரசாங்கத்தை கவிழ்க்கும்  நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவியதும், நோர்வேயின் தலையீட்டுடன் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதும் இந்தக் காலப்பகுதியில் தான்.

இதே காலப்பகுதியிலேயே அப்போது அதிபராக இருந்த சந்திரிக்கா, பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களைத் தனது அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்ததன் பின்னர் ரணில் அரசாங்கத்தைக் கலைத்தார். இதுவே அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதற்கும் வழிவகுத்தது. ர

ணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக அப்போதைய இந்திய உயர் ஆணையாளர் நிருபாமா சென் முன்னெடுத்த நகர்வுகள் தொடர்பாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ரணில் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஒஸ்ரின் பெர்னாண்டோவால் எழுதப்பட்ட My belly is white  என்கின்ற நூலில் இந்திய உயர் ஆணையகத்தால் ரணிலின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்காலப்பகுதியில் இந்திய உயர் ஆணையகத்தில் அரசியல் ஆலோசகராகச் செயற்பட்ட சந்து, தற்போது  ரணில் விக்கிரமசிங்க சிறிலங்காவின் பிரதமராக இருக்கும் இக்காலப்பகுதியில் இந்தியாவின் புதிய உயர் ஆணையாளராக சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளமையானது  அனைவரின் கவனத்தையும் குவித்துள்ள ஒரு சுவாரசியமான விடயமாகும்.

சந்துவிற்கு முன்னர் சிறிலங்காவிற்கான இந்தியாவின் உயர் ஆணையாளராகச் செயற்பட்ட சின்ஹா, சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணிய ராஜபக்ச தோற்கடிக்கப்பட வேண்டும் என விரும்பிய ஒரு இராஜதந்திரி ஆவார். இந்த அடிப்படையில், மகிந்த அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்ப்பதற்கு இந்தியாவே ஆதரவாக இருந்ததாக மகிந்த ஆதரவு அணிகள் குற்றம் சுமத்தியுள்ளன. இந்த விடயமானது முன்னாள் பாதுகாப்புச் செயலரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சவாலும் அறிவிக்கப்பட்டது.

மீண்டும் மகிந்தவை நாட்டின் அதிபராக்குவதற்கான உதவியை கோத்தபாய இந்தியாவிடம் கோரி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரணில் சார்பாக சந்திரிக்காவின் அரசாங்கத்தைத் தோற்கடிப்பதற்குத் திட்டம் தீட்டிய மிலிந்த மொறகொடவே தற்போது கோத்தபாயவிற்குப் பதிலாக இந்திய உயர் ஆணையகத்திற்கு தகவல்களை வழங்கி வருகிறார்.

பொருளாதார மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு எதிரான மகிந்தவின் நிலைப்பாட்டை இந்திய உயர் அணையாளர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார். இந்திய உயர் ஆணையாளர் நாட்டின் உள்ளகப் பிரச்சினைகளுக்குள் தலையீடு செய்வதாக ஜி.எல்.பீரிஸ் மற்றும் விமல் வீரவன்ச ஊடாக மகிந்தவால் இந்திய உயர் ஆணையாளருக்குத் தகவல் அனுப்பப்பட்டது. இதனால் இந்திய உயர் ஆணையாளர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மகிந்தவால் கோரப்பட்டது.

சின்ஹாவிற்கு முன்னர் சிறிலங்காவிற்கான இந்திய உயர் ஆணையாளராக செயற்பட்ட அசோக் காந்தாவுடனும் மகிந்த முரண்பாட்டைக் கொண்டிருந்தார். இதனால் சிறிலங்காவிற்கு எதிராக காந்தாவினால் இந்தியாவிற்கு அறிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனால் இந்த முரண்பாடு மேலும் விரிசலடைந்தது.

1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதிலிருந்து இந்தியா தொடர்பான கசப்பான தகவல்களை கோத்தபாய வழங்கி வருகிறார். தற்போது கோத்தபாயவால் இந்தியாவின் உதவி நாடப்பட்டாலும் கூட, இவரால் மீண்டும் சிறிலங்காவின் அதிபர் பதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது. இந்திய உயர் ஆணையகத்தில் சந்து அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியதை விடத் தற்போது மகிந்த இவருடன் நெருக்கமான உறவைப் பேணிவருகிறார்.

இந்தியாவின் சமஸ்டி முறைமை மற்றும் இந்தியாவின் தலையீடு தொடர்பாகவும் ஆராயப்பட்டது. நோர்வேயின் தலையீட்டிற்குப் பதிலாக இந்தியாவின் சமஸ்டி முறைமை மற்றும் இந்தியாவின் தலையீட்டைத் தான் விரும்புவதாகவும் மகிந்தவால் கூறப்பட்டது.

சீனா மற்றும் மேற்குலகிற்குத் திருப்தி தரும் விதமாகவும் அதேவேளையில் இந்தியாவின் அடக்குமுறையை எதிர்த்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.

2002இலும் ரணில் அரசாங்கத்துடன் இந்தியாவானது நெருக்கமான தொடர்பைப் பேணி வந்தது. எனினும், இந்திய மத்திய அரசாங்கமானது நோர்வேயின் தலையீட்டை ஆதரிக்கவில்லை.

அப்போதைய இந்தியப் பிரதமர் வாஜ்பாயிக்கு ரணில் அரசாங்கமானது நோர்வேயின் தலையீடு தொடர்பாக தெரிவித்தது.

இருப்பினும் ரணில் அரசாங்கத்தைக் கவிழ்ப்பது தொடர்பில்  சவுத் புளொக் எனப்படும்,இந்திய  இராஜதந்திர அலகு  தீர்மானங்களை  எடுக்கும் வரை,  ரணில் இருளிலேயே இருந்தார்.

ஆங்கிலத்தில்  – உபுல் ஜோசப் பெர்னான்டோ மொழியாக்கம் – நித்தியபாரதி வழிமூலம்       – சிலோன்ருடே

No comments

Powered by Blogger.