Header Ads



முஸ்லிம் பாடசாலையில் 8 ஆம் தரம் கற்கும், மாணவன் ஊடாக போதைப் பொருள் விற்பனை

-எம் .எல்.எஸ்.முஹம்மத்-

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பிரபல முஸ்லிம் பாடசாலை ஒன்றில் எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவன் ஒருவன்  ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருட்கள்   விற்பனை செய்யப்பட்ட  சம்பவம் ஒன்று இன்று -01- இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் குறிப்பிட்ட பாடசாலையின் நிர்வாகம் குறித்த மாணவனின் பெற்றோரை அழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் இரத்தினபுரி பொலிஸார் குறித்த முஸ்லிம் மாணவனுக்கு போதைப் பொருட்களை   வழங்கி வரும் நபர்கள் தொடர்பில் தேடுதல் முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இரத்தினபுரி மாவட்ட முஸ்லிம் மாணவர்களையும் , சிறார்களையும் இலக்கு வைத்து இடம்பெற்று வரும்  மேற்படி  சமூக விரோத செயல்கள் தொடர்பில் பெற்றோர்கள் , பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள் , ஆசிரியர்கள் , மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்ட ஜெம்மியத்துல் உலமா பிரதிநிதிகள்  அனைவரும் மிக அவதானமாக இருக்குமாறு சமூக நலன் விரும்பிகள் எதிர்பார்கின்றனர்.

2 comments:

  1. நீங்கள் குற்றவாளியைக்கண்டு பிடித்து மரண தண்டனை கொடுங்கள். ஆனால் இவ்வாறான சமூக விரோத செயல்களுக்கான அடிப்படைக்காரணங்களை கண்டறிந்து நீக்காதவரை இவை தொடர்ந்து நடக்கும்.

    ReplyDelete
  2. Mr Aroos Mohamed

    From your comment I understand that you are trying to justify this Drugs trafficking. Pl understand the people who are committing illegal things will have their own excuse. It does not mean that it is justifiable. Already the Muslim community have been taged as Druggists and this will be added to its account as evidence. It is highly bitter to hear that our Muslim community is bending towards making of easy money. Good example is that we are loosing the business grip with other communities. We all have to pray the ALMIGHTY ALLAH for better standings of us in the other communities.

    ReplyDelete

Powered by Blogger.