September 29, 2016

அலெப்போவில் 8 நாட்களில், 1000 பேர் மரணம், அனைவரும் படுகொலை செய்யப்படலாமென கவலை


கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு அலெப்போ நகர் மீது சிரிய அரச படை பாரியதொரு தரைவழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. சிரிய உள்நாட்டு யுத்தத்தின் ஒரு திருப்புமுனையாக இருக்கும் அலெப்போ நகரை முழுமையாக கைப்பற்ற ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசு தீவிரம் காட்டியுள்ளது.

அலப்போவின் பிரபலாமான கோட்டை பகுதிக்கு அருகில் இருக்கும் பராப்ரா மாவட்டத்தை துருப்புகள் கைப்பற்றியதாக சிரிய அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு நகரின் வரலாற்று மையப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

பரப்ரா மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் அரச படை கைப்பற்றியதாக குறிப்பிட்டிருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் தற்போது அங்கு கண்ணிவெடி அகற்று பணி இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

அரச படையின் முன்னேற்றம் தொடர்வதாக குறிப்பிட்டிருக்கும் இராணுவ அதிகாரி, வான்வழி தாக்குதல், பீரங்கி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டு சிரிய உள்நாட்டு யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் வான்வழி தாக்குதல்களால் மோசமாக பாதிக்கப்பட்ட அலெப்போ நகர், கடந்த வாரம் யுத்த நிறுத்தம் முறிந்த பின் இடம்பெற்ற தாக்குதல்களில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். பாப் அல் அன்டக்யா மாவட்டத்தில் ஷியா ஆயுததாரிகள் உட்பட அரச ஆதரவு படையினர் முன்னேற முயல்வதாக அரச எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் அரச படையின் முன்னேற்றம் முறியடிக்கப்பட்டதாகவும் அரச ஆதரவு படையினர் பலர் கொல்லப்பட்டதாகவும் கிளர்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

எனினும் இந்த அறிவுப்புகள் குறித்து சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் அரச ஜெட்கள் மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் அலெப்போ மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற புதிய வான் தாக்குதல்களுக்கு பின்னர் மீட்பாளர்கள் இடிபாடுகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

அல் ஷார் பகுதியில் நிலவறைகளை தகர்க்கும் குண்டுகள் வீசப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர் உட்பட மொத்தம் 24 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருப்போர் விபரித்துள்ளனர்.

அலெப்போவின் வரலாற்று மையப்பகுதி உலகின் மிகப் பழைய நகரங்களில் ஒன்றாகும். இங்கு யுனெஸ்கோ மரபுரிமை சொத்தான உமையத் பள்ளிவாசலும் அமைந்துள்ளது. 2013 ஏப்ரலில் இடம்பெற்ற மோதலில் 11 ஆம் நூற்றாண்டு மினாரத் தகர்க்கப்பட்டது.

அரச படையினர் இந்த வரலாற்று மையப்பகுதியை நோக்கி முன்னேறுவதை சிரிய உள்நாட்டு யுத்தத்தை கண்காணித்து வரும் பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமை கண்காணிப்புக் குழு உறுதி செய்தது. அங்கு படையினர் குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சிரியாவின் கிழக்கு அலெப்போ நகரில், விமானத் தாக்குதல்களை அடுத்து, அங்குள்ள இரண்டு பெரிய விபத்து சிகிச்சை மருத்துவமனைகளும் செயல்படவில்லை என்று சிரியா - அமெரிக்க மருத்துவ அறக்கட்டளை தெரிவித்துள்ளது. போரின் பிடியில் சிக்கியுள்ள கிழக்கு அலெப்போவில், மூன்று லட்சம் மக்களுக்கு வெறும் 6 தீவிர சிகிச்சை படுக்கைகள் மட்டுமே உள்ளன. காயமடைந்த மக்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இழந்த பகுதிகளை மீட்பதற்கு தரைவழித் தாக்குதல்களைத் ஆரம்பிப்பதற்காக, சிரியப் படைகளும் போராளிக் குழுவினரும் பெருமளவில் படைகளைக் குவித்து வருகின்றனர்.

கடந்த எட்டு நாட்களாக நடக்கும் சண்டையில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக கிளர்ச்சியாளர் பிடியில் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். போராளிகளின் பிடியில் உள்ள பகுதிகளில் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், தாங்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டுவிடுவோம் என அஞ்சுவதாகவும் பொதுமக்கள் கூறியுளளனர். 

2 கருத்துரைகள்:

In Rwanda nearly 800.000 thousand people were killed but yet world did not move...this war is between West and Rusia at one hand and between shia and sunni as well..
So...as long as Muslim political leaders sleap Iran will kill more and more ...until it comes into Saudi land it will not wake up ..once war spread into Gulf nations then they will wake up..already Iran has played the trick and has encircled all Gulf nations from Yemen to Iraq it has its influence..
It has convinced USA to lift the sanctions...soon it economy will boom.with oil market ...so it will follow it shia agenda...then Saudi will wake up...and Gulf will wake up..then Al Sisi will not come for support of Saudio

Middle east kings கள் அல்லாஹ்விடம் பொருப்பு கூற வேண்டும்

Post a Comment