Header Ads



வெளியானது ஐபோன் 7 - சுவாரசியத் தகவல்கள்..!

ஆப்பிள் ரசிகர்களுக்கு இன்றைய இரவுதான் சிவராத்திரி. இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஐபோன் 7 மற்றும் ஆப்பிள் வாட்ச் - 2 அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியம் இந்த நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறது. 7,000 பேர் வரை கொள்ளும், அந்த அரங்கில், டெக்னாலாஜி ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மத்தியில், இன்று இரவு புதிய ஐபோன் பிறக்கவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இணையத்தில் லைவ்வாக காணவும் முடியும்.  ஐபோன் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருந்தாலும், கூட கபாலி ஓபனிங் சீன் போல, இன்னும்  அதுபற்றிய புதுப்புது தகவல்கள் லீக் ஆகிக்கொண்டே இருக்கின்றன. அதுபற்றிய லேட்டஸ்ட் அப்டேட்தான் இந்தக் கட்டுரை.

(இந்தக் கட்டுரையை நல்லா படிச்சுக்கங்க ப்ரோ.. இதுதான் நீங்கள் படிக்கும் கடைசி ஐபோன் லீக்ஸ் பற்றிய கட்டுரை. ஏனெனில், இன்று இரவு ஐபோன் வெளியாகிவிட்டால், பிறகு அதைபற்றிய அலசல்களும், விவாதங்களும் துவங்கிவிடும் அல்லவா? எனவே படையப்பா சிவாஜி போல, கடைசியாக ஒருமுறை ஐபோன் பற்றி பாத்துடுவோமா?)

கசியவிட்ட ஹாங்காங் ஆப்பிள்:

ஐபோன் 7 வருவது தெரிந்தாலும், அதில் எத்தனை மாடல்கள் வரும் என்பது தெரியாத புதிராகவே இருந்தது. ஆனால் ஐபோன் இன்று மாலை வெளியாக இருக்கும் நிலையில், அதனை பற்றிய தகவல்கள் பற்றி ஹாங்காங்-ன் ஆப்பிள் வலைதளத்தில் வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே சேர்க்கப்பட்ட தகவல்கள் நீக்கப்பட்டது. இயர்போன் வாங்கும் பகுதியில், ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் என அதில் தெரியவர, அதை கேட்ச் செய்துவிட்டனர் ஐபோன் பாய்ஸ். ஆக இந்த இரண்டு மாடல்கள்தான் வரும் என முடிவுக்கு வந்துள்ளனர். மேலும் 3.5 mm ஆடியோ ஜாக் இருக்குமா, இருக்காதா என குழப்பம் இன்னும் தொடர்கிறது. சோ..ப்ளீஸ்..வெயிட்!

புதுசா என்ன இருக்கு?

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் டிஸ்பிளேவில் எந்த மாற்றமும் இல்லாமல் 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் அளவிலேயே இருக்கும் என தெரிகிறது.  ஐபோன் 7 பிளஸ் இரண்டு, 12 மெகாபிக்சல் கேமராவுடனும், ஐபோன் 7 ஒரு 12 மெகாபிக்சல் கேமராவுடனும் வெளியாகலாம். ஐபோன் 7 மாடல்களில் இன்டர்னல் மெமரி 16 ஜி.பிக்கு பதில் 32 ஜி.பியாக மாறலாம். மேலும் இம்முறை 25 ஜி.பி மெமரியை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என்கின்றனர் ஆப்பிள் பீப்பிள்ஸ். அத்துடன் கூடுதலாக Deep Blue மற்றும் Space Black ஆகிய இரு வண்ணங்களில் வெளியாகலாம். ஐபோன் 2 ஜி.பி ரேம் அல்லது 3 ஜி.பி ரேம் மற்றும் ஆப்பிள் A10  பிராஸசரை கொண்டிருக்கலாம்.

வடிவமைப்பை பொறுத்தவரை மெல்லியதாகவும், வாட்டர் ரிசிஸ்டண்ட் வசதிகளுடன் இருக்கும். ஆப்பிள் ஐபோன் 7, 32 ஜி.பியின் விலை 53,100 ரூபாய், 128 ஜி.பி 61,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 71,300 ரூபாயாகவும் இருக்கும் எனவும் எர்திர்பார்க்கப்படுகிறது.  ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ், 32 ஜி.பியின் விலை 61,100 ரூபாய், 128 ஜி.பி 69,200 ரூபாய் மற்றும் 128 ஜி.பியின் விலை 79,300 ரூபாயாகவும் இருக்கலாம்.. கடந்த ஆப்பிள் ஐபோன் 6 எஸ் போல் அல்லாமல் இந்த போன் மிகுந்த வரவேற்பை பெறும் என ஆப்பிள் நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே ஐபோன் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி முதலும், இந்தியாவில் தீபாவளி பட்ஜெட்டைக் குறிவைத்து, அக்டோபரிலும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.