Header Ads



இந்தியாவில் மேலும் ஒரு கொடூரம் - 7 வயது மகள் சடலத்தை தோளில் சுமந்துசென்ற தந்தை


ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் குசாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தினபந்து கேமுது.

இவருடைய மகள் பர்ஷா(7) உடல்நலக்குறைவு காரணமாக மிதாலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருடைய உடல்நிலை மேலும் மோசமானதால், மல்காங்கிரி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். உடனே கேமுது ஆம்புலன்ஸை வரவழைத்து தனது மகளை அதில் கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அச்சிறுமியின் உயிர் பிரிந்தது.

இதை அறிந்ததும் ஆம்புலன்ஸ் டிரைவர், சிறுமியின் உடலுடன் கீழே இறங்குமாறு கேமுதுவை வற்புறுத்தினார். எவ்வளவு கூறியும் ஏற்றுக்கொள்ளாத ஆம்புலன்ஸ் டிரைவர் சிறுமியின் உடலை கீழே இறக்கினார். பிறகு வேறு வழியின்றி கேமுது தனது மனைவியோடு மகளின் உடலை தோளிலேயே தூக்கி போட்டுக்கொண்டு அழுதபடியே 6 கி.மீ தூரம் வரை நடந்தார். இக்காட்சியை கண்ட அங்கிருந்தவர்கள் வேறு வாகனத்தை வரவழைத்து உடலை ஏற்றிச்செல்ல ஏற்பாடு செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 3 பேர் மீது மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி போலீசில் புகார் செய்துள்ளார். சமீபத்தில் ஒடிசாவில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் தானா மஜ்கி என்பவர் தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றார். இந்த சம்பவம் நடந்து 10 நாட்கள் கூட ஆகாதநிலையில், தற்போது இதேபோன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்து ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 comments:

  1. இந்தியா கேடுகெட்ட நாடு என்பது உலகம் அறிந்த உண்மை.அதனால்,ஐநா பொதுச்சபையில் இருந்து இந்தியாவை விலக்கி வைப்பதுதான் சிறந்த வழிமுறை அப்பத்தான் அவர்களுக்கு புத்தி வரும்.எங்க புத்தி வாறது மாட்டுக்கு பொறந்தவனுக்கு.

    ReplyDelete
  2. மாட்டுக்குப் பிறந்தவன் என்று சொல்வது எவ்வளவு பிழையானது.இதுவெல்லாம் நாகரீகமான கருத்தல்ல. தவிர்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. அவன்தான் சொல்கின்றான் மாடு தனது தாய் என்று நாசொன்னால் என்ன பிரச்சினை

    ReplyDelete

Powered by Blogger.