Header Ads



ஐபோன் 7 தயாரிப்பதற்கு, செலவான தொகை எவ்வாளவு தெரியுமா?

அப்பிள் நிறுவனம் கடந்த வாரத்தின் பிற்பகுதியில் iPhone 7 மற்றும் iPhone 7 Plus எனும் புதிய இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

இக் கைப்பேசிகள் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஒரு iPhone 7 கைப்பேசியினை வடிவமைப்பதற்கு செலவாகும் தொகை 224.80 அமரிக்க டொலர்கள் என்பதே அந்த அதிர்ச்சி தகவல் ஆகும்.

இதில் என்ன அதிர்ச்சி என்று கேட்கின்றீர்களா? ஆம், 224.80 டொலர்கள் செலவில் வடிவமைக்கப்பட்ட கைப்பேசியானது சந்தையில் ஆகக் குறைந்த விலையாக 649 டொலர்கள் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

இதில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் என்னவென்றால், இதற்கு முன்னர் அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone 6S கைப்பேசியினை வடிவமைப்பதற்கு 219.80 டொலர்களே செலவானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கையில் iPhone 6S வடிவமைப்பு செலவை விட 5 டொலர்களே iPhone 7 தயாரிப்பிற்கு செலவிடப்பட்டுள்ளது.

இந்த தகவலை லண்டனை தளமாகக் கொண்டு செயற்படும் IHS Markit எனும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

3 comments:

  1. Hardware சீனாவிலும், software இந்தியாவிலும் உருவாக்கப்படுவதால் தான் உற்பத்தி செலவு குறைவு.
    ஆணால், முயற்சியும், கண்டுபிடிப்பும் (research & development) அமேரிக்கர்களுடையது, எனவே பெரிய இலாபம் அவர்களுக்குரியது.

    ReplyDelete
  2. Absolutely correct! The money spent on R&D is not included in the manufacturing cost. Apple has to recover their R&D cost and make profits. It is up to the consumer to spend their money to buy these products.

    ReplyDelete
  3. Ethel Anna atherdathu....

    ReplyDelete

Powered by Blogger.