Header Ads



6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை, திரும்பப்பெறுகிறது சாம்சங்


6650 கோடி ரூபாய் மதிப்பிலான போன்களை திரும்பப் பெறுகிறது சாம்சங் நிறுவனம். இது மிகப்பெரிய இழப்பீடு என்று கருதப்படுகிறது.

ஸ்மார்ட் போன் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வருகிறது சாம்சங் நிறுவனம். அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தயாரிக்கும் ஐ-போனுக்கு இணையாக குறைந்த விலைவில் வெளியிட்டு சாம்சங் நிறுவனம் அசத்தி வருகிறது. இதனால் உலகளவில் சாம்சங் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. சாம்சங் நிறுவனம் சமீபத்தில் ‘கேலக்சி நோட் 7’ மாடல் செல்போனை அறிமுகப்படுத்தியது. இதை லட்சக்கணக்கான மக்கள் வாங்கினார்கள்.

ஆப்பிள் நிறுவனம் இந்த வாரத்தில் ‘ஐ-போன் 7’ மாடல் போனை வெளியிட இருக்கிறது. இதற்கு போட்டியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘கேலக்சி நோட் 7’-க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது போனுக்கு ரீசார்ஜ் செய்யும்போது அடிக்கடி போன் தீப்பற்றி எரிகிறது என புகார் கிளம்பியது.

ஒட்டுமொத்தமாக விற்பனையானதில் மூன்று டஜன் போன்கள், அதாவது 0.1 சதவீத போன்கள் குறித்து புகார் வந்தது. மேலும், சமூக வலைத்தளத்தில் நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு தரப்பு புகார்கள் பதிவு செய்யப்பட்டது.

இதனால் ‘கேலக்சி நோட் 7’ போன்களை திரும்பப் பெற்றுக்கொள்ள சாம்சங் நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘கேலக்சி நோட் 7’ போன்களை திரும்பப்பெற்றால், சாம்சங் நிறுவனத்திற்கு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மத்திப்பில் 6650 கோடி ரூபாய்) சாம்சங் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படும். அந்த நிறுவனத்திற்கு நினைத்துப் பார்க்க முடியாது பெரிய இழப்பாக இருக்கும் என கருதப்படுகிறது.

1 comment:

  1. Please stop copying Indian news and publishing exactly as it was...
    You could at least have converted Indian rupees to SLR. SHAME...

    ReplyDelete

Powered by Blogger.