Header Ads



பிரிட்டனில் புர்காவுக்கு தடைவிதிக்க 57 வீதத்தினர் ஆதரவு

பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை விதிக்க பிரிட்டனின் பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவிப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பிரிட்டனில் யூகவ் அமைப்பு அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ள விவரம்: 

பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் என 57 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். முஸ்லிம் பெண்கள் பெரும்பாலும் அணியும் முகத்திரைக்குத் தடை விதிக்கக் கூடாது என்று 25 சதவீதத்தினர் தெரிவித்தனர்.

மேலும், பிரிட்டன் கடற்கரைகளிலும் நீச்சல் குளங்களிலும், "புர்கினி' என்று அழைக்கப்படும் முழு நீள நீச்சல் உடை அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று 46 சதவீதத்தினர் கருதுவதாகவும் 30 சதவீதத்தினர் புர்கினிக்குத் தடை விதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.

கவர்ச்சிகரமான "பிகினி' நீச்சல் உடைக்கு பதிலாக இந்த முழுநீள புர்கினி நீச்சல் உடை அறிமுகமானது. ஆனால் பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் இந்த வகையான நீச்சல் உடையை அணிவது மதச்சார்பின்மைக்கு எதிராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து பல்வேறு கடற்கரை நகர உள்ளாட்சி அமைப்புகள் புர்கினிக்குத் தடை விதித்தன. இது சர்வதேச அளவில் சர்ச்சையை எழுப்பியது. ஆயினும், பிரான்ஸ் உயர் நீதிமன்றம் அந்தத் தடை சட்ட விரோதமானது என்று கூறி ரத்து செய்தது.

ஜெர்மனியில் யூகவ் அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் 62 சதவீதத்தினர் முகத்திரைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

பிரான்ஸில் முகத்தை முழுவதுமாக மறைக்கும் முகத் திரைக்குத் தடை விதிக்கும் சட்டம் 2010-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.

11 comments:

  1. ஒரு சமூகத்தின் மொழி, கலை, கலாச்சாரம், எல்லாம் அவர்கள் வாழும் பிரதேசம், சூழலுக்கு ஏற்றால் போல் வேறுபாடும். இதட்கு எவ்வளவோ உதாரணங்களை சொல்லலாம். நமது நாட்டிலே வாழும் முஸ்லீம்கள் எல்லோரும் ஒரே மாதிரி தமிழை பேசமாட்டார்கள். பேசுகின்ற தமிழை வைத்து அவருடைய ஊரை சொல்லேவிடலாம். யாழ் முஸ்லீம்கள் இரவில் சோறு சாப்பிட மாட்டார்கள், திருமண வீடுகளில் இரவு சாப்பாடே இல்லை. ஆனால், கொழும்பிட்கு வந்தபின், இரவு திருமண களில், பிரியாணிதான் சாப்பாடு. இதே போல் எத்தனையோ சொல்லலாம்.

    இஸ்லாம் அரபு நாட்டில் இருந்து வந்ததால் நாங்கள் அரபு பேசுவது இல்லை. அவர்கள் ரொட்டி, நாங்கள் சோறு, அவர்கள் ஒட்டகப் பால், நாங்கள் மட்டுப் பால், மொத்தத்தில் முழு வாழ்க்கை வடிவமே வேறுபட்டது. ஆனால் இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுவதில் உலக முஸ்லிம்கள் எல்லோரும் ஒரேய் முறைதான் பின்பற்றுவார்கள்,

    1990 இக்கு முன் வாழ்ந்த எமது முஸ்லீம் பெண்கள் சேலையைதான் அணிந்து, முக்காடை போட்டுக் கொண்டார்கள். கௌரவமாகவும் வாழ்த்தார்கள். நமக்குல் ஏன் இந்த திடீர் மாற்றம்? மதத்தின் பெயரால் நாங்கள் மடையர்கள் ஆகி விட்டோமா?

    பாத்திமா நாயகி அணிந்த உடுப்பை இன்றும் எகிப்து நூதன சாலையில் பார்க்கலாம். அதட்கும் அபாயா விட்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாத்தில் அபாய அணிய சொல்லி இருந்தால், பாத்திமா நாயகி அவர்கள் அணியமாலா இருந்து இருப்பார்கள்?

    ReplyDelete
    Replies
    1. u r saying that human being need to wear tree leafs since according to some scientists they did so

      Delete
    2. According to scientists, WHO did? and what did?

      Delete
    3. sorry according to "thought" of science

      Delete
  2. Britain will never ban the burqa I think. Because they brought the decide and rule policy around the world in order to full fill their needs and to loot the world.
    By banning burqa they will know there will be a big issue in England, they don't want division in England. They know it will be the end of Britain then.
    Having said that Burqa is not obligatory for women and as long as they cover their body and hair ( with thick garments - not like the current day abaya. It's thinner the paper. Where you can see each every bits of the shape of the body). Face covering is not a must.
    But those who cover they can keep on covering. It's their personal choice.

    ReplyDelete
  3. முஸ்லிம் பெண்கள் எல்லொரும் சேலை கட்டித் திரியவா சொல்கிறீர்கள்.

    ReplyDelete
  4. நான் எழுதி இருப்பதை நுணுக்கமாக வாசித்தால், உங்களுக்கு விளங்கும், ஆனால் கொஞ்சம் சோனங்கும்.

    ReplyDelete
  5. ya since u used tamil like "tolkappiyam"

    ReplyDelete
  6. அபாயா விடயத்தீல் ஆளுக்கொன்றை விளங்கியதன் விளைவுதான் இந்த பிரச்சினைகள் வர காரணம் ,இஸ்லாத்துக்கும் உலக விடயங்களுக்கும் ஒத்துப் போகக்கூடிய முறைதான் முகம் வெளியில் தெரிய புர்கா அணிவது இதை சிலர் சட்டப்பிரச்சினையாக்கவதால் சில சந்தர்ப்பங்களில் முழுமையாக அபாயாவுக்குஎதிர்ப்பு வருகின்றது,

    ReplyDelete
  7. Yahya: You are trying to say something, but unfortunately, I couldn't get anything out of it. Rather than writing in a language that you are not familiar with, Why don't you use your mother tounge, so that everybody will be able to understand atleast what you are trying to say.

    ReplyDelete
    Replies
    1. sorry sir, i'm not familiar in typing tamil scripts

      Delete

Powered by Blogger.