September 05, 2016

பாலியல் உறவு மூலம், சிக்கிய பிரபலமான பிக்குகள் - 4 வருடமாக கப்பம் பெற்றுவந்த இளைஞன் கைது

இலங்கையில் உள்ள பிரபல விகாரைகளில் பிக்குமாரை பேஸ்புக் மூலம் அறிமுகமாகி அவர்களுடன் பாலியல் ரீதியாக இணைந்து அவற்றை காணெளியாக பதிவு செய்து, தவறான முறையில் பணம் சம்பாதித்து வந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இளைஞன் காணொளிகளை தன்வசம் வைத்து கொண்டு அவற்றை இணையத்தில் வெளியிடப் போவதாக கூறி பிக்குமாரிடம் லட்சணக்கில் பணத்தை கப்பமாக பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சித்தும் மத்துரங்க டி சொய்சா என்ற 20 வயதான இந்த இளைஞன் கடந்த நான்கு வருடங்களாக இந்த செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த இளைஞன் நாட்டின் பல பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மாத்தளை, மெல்சிறிபுர, பெல்லன்வில,அஹூங்கல்ல, அனுராதபுரம், கெக்கிராவ, கொழும்பு, பொரள்ளை, கண்டி, கம்பளை, பண்ணிப்பிட்டி ஆகிய பிரதேசங்களில் உள்ள விகாரைகளில் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிக்குகளுடன் இந்த இளைஞன் பாலியல் ரீதியான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் பின்னர் அவரை அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளார்.

இளைஞன் பேஸ்புக் மூலம் பிக்குமாருடன் அறிமுகமாகிய பின்னர், அவர்களுக்கு போதை ஊட்டி, பாலியல் ரீதியாக நடந்தது, அவற்றை தனது செல்போன் மூலம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கம்ளையில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவரிடம் 8 லட்சம் ரூபாவை கப்பமாக பெற்ற சம்பவம் குறித்து கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இளைஞன் கெக்கிராவ பிரதேசத்திற்கு சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிரபல பிக்கு ஒருவரிடம் 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டு அவரிடம் மேலும் இரண்டு லட்சம் ரூபாவை பெறுவதற்காக அங்கு சென்றிருந்த போது கல்வேவ பொலிஸாரினால் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞனிடம் சிக்கிய பல பிரபல பிக்குகள் இருக்கின்றனர் எனவும் அவர்கள் வெட்கம் காரணமாக முறைப்பாடு செய்ய முன்வரவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களை மறைப்பதன் மூலம் சமூகத்தில் இப்படியான குற்றச் செயல்கள் மேலும் அதிகரிக்கும் எனவும் இதனால், முறைப்பாடுகளை செய்ய முன்வருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

5 கருத்துரைகள்:

இப்படியெல்லாம் அவமானப் பட்டுத் தொலைக்கின்றார்களே?
இது மாதிரி இன்னும் எத்தனை கேஸுகள் இருக்குமோ? இவர்கள் எல்லாம்தான் மக்களுக்கு வழிகாட்டும் "வணக்கத்திற்குரிய தேரர்கள்".

குறித்த எல்லா தேரர்களின் பெயர் விபரங்களையும் வெளியிட்டால், மக்கள் கண்ணைத் திறப்பார்கள்.

மறைக்க முடியாத இன்னொரு பக்கம், இதே போன்ற செயல்கள் மதரசாக்களிலும் தாரளமாக நடைபெறுகின்றது. பாதிரியார்களும் இதனை செய்கின்றார்கள், பள்ளி மெளலவியும் செய்கின்றார்கள், ஹாமதுருவும் செய்கின்றார்கள்.... என்னப்பா நடக்குது?

அஸாத் கனேதன்னை ஐயா எந்த மதரசாவில்?

அசாத் சரியா சொன்னீங்க பாஸ்! ஒரு வேலை சிலருக்கு ஆண்களை ஆண்கள் வல்லுரவுக்கு உற்படுத்துவது கற்பழிப்பு வரிசையில் சேர்க்க மாட்டார்கள் போலும்.
சில மதரஸாக்களில் இப்படி நடக்கவில்லை என்று யாராலும் கூற முடியுமா?
குற்றம் யாரு செய்தாலும் குற்றம்தான்... மார்க்கம் தெரிந்தும் அதுவும் மார்க்கம் கற்பிக்கும் இடத்தில் குற்றம் (பெரியப்பாவின்) செய்கிறானே ...

ஆசாத் இது பல இன மக்கள் பார்க்கும் பகுதி ஆகவே பொய்யான விடயங்களை பரப்பாதீர்கள் அப்படி நீங்கள் அறிந்து இருந்தால் நேரடியாக மத்ரசாவுக்கு சென்று தட்டிக் கேளுங்கள் அந்த உரிமை உங்களுக்கு தாராளமாக உள்ளது,அதைவிடுத்து தேவல்லாத பதிவை இட்டு பாவத்தை சுமக்காதீர்கள்

Post a Comment