Header Ads



கத்தாரில் சட்டவிரோதமாக, தங்கியுள்ளவர்களுக்கு 3 மாத பொதுமன்னிப்பு

(ரெ.கிறிஷ்­ணகாந்)

கத்தார் நாட்­டுக்கு சென்று சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருக்கும் வெளி­நாட்­ட­வர்கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­வ­தற்­காக 3 மாத பொது­மன்­னிப்பு காலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

செப்­டெம்பர் 1 ஆம் திக­தி­யி­லி­ருந்து டிசெம்பர் 1ஆம் திகதி வரை இப்­பொது மன்­னிப்பு காலம் நடை­மு­றையில் இருக்கும் என வெளி­நாட்டு வேலைவாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது.

இதன்­படி கத்­தா­ருக்கு தொழி­லுக்­காக சென்று விஸா காலா­வ­தி­யான நிலையில் அதனை புதிப்­பிக்­காது சட்­ட­வி­ரோ­த­மான முறையில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு இந்தப் பொது மன்­னிப்பு காலத்­தினுள் தத்­த­மது தாய் நாட்­டுக்கு செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்கும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, கத்­தா­ருக்கு நாட்டில் தற்­போது ஒரு இலட்­சத்து 46 ஆயி­ரத்­துக்கும் அதி­மான இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.