Header Ads



இலங்கையில் தினமும் 2 கோடி ரூபாய்களை அள்ளிக்கொட்டும் அதிவேக வீதிகள்


இலங்கையில் அபிவிருத்தி அடைந்துவரும் அதிவேக நெடுஞ்சாலைகளால் அரசாங்கத்திற்கு பெருமளவில் வருமானம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் நாளாந்தம் கிடைக்கும் வருமானம் இரண்டு கோடி ரூபா வரை அதிகரித்திருப்பதாக இலங்கை நெடுஞ்சாலைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறு கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகை வீதி அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படுவதாக அதிவேக நெடுஞ்சாலை மற்றும் நடவடிக்கை முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்துடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வருட காலம் பூர்த்தியடையவுள்ளன.

இந்நிலையில் அதிவேக நெடுஞ்சாலையின் மூலம் நாளாந்தம் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாதுகாப்பு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டில் வீதியை மீண்டும் கார்பெட் இட்டு புனரமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். வீதி ஒழுங்கு விதிகளை மீறப்படுவதே இதற்குக் காரணமாகும்.

இந்த வீதியில் வாகனங்கள் செல்வதற்கு ஆகக்கூடிய வேக எல்லை மணித்தியாலயத்திற்கு 100 கிலோ மீற்றராக இருந்த போதிலும், அதிலும் பார்க்க வேகமாக வாகனங்கள் செலுத்தப்படுகின்றன. பயணிகளுக்கான பஸ்களும் கூடுதலாக வீதி ஒழுங்குகளை மீறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.