Header Ads



கல்கின்னயில் பள்ளிவாசல் மீது தாக்குதல் (படங்கள்)


கண்டி – அங்கும்புர – கல்ஹின்ன பிரதேசத்தில் பெபிலிகொல்லை தக்கியா பள்ளிவாயல் மீதும் வீடு ஒன்றின் மீதும் இன்று (15) இரவு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் பள்ளிவாசல்களின் கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு நடந்த சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்த கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



3 comments:

  1. Why don´t put full mosque poto...

    ReplyDelete
  2. ஆட்சியில் சிலருடைய பதவிகள்மாற்றி அமைக்கப்பட்டதே தவிரஇந்த நாட்டில் எதுவும் மாற்றமடையவில்லை,இனவாதிகளின் பிரச்சினை தொடர்கதையாக உள்ளது ,அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் அதிகார துஸ்பிரயோகம் அனைத்தும் நாளுக்கு நாள் வழர்ச்சியடைந்து கொண்டுதான் செல்கிறது .யார் வந்தாலும் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்துக்கு கஷ்டம்தான்.இதற்கு என்ன வழி சிறுபான்மை இனமாக இருக்கும் நம் முஸ்லிம்கள் கூடுவதும் கலைவதும் புழக்கப்பட்ட விடயமாக மாறிவிட்டது .நாம் நம்மிடம் இருக்கும் பாவங்களை களைந்து அடியோடு நிறுத்தி அல்லாவிடம் பாவ மன்னிப்புக் கோரி அவற்றை மீண்டும் செய்ழாதில்லை என்ற முடிவை எடுத்து .1.வட்டிக்கு வாங்குவதையொம்.கொடுப்பதையும்.கடனுக்கு ஒரு விலை முற்பணத்துக்கு ஒரு விலை,விற்று மறைமுகமாக வட்டி எடுப்பதையும்.விபச்சாரம்.மது அருந்துதல்,சூது விளையாடுதல் ,புகழுக்காக பொய் சொல்வது,தகுதியற்றவர்களெல்லாம் பள்ளிகளை பராமரிக்க நியமனம் செய்வது போன்ற பெரும் பாவங்களை நிறுத்தாத வரை இந்தப் பிரச்சினை முடிவுறாது ,இதற்காக வேண்டி முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சாரம் ஊக்குவிப்பு செய்வதற்கு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும் .அதுதான் உண்மையான வெற்றி.நமது நாட்டில் உள்ளவனைப்போல் இல்லாதவனும் வாழ வேண்டும் என்ற பேராசயால் அனைத்து முஸ்லிம்களும் ஏதாவது ஒருவகையில் வட்டியில் மூழ்கிக் கிடப்பதை காணக்கூடியதாக உள்ளது.உ+ம்.ஒருவர் 4000000/ ரூபாவுடைய டொல்பின் வேன் வாங்க ஆசை வந்தால் 2.3இலட்சத்தை கட்டி வேனை கொண்டு வந்து வாசலில் நிறுத்துவார் இப்போது இவர் பெரிய போஸ்.வட்டிக்கும் வட்டி கட்டி காலமெல்லாம் கடனாளி மட்டுமல்லாமல் பெரும் பாவத்தை செய்து அல்லாஹ் கோபப்பார்வையில் இருக்கிறார்.இவ்வாறு எத்தனை இலட்சம் வாகனம் நம்மவர்களிடம் சுற்றுகிறது ,இவ்வாறான பெரும் பாவாத்தை விட்டு விலகாமல் இருந்தால் அல்லாஹ் காபீர்களை கொண்டு சோதிக்கிறான் ,நிச்சயமாக சோதிப்பான் ,ஆகவே உலமாக்களும் புத்தி ஜீவிகளும் நலன் விரும்பிகளும் சமூகத்தை காப்பாற்ற ஒரே வழி பாவங்களில் இருந்து மீட்டு நூறு வீதம் தொழுகையாழிகளை உருவாக்க வேண்டும் .[நூஹ் நபி(அலை)அவர்கள் தன்னுடைய உம்மத்துக்கு என்ன சொன்னார்கள் .அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேளுங்கள் அவன் பாவங்களை மன்னிப்பான்.மழையை இறக்குவான்.பயிர்களையும் தோட்டங்களையும் உண்டாக்குவான்,இன்னும் மக்களையும் தருவான் என்றார்கள் இதை அல்லாஹ் தெளிவாக சூரா நூஹ் சொல்கிறான்.ஆகவே பிரச்சினைகள் அனைத்துக்கும் காரணம் பாவத்தோடு மனிதன் பின்னிப்பிணைந்து இருப்பதுதான்,

    ReplyDelete

Powered by Blogger.