Header Ads



23 வருடங்களாக நடந்த வழக்கு - கணவன் மனைவி உட்பட 3 பேருக்கு மரண தண்டனை

மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

அம்பலாங்கொடை பிரதேசத்தில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்ததுடன் சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.

கடந்த 23 வருடங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்துள்ளது.

66 வயதான ஜினதாச மதவன்ஆராச்சி, அவரது மனைவியான 61 வயதான சிறிமா இதிரிசூரிய, இவர்களின் அயல் வீட்டு வாசியான கமகே ரஞ்சித் ஆகியோருக்கே மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குற்றவாளிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள கொலை குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி ஜனித் எம். மாசிங்க அறிவித்துள்ளார்.

1 comment:

  1. They found these three are the criminals after 33 years. Funny Sri Lankan Law. They investigated this case for 33 years to find out the evidence even they know these three are the criminal. Who benefited by this case is the lawyers, public or private transport, government institution, brokers and so on but the diseased family got nothing for 33 years.

    There is another issue that death penalty will not be performed unless Mr. President approve to do so. What a funny law.

    ReplyDelete

Powered by Blogger.