Header Ads



ஒலுவில் பிர­தே­சத்தை, பாது­காப்­ப­தற்­காக 17 மில்­லியன் ரூபாய்

கட­ல­ரிப்பின் கார­ண­மாக பெரிதும் பாதிப்­புக்­குள்­ளாகி வரும் ஒலுவில் பிர­தே­சத்தைப் பாது­காப்­ப­தற்­காக 17 மில்­லியன் ரூபாய் நிதி­ஒ­துக்­கீட்டில் அவ­ச­ர­மாக அங்கு 220 மீற்றர் தூர­மான கட­லோரப் பிர­தேசம் பாரிய பாறாங்­கற்­களைக் கொண்டும், கடல் மணலைக் கொண்டும் உட­ன­டி­யாக நிரப்­பப்­ப­ட­வுள்­ளது.

 இது குறித்த நட­வ­டிக்­கை­யினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்­கொண்­டுள்ளார்.

இதற்­கான தீர்­மானம் நேற்று மாலை அமைச்சர் ஹக்­கீமின் பாரா­ளு­மன்ற அலு­வ­ல­கத்தில் கரை­யோரப் பாது­காப்புத் திணைக்­கள பணிப்­பாளர் நாயகம் பிரபாத் சந்­தி­ர­கீர்த்தி, பொறி­யி­ய­லாளர் டீ.ரீ.ரூப­சிங்ஹ மற்றும் இலங்கை துறை­முக அதி­கா­ர­ச­பையின் திட்­ட­மிடல் பொறி­யி­ய­லாளர் சுசந்த அபே­வர்­தன ஆகி­யோ­ருடன் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஐ.எம்.மன்சூர், எம்.எஸ்.தௌபீக், எம்.எச்.எம்.சல்­மான், கிழக்கு மாகாண சுகா­தார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ், கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரின் இணைப்புச் செய­லாளர் பழீல் ஆகி­யோரும் பங்கு பற்­றினர்.

மண்­ண­ரிப்­பினால் கடல் ஒலுவில் கிரா­மத்­திற்குள் ­பு­கு­வதால் மக்கள் தங்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை மட்­டு­மல்­லாது, தமது வசிப்­பி­டங்­க­ளையும் இழக்கும் அபாயம் நில­வு­வ­தா­கவும், இது சுனாமி அனர்த்­தத்­திற்குப் பின்னர் இப்­பி­ர­தேச மக்கள் எதிர் நோக்கும் மிகப் பெரிய ஆபத்­தென்றும் உய­ர­தி­கா­ரி­க­ளிடம் சுட்­டிக்­காட்­டிய அமைச்சர் ஹக்கீம், இந்தக் கட­ல­ரிப்பை முழு­மை­யாக கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான  அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றை துறை­முகங்களுக்குப் பொறுப்­பான அமைச்சர் அர்­ஜுன ரண­துங்க அமைச்­ச­ர­வைக்குச் சமர்ப்­பிப்­ப­தா­கவும் அத­ன­டிப்­ப­டையில் வடமேல் மாகா­ணத்தில் மார­வில கரை­யோரப் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­படும் கட­ல­ரிப்­பி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கான பாரிய செயல்­திட்­ட­மொன்று அடுத்த கட்­ட­மாக மேற்­கொள்­ளப்­ப­டு­மென்றும் நம்­பிக்கை தெரி­வித்தார்.

உட­ன­டி­யாக இதில் அனு­பவம் வாய்ந்த முன்­னைய ஒப்­பந்­த­க்­கா­ரரைப் பயன்­ப­டுத்தி 200 தொடக்கம் 250 கிலோ நிறை கொண்ட பாரிய பாறாங்­கற்­களைக் கொண்டு ஒலுவில் கட­லோ­ரத்தில் 220 மீற்றர் தூர­மான பிர­தே­சத்தை நிரப்பி கட­ல­ரிப்பை தடுப்­ப­தெ­னவும், அண்­மிய அட்­டா­ளைச்­சேனை போன்ற பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து மேல­திக கடல் மணலை நவீன தொழில்­நுட்­பத்தைக் கையாண்டு ஒலு­விலை நோக்கி உந்­தித்­தள்­ளு­வ­தற்­கான செயற்­பாட்டை முன்­னெ­டுப்­ப­தா­கவும் கூறப்­பட்­டது.

இந்த தொழில்­நுட்­பத்­தினால் மீன்­பிடித் தொழில் போன்­ற­வற்­றிற்கும், நில அமைப்­பிற்கும் பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டிய சாத்­தியம் உண்டா என அமைச்சர் ஹக்கீம் கேள்வி எழுப்­பிய போது அவ்­வா­றான அபாயம் காணப்­ப­ட­வில்லை என கரை­யோரப் பாது­காப்புத் திணைக்­கள உய­ர­தி­கா­ரிகள் பதி­ல­ளித்­தனர்.

அதிக எடை­கொண்ட பாரிய பாறாங்­கற்­களை துறை­முக அதி­கா­ர­ச­பை­யி­ட­மி­ருந்தே பெற்றுக் கொள்ள முடி­யு­மென்றும், சிறிய எடை­கொண்ட கருங்­கற்­களை மாவட்­டத்தின் ஏனைய இடங்­களில் காணப்­படும் கல் உடைக்கும் அகழ்வுக் கிடங்­கு­க­ளிலி­ருந்து பணம் செலுத்தி கொள்­வ­னவு செய்­வ­தென­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இத­ன­டிப்­ப­டையில் உட­ன­டி­யாக ஓரிரு தினங்­க­ளி­லேயே இதற்­கான வேலைகளை ஒலுவில் பிரதேசத்தில் ஆரம்பிப்பதாகவும், அடுத்த கட்டமாக அமைச்சரவை பத்திரத்;தினாலும், பிரதமரின் கீழுள்ள குழுவினரின் அனுமதியைப் பெற்றும் மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாகவும், அத்துடன் காணிகளையும், வதிவிடங்களையும் இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடுகளை இயன்றவரை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

3 comments:

  1. வெறுமனே கடலரிப்பை மட்டும் தடுத்தால் போதும் என்று கற்பாரைகளையும், மணல்களையும் இட்டு போய்விடாமல் அப்பிரதேசத்தை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான திட்டங்களையும், செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. Hello.
    What can you do with just 17 million? Has anyone done a wave / erosion modelling. Just dumping large boulders won't save Oluvil. Rauf is just taking upper hand to show locals that he is doing something. If you just dump boulders without a proper engineering study will result in erosion in other part of the coastal area possibly Addalaichenai or Nintvur.

    ReplyDelete
  3. Hassan சுற்றுலாத்துறையால் ஏனைய பகுதிகளில் இலங்கை போதைப் பொருள் பாவனை.விபச்சாரம் .போன்ற சமுகச் சீர்கேடுகள் ஆக்கிரமித்துள்ளதை கவத்தில் கொள்ள வேண்டும் .சுற்றுலாத் துறையன்றாலே அதன் பின்னணி அழிவுதான்

    ReplyDelete

Powered by Blogger.