September 17, 2016

மனைவி மீது கணவன் தாக்குதல் - தந்தையை கொலைசெய்த 16 வயது மகன்

பதுளை, ஹாலிஎல பகுதியில் தந்தையை கூறிய ஆயுதத்தால் தாக்கி 16 வயது மகன் கொலை செய்துள்ளார்.

மதுபோதையில் வந்த தந்தை தனது தாயாரை தாக்கியதால்  கோபமடைந்த மகன் தாக்கியுள்ளார்.

அதில் படுகாயமடைந்த தந்தை வீட்டிற்கு வெளியில் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில் மகன் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment