Header Ads



இலங்கையின் 1000 பேரின் ஹஜ் கனவு தகர்ந்தது - வேதனையும், கண்ணீரும் மிஞ்சியது


-ARA.Fareel-

ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­டோ­ருக்கு இவ்­வ­ருடம் ஹஜ் கைந­ழுவிப் போய்­விட்­டது. அவர்கள் புனித கட­மைக்­காக ஆயத்­தங்­க­ளுடன் காத்­தி­ருந்­த­வர்கள். எப்­போ­து­மில்­லா­த­வாறு இவ்­வ­ருடம் மேல­திகக் கோட்டா கிடைக்­கப்­போ­கி­றது என்ற நம்­பிக்கை மக்­க­ளுக்கு ஊட்­டப்­பட்­டது. 

ஹஜ் முக­வர்­களும் தமது நலன்­க­ருதி மக்­களின் கட­வுச்­சீட்­டு­களை சேக­ரித்துக் கொண்­டார்கள். சில முக­வர்கள் முற்­ப­ணமும் பெற்றுக் கொண்­டார்கள். 

முஸ்லிம் சமய விவ­கார அமைச்சு இறு­தி­நாளில் அதி­ரடி செய்­தி­யொன்றை வெளி­யிட்­டது ‘மேல­திக ஹஜ் கோட்டா கிடைக்­காது’ என்­பதே அந்தச் செய்தி. ஹஜ் கனவில், ஆன்­மீக சிந்­த­னையில் மூழ்­கி­யி­ருந்­த­வர்கள் ஆடிப்­போய்­விட்­டார்கள். அவர்­களால் கண்­க­லங்­கத்தான் முடிந்­தது. ஹஜ் முகவர்கள் அல்லாஹ் அளந்­தது தான் எமக்குக் கிடைக்கும்.

என்ன செய்ய முடியும். எல்லாம் அல்­லாஹ்வின் நாட்டம் என்று ஆறுதல் அடைந்தார்கள். ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ஹஜ் கடமையை தவ­றவிட்ட மக்­களின் வேத­னை­க­ளையும், அவர்கள் சிந்­திய கண்­ணீ­ரையும் மறந்­து­விட்டு இறுதி ஹஜ் குழு கடந்த 5 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நண்­பகல் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமா­ன­நி­லை­யத்­தி­லி­ருந்து ஜித்தா நோக்கி புறப்­பட்டுச் சென்­றது. 

இக்­கு­ழுவில் முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.எ.ஹலீம், தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, திரு­கோ­ண­மலை மாவட்ட ஐ.தே.கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் அடங்­கி­யி­ருந்­தனர். 

மேலும், அரச ஹஜ் குழுவின் தலைவர் உட்­பட முக்­கி­யஸ்­தர்கள், முஸ்லிம் கலா­சார பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்பாளர் உட்பட அதி­கா­ரி­களும் ஹஜ் கட­மைக்­காக வானில் பறந்தார்கள். அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

1 comment:

  1. அல்லாஹ் எண்ணஙபளுக்கே நற்கூழி தருகிறான்.
    பொறுமையாக இருந்து துஆ செய்வது நல்லது.

    ReplyDelete

Powered by Blogger.