September 01, 2016

துல்ஹஜ் முதல் 10 நாட்களை பயனுள்ளதாய் அமைத்துக்கொள்வோமா..?


அல்லாஹ் தன் அடியார்கள் மீது செய்துள்ள கருணை அவனது சம்மானங்களை அடையும் பொருட்டு சில இடங்கள் காலங்கள் ஆகியவற்றினை சிறப்புமிக்கதாக ஆக்கியுள்ளமை.இதில் எதிர்நோக்கிவருகின்ற துல் ஹஜ் முதல் பத்து நாடகளும் நன்மைகளை அதிகரித்துக்கொள்ளகூடிய  நாட்களாக இருக்கினறன.இதை அறிந்தும் ஞாபகப்படுத்தியும் பயனடையும் பொருட்டு சில விடயங்களின் சுருக்கம். 

இந்த பத்துநாட்களில் பல சிறப்பு மிகு நாட்கள் ஒன்றிணைகின்றன.

1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல் : புகாரி)

2-எட்டாம் நாள் யவ்முத்தர்வியா என அழைக்கப்படும் ஹஜ்ஜின் முக்கியமான கடமைகள் ஆரம்பிக்கின்ற நாள்.இதையடுத்துள்ள 9 நாள் அறபா நாள். நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்:ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:-“ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தை த்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்- புகாரி, முஸ்லிம்)

2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தான தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல்லசெயறபாடுகளில் ஈடுபடுவது.

3- அரஃபா நோன்பு:- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்-முஸ்லிம்)

4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது.இது ஒரு நபிவழியாகும், நபிகளாரை தொடர்ந்த அவர்களது தொழர்களும் இதை செய்தனர்.

முடியுமானவர்கள் உழ்ஹிய்யா எனும் அல்லாஹ்வுக்காக அறுத்துப்பலியிடல். இதில் கலப்படம் இல்லாது அல்லாஹ்வுக்கு மாத்திரம் அமைத்து கொள்ளல் அல்லாஹ் குறிப்பிடும் போது.”நபியே நீர் உம்திறைவனுக்காகவே தொழுது இன்னும் அறுத்துபலியிடவீராக” என.மேலும் அல்லாஹ் குறிப்பிடும் போது  (எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை; ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு - இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22:37). அறுப்புப்ராணிகள் சமூகவலைத்தளங்களை விட்டும் நீஙகி அல்லாஹ்வுக்கு மாத்திரம் என செய்யப்படும் பொது அது மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையும்.இன்னும் தான தர்மங்களை செய்யும் போது மிகச்சிறந்தவற்றையே செலவு செய்தல் வேண்டும்.இதுவே சிறந்ததாகும்.ஆகவே உள்ஹிய்யாவின் போதும் ஏனைய தர்மத்தின் போதும் சிறந்தவற்றை தெரிவு செய்தல் வேண்டும்.அல்லாஹ் குறிப்பிடும் போது “நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற) வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்; அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்; ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள்! நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள் (2:267) இஸ்லாம் காட்டிய அனைத்து விதமான நல்ல செயற்பாடுகளைக் கொண்டு இச்சிறப்புமிகு நாட்களை அழகானதாக மாற்றும் போது சுவனத்தின் இன்பங்களை அல்லாஹ்வின் பேரருளால் நிச்சயம் கிட்டும். 


அபூஉமர் அன்வாரி   


0 கருத்துரைகள்:

Post a Comment