September 30, 2016

ஜிஹாதிய குழுவை, பாதுகாக்கும் அமெரிக்கா - ரஷ்யா குற்றச்சாட்டு

சிரியா அதிபர் அஸாத்தை பதவியிலிருந்து இறக்க சிரியா ஜிஹாதிகள் குழு உதவி தேவைப்படும் பட்சத்தில் அதைப் பயன்படுத்திக்கொள்ள, அமெரிக்கா அந்தக் குழுவை விட்டு வைத்திருப்பதாக ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஆதரவு பெற்ற மிதவாத போராளி குழுக்களிடமிருந்து ஐ.எஸ் அமைப்பினர் மற்றும் பலம் பொருந்திய ஜப்ஹெத் பத்தே அல் ஷாம் (முன்னர் அல்-நூஸ்ரா முன்னணி என்றழைக்கப்பட்டவர்கள்) போன்ற குழுக்களை பிரித்து பார்ப்பதாக அளித்த உறுதிமொழியை அமெரிக்கா உடைத்துவிட்டதாக செர்கெய் லேவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவால் முடியவில்லை அல்லது செய்யத் தயாராக இல்லை என்றும், நூஸ்ரா முன்னணியை அமெரிக்கா அழிக்காமல் விட்டுவைக்க திட்டமிட்டிருப்பதாக நாங்கள் நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிரியாவில் ரஷ்யா வான்வழித்தாக்குதலை தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற்றதை நினைவுகூரும் விதமாக நடைபெற்ற கூட்டத்தின் போது அமைச்சர் இவ்வாறு பேசினார்.

ஷீமோன் பெரெஸின் இறுதிச்சடங்கில் மஹமூத் அப்பாஸ் பங்கேற்பு - ஹமாஸ் கடும் கண்டனம்

இஸ்ரேலை நிறுவிய மூதாதையர்களில் கடைசியானவரான ஷீமோன் பெரெஸின் உடல், உலகத் தலைவர்கள் பங்கேற்ற இறுதிச் சடங்கிற்கு பின்னர், ஜெருசலேமிலுள்ள தேசிய கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடுகளோடு நியாயமான அமைதியான சகவாழ்வு காணும் இஸ்ரேல் என்ற நோக்கத்திற்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் செலவிட்ட பெரெஸின் கனவு இன்னும் நனவாகவில்லை என்று இறுதிச் சடங்கில் அஞ்சலி உரை வழங்கிய போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.

நெல்சன் மண்டேலா போல இருபதாம் நூற்றாண்டின் மாமனிதர்களை ஷீமோன் பெரஸ் தனக்கு நினைவூட்டுவதாக ஒபாமா கூறினார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டோரில் பாலத்தீன தலைவர் மஹமூத் அப்பாஸூம் ஒருவர்.

ஐக்கிய ராஜ்ய இளவரசர் சார்லஸ், பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் இறுதி சடங்கில் கலந்து கொண்டனர்

ஆனால், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் துன்புறும் பாலத்தீனர்களுக்கு காட்டுகின்ற அவமரியாதை என்று கூறி ஹமாஸ் கடும்போக்கு இயக்கம் அப்பாஸ் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதை கண்டித்திருக்கிறது.

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவில் நீதியரசர் சலீம் மர்சூப்

தகவல் அறியும் உரிமை சம்பந்தமான ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.

 அதன்படி தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த கம்மன்பில நியிமிக்கப்பட்டுள்ளதுடன், அதன் உறுப்பினர்களாக சட்டத்தரணி கிசாலி பிண்டோ ஜயவர்தன, எஸ்.ஜீ. புன்சிஹேவா, முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் தியாகநாதன் செல்வகுமாரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 அவர்கள் இன்று மாலை ஜனாதிபதியிடம் இருந்து தமது நியமனக் கடிதங்களை பெற்றுக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம், அமைப்பினரின் அறிக்கை

ஜெனீவா நகரில் அமைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் யாழ்ப்பாண முஸ்லிம் விவகாரம் குறித்து பேசப்பட்ட விவகாரம் தமது அமைப்புக்கு (JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL - JMCI) கிடைத்த வெற்றி  என அவ்வமைப்பின் பிரதான ஏற்பாட்டாளர் ஜவாமில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பட்டுள்ளதாவது,

வெளிநாடுகளில் வாழும் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்களை உணர்வு ரீதியான ஒன்றுதிரட்டி நாங்கள் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பை நிறுவியுள்ளோம். இது யாழ்ப்பாண முஸ்லிம்களின் நலன்கருதி செயற்படும். எமது அமைப்பு ஜெனீவா சென்று அங்கு அமர்வொன்றையும் நடத்தியது. இதன்  சாதகங்ளை காலப்போக்கில் எமது சமூகம் அறிந்துகொள்ளும்.

எமது அமைப்பு இந்த அமர்வில் பங்குகொண்டதன் விளைவாக தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுபான்மை தொடர்பான விவகார அலுவலகத்துடன் உத்தியோகபூர்வ தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்களில் ஜெனீவாவில் எமது அமைப்பு மற்றுமொரு கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளது.

ஐ.நா. அதிகாரி ரீட்டா ஐசக்  சார்பில் இதுதொடர்பில் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸை தலைமையகமாக கொண்டு செயற்படும் சர்வதேச யாழ்ப்பாணம் முஸ்லிம் அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை கருதுகிறோம்.

எதிர்வரும் மார்ச் மாதமளவில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள்  பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் யாழ்பாண முஸ்லிம்களின் நலன்களையும் பேசு பொருளாக்க திட்டமிட்டுள்ளோம்.

அந்த அமர்விலே சர்வதேச யாழ் முஸ்லிம் அமைப்பின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் நிச்சயம் பங்கேற்பார்கள்.

அந்தவகையில் சர்வதேச யாழ்ப்பாண முஸ்லிம் அமைப்பினருக்கு ஒத்துழைப்பு நல்கும் சகல உள்ளங்களுக்கு நன்றிகள். எமது அமைப்பினரின் சுயநலமில்லாத சேவை தொடருமென உறுதியளிக்கிறோம்.


ஜவாமில்

(JAFFNA MUSLIM COMMUNITY INTERNATIONAL - JMCI)

வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டும்


எதிர்வரும் 2018ஆம் ஆண்டு முதல், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் அனைவரும், கட்டாயமாக ஆங்கில மொழி அறிந்திருக்க வேண்டுமென்ற நிபந்தனையை அமுல்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இதனை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரல தெரிவித்தார்.

இந்நிலையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பை நாடுவோருக்கான ஆங்கில பயிற்சி நெறி ஒன்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமா..? - அரசு தெளிவுபடுத்த வேண்டும் - கோத்தபாய

நாம் ஆட்சி செய்த காலத்தில் வடக்கில் உள்ளவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால் தற்போது அவர்கள் பேசி வருகின்றனர். என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்த போது ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் கூறினார்.

மேலும் தற்போது விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டுமா? இனவாதக் கருத்துகளை அவர் முன்வைத்தாரா என்று விரிவான விளக்கத்தை தற்போதைய அரசே கொடுக்க வேண்டும்.

அல்லது வடக்கில் மட்டும் இனவாதக் கருத்துகளை முன்வைக்க முடியுமா? அதற்கு அனுமதி உள்ளதா என தற்போதைய அரசே தீர்மானிக்க வேண்டும்.

மேலும் ஒரு தரப்பினர் இனவாதக்கருத்துகளை முன்வைக்கின்றார்கள் என கைது செய்யப்படுகின்றார்கள் ஆனால் மற்ற தரப்பினர் அவ்வாறு கைது செய்யப்படுவார்களா என்பது தொடர்பில் அரசே தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

எனது தொலைபேசி, ஒட்டு கேட்கப்படுகிறது - மகிந்த

அரசாங்கத்துடனான இணக்கத்தின் அடிப்படையிலேயே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல்வேறு பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி திரும்பி செல்லும் போது ஊடகவியலாளர்களிடம் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் எந்த பணிகளையும் செய்வதில்லை என்பதால், அதனை மறைக்க விக்னேஸ்வரன் ஊடாக இவ்வாறன நிலைமையை உருவாக்கி வருகிறது.

நீதிபதிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன. இதனால், நீதிபதிகள் தீர்ப்புகளை வழங்க அஞ்சுகின்றனர்.

எனது தொலைபேசியும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது. என்னிடம் பேசிய அமைச்சர்களிடம், என்னிடம் பேசினீர்களாக என கேட்டுள்ளனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ரஞ்சனின் திரைப்படம் காண்பிப்பதை, நிறுத்துமாறு கோரிக்கை

பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகியுள்ள புதிய திரைப்படமான மாயா திரைப்படத்தை ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.
அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

கடந்த 27ம் திகதி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது இல்லத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் இறுதியில் ஊடகவியலாளர் ஒருவரை திட்டி அச்சுறுத்தி, கமராவை தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

நுகர்வோரான மக்கள் ஊடகங்கள் வாயிலாகவே தகவல்களை பெற்றுக்கொண்டனர்.தகவல்களை அறிந்து கொள்வது நுகர்வோரின் உரிமை. அந்த உரிமை மீற மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த வகையிலும் உரிமையில்லை.

தனது கருத்தை வெளியிட ஊடகவியலாளர் ஒருவருக்கு இருக்கும் புனிதமான உரிமையை நாங்கள் மதிக்கும் அதேவேளை ஊடகவியலாளர்களுடன் எப்படி நடந்து கொள்ள தேவையான பயிற்சிகளை அரசியலவாதிகளுக்கு வழங்க வேண்டும் என்பதே எமது அமைப்பின் நிலைப்பாடாகும்.

ரஞ்சன் ராமநாயக்கவின் மாயா திரைப்படம் ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்படுவதை பிரதமர் உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும்.
தான் எந்த வகையிலும் ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்று கூற ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உரிமை இருக்கின்றது. அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது மக்களுக்குரிய உரிமை.

நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ரஞ்சன் ராமநாயக்கவின் ஆதரவாளர்கள் அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஊடகங்களுக்கு எதிரில் வெறித்தனமாக நடந்து கொள்ளும் நாய்களை கட்டிப்போட வேண்டும் என்று நல்லாட்சியிடம் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை ஜனாதிபதி புரிந்து கொள்ள வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

நிந்தவூரில் உள்ள அனல் மின் நிலையத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

-மு.இ.உமர் அலி -

நிந்தவூர்  23ஆம் பிரிவு அட்டப்பள்ளம் கிராமத்தில்  உள்ள BIO MASS ENERGY  நிறுவனத்திற்கு சொந்தமான  அனல் மின்சார உற்பத்தி  நிலையத்துக்கு  எதிரான ஆர்ப்பாட்டம்  இன்று  ஜூம்மா தொழுகையினை  தொடர்ந்து நிந்தவூர் பெரிய பள்ளிவாசலில் ஆரம்பித்து  பிரதேச செயலகம் வரை கால்நடையாக தொடர்ந்தது.ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர் .மிகவும் அமைதியாக நடைபெற்ற இப்பேரணியில் மக்கள் தமது பாதிப்புக்களை வெளிக்காட்டும் வசனங்களடங்கிய பதாகைகளை ஏந்தியவண்ணம் சுலோகங்களையும் கோசித்தனர்.

குறித்த நிறுவனத்தினால் பல  சூழல் பிரச்சினைகள்  ஏற்படுவதாகவும்,தமது நாளாந்த வாழ்க்கைக்கு அப்பிரச்சினைகள் அச்சுறுத்தலாக  அமைவதாகவும்,எனவே இந்நிலையத்தை  அகற்றும்படி கோருகிறோம் என   நிந்தவூர் 23ஆம் பிரிவு  கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர்  AL  இப்ராஹீம் அவர்கள் பிரதேச செயலாளரிடம்  மகஜர்  கையளித்த பின்னர்  ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தார்.


நிந்தவூர் பிரதேச செயலாளர் அவர்களுடனான நேர்காணலின்போது “இந்த பிரச்சினை தொடர்பாக  அம்பாறை மாவட்ட  மேலதிக அரசாங்க  அதிபர் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது ,இக் கூட்டத்திபோது இதனை ஆராய ஒரு உயர்மட்டக்குழு  ஸ்தாபிக்கப்பட்டுள்ளது,மற்றும்  இரண்டு வாரங்களில்  இது சம்மந்தமான  தொழில்நுட்ப அறிக்கைககள்  கோரப்பட்டுள்ளன அவை கிடைக்கப்பெற்றதும் மேலதிக நடவடிக்கைகள்  எடுக்கப்படும்  என கருத்துக் கூறினார்.

நெல் உமியினால் இயங்கும் இந்த  அனல் மின் நிலையத்தினால் இரண்டு  மெகா வாட்  மின்சாரம் தேசிய மின்சார சுற்றுக்கு வழங்கப்படுகின்றது.அத்துடன் இந்த பிரதேச மக்கள்  குறைந்த வருமானம் உள்ளவர்கள். மரக்கறி உட்பட உணவுப்பயிர்செய்கையே  இங்கு வாழும் மக்களின் பிரதான தொழில் என்பது  குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பொதுமக்கள் மீது வன்முறை - சாய்ந்தமருதுவில் எதிர்ப்பு பேரணி

- யூ. கே. காலித்தீன் -

காஷ்மீர் அப்பாவிப் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கும், இந்தியா அரசின் வெறியாட்டத்தை கண்டித்ததும் சாய்ந்தமருது  பெரிய பள்ளிவாசல் மற்றும் தக்வா ஜூம் ஆ பள்ளிவாசல் முன்பாகவும், முஸ்லிம் இளைஞர்கள் சமூக ஆய்வு அமையத்தின் (MYSRO) அமைப்பினாலும், சாய்ந்தமருது.

 சன்புளவர் விளையாட்டு கழகத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்திரளான பொதுமக்களும் அமைப்புகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு காஷ்மீருக்கு ஆதரவாக தமது அமைதியான பேரணியினை மேற்கொண்டனர்.


கோட்டாபய பிணையில், வெளியே வந்தார்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட அறுவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 கொழும்பு பிரதம நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு எமக்கே உரியது, தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது - ஞானசார

வடக்கு எமக்கே உரியது இலங்கையில் 2500 வருட பழமையான இனம் சிங்கள இனமே அதனால் வடக்கை தமிழர்கள் உரிமை கொண்டாட முடியாது என கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இன்று வவுனியா நகரில் பொதுபல சேனா ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழர்கள் இலங்கையை அல்லது வடக்கை சொந்தம் கொண்டாட முடியாது பெரும்பான்மை இனத்தனவரான சிங்களவர்களுக்கே வடக்கு சொந்தம்.
மேலும் வடக்கில் விகாரைகள் அகற்றப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றது அவை அனைத்தும் முறைகேடானது.

இலங்கையை உருவாக்கியது பௌத்தர்களே அவர்களுக்கு எங்கும் விகாரைகள் எழுப்ப உரிமையுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த போராட்டம் வெறும் ஆரம்பம் மட்டுமே எமக்கான உரிமைகளை பெற்றுக் கொள்ளும் வரை போராட்டம் தொடரும். அடுத்து யாழ்ப்பாணத்திலும் சென்று ஆர்ப்பாட்டம் நடத்த எமக்கு முடியும் அதற்கான உரிமையும் எமக்கு உண்டு எனவும் தேரர் பகிரங்கமாக தெரிவித்தார்.

இதேவேளை தமிழர் வாழும் இடத்தில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை நீங்கள் செய்யும் போது தமிழர்கள் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த மாட்டார்களா? அவர்களுக்கு அதிர்ப்தி அளிக்காதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

தமிழர்களுக்கு இங்கு எந்த பிரச்சினையும் இல்லை, இந்த போராட்டத்தை நடத்துபவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்களவர்கள் நாம் எமக்கு அதற்கான உரிமை உள்ளது.

எந்த பிரச்சினை வந்தாலும் அதற்கு முகம் கொடுத்து நாம் எமது கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் வடக்கை பெற்றுக்கொள்வோம் எனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மைத்திரிக்கு முதுகெலும்பில் பலம் இல்லாததால், விக்னேஸ்வரன் ஆடுகிறார்

நாட்டின் தலைவருக்கு முதுகெலும்பில் பலம் இல்லாத காரணத்தினாலேயே வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆடுவதாக மகரகம நகர சபையின் முன்னாள் தலைவர் காந்தி கொடிக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ந்தும் இனவாத கருத்துக்களை வெளியிட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறி வரும் நிலையில், அவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தாதது பிரச்சினைக்குரியது.

முதுகெலும்புள்ள தலைவர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே விக்னேஸ்வரன் போன்றவர்கள் இப்படி ஆடுகின்றனர்.

முதுகெலும்புள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக தாம் தொடர்ந்தும் போராடப் போவதாகவும் காந்தி கொடிக்கார குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தினால் பழிவாங்கப்படுகிறோம் - நசீர் அஹமட்

(எம்.ஏ.றமீஸ்)

மாகாணங்களுக்கான ஒட்டுமொத்த அதிகாரப் பரவலாக்கங்களை வழங்கியதாகச் சொல்லும் மத்திய அரசாங்கம் பல்வேறான விடயங்களில் வேண்டுமென்றே மாகாண அரசாங்கங்களை கொச்சைப்படுத்தும் விதமாகச் செயற்பட்டு வருகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஏ.ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பாயிஸா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றைய தினம்(29) கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிபர் எம்.ஏ.ஏ.செய்னுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

எமது கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் மத்திய அரசாங்கத்தினால் வேண்டுமென்றே எமது மாகாணம் பாரபட்சமான முறையில் பழிவாங்கப்படுவதை கண்ணூடாகக் காணக் கிடைக்கின்றது. குறிப்பாக ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நாம் முற்படுகின்றபோது மத்திய அரசின் தலையீட்டினால் பல்வேறான அசௌகரியங்களை நாம் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரயர் வெற்றிடங்களை நிரப்ப முற்படும் மத்திய அரசாங்கத்தில் உள்ள கல்வி அமைச்சு மற்றும் அதனோடிணைந்த அதிகாரிகள் வடமாகாணத்தில் உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை எந்தவித போட்டிப் பரீட்சையும் இன்றி நிரப்பியுள்ளமை எமது மாகாணத்தினை வேண்டுமென்றே பழிவாங்கி எம்மவர்களை கொச்சைப்படுத்தும் செயலாகப் பார்க்க வேண்டியுள்ளது.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் ஆங்கிலம், கணிதம் மற்றும் விஞ்ஞானத்துறை ஆசிரியர்களுக்காக சுமார் 1134 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அவ் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் பட்டதாரிகள் மத்தியில் நடாத்திய பரீட்சையில் இருந்து வெறும் 390 பேர் மாத்திரமே சித்தி பெற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் கணிதப்பாடத்திற்காக எமது மாகாணத்தில் 434 ஆசிரியர் வெற்றிடம் காணப்படுகின்றன. ஆனால் அதற்காக பரீட்சையில் தோற்றி சித்தி பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 66 மட்டுமே உள்ளது. இவ்வாறான நிலை தொடர்ந்து கொண்டு சென்றால் எமது மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்களை எவ்வாறு நாம் நிவர்த்தி செய்வது? எப்படித்தான் எமது மாகாணத்தின் கல்வி நிலையினை உயர்த்துவது?

மிக விரைவில் கல்விக்கல்லூரிகளில் இருந்து டிப்ளோமாதாரிகளாக வெளியாகியுள்ள ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ளன. அதனடிப்படையில் எமது மாகாணத்தில் விஞ்ஞானத்துறைக்கு 332 ஆசிரியர்களும், கணிதத்துறைக்கு 604 ஆசிரியர்களும், ஆங்கிலப்பாடத்திற்கு 652 ஆசிரியர்களும் வெற்றிடமாக உள்ளன. இந்நிலைமை இவ்வாறிருக்க எமது மாகாணத்தினைச் சேர்ந்த ஆசிரிய டிப்ளோமா தாரிகளை வேறு மாகாணங்களுக்கு நியமிக்க மத்தி அரசாங்கம் முனைந்து கொண்டிருப்பதை நாம் எவ்வாறு கண்டிக்காமல் விடுவது?

இவ்வாறாக தொடர்தேர்ச்சியாக மத்திய அரசாங்கம் கல்வி விடயத்தில் நடந்து கொண்டு வேண்டுமென்றே எம்மைக் கொச்சைப்படுத்தும் செயற்பாட்டினை நாம் கண்மூடிகளாக இருந்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறான விடயங்களைக் கண்டித்து எமக்கான அனைத்து விடயங்களும் உரிய முறையில் பாரபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக நின்று நாம் செயற்பட்டு வருகின்றோம்.

எமது கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தின் ஆட்சியினைக் கையில் எடுத்து சுமார் ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட நிலையில் பல்வேறான சவால்களை நாம் எதிர்நோக்கியுள்ளோம். குறிப்பாக நாம் ஆட்சியினை பாரமெடுக்கின்றபோது எமது மாகாணத்தில் எவ்வித ஆசிரியர் பற்றாக்குறையுமற்ற குறிப்பாக ஆசிரியர்கள் அதிகமுள்ள மாகாணமாக சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் நான் முதலமைச்சர் என்ற வகையில் கிழக்கில் உள்ள அதிகமான பாடசாலைகளுக்குச் செல்கின்றபோது ஆசிரியர் பற்றாக்குறை பற்றி என்னிடம் பாடசாலை அதிபர்கள் முறையிட்டு வந்நனர்.

இந்நிலைமையினைக் கருத்திற்கொண்டு முன்னாள் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட மாகாணக் கல்விப்பணிப்பாளர் போன்றோரிடம் வலய ரீதியாக ஆசிரியர்களின் விபரங்களை வலயக் கல்விப்பணிப்பாளர் மாகாணக் கல்விப்பணிப்பாளர் போன்றோரின் கையொப்பத்துடன் வழங்குமாறு பணிப்புரையொன்றை விடுத்திருந்தேன். அதற்கமைவாக கடந்த மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அவர்கள் செயற்பட்டதற்கமைவாக எமது மாகாணத்தில் சுமார் 2568 ஆசிரியர்கள் வெற்றிடமாக உள்ளதாக தகவல்களை வழங்கினார்கள்.

அதுமட்டுமல்லாமல் தொடர்சியாக 2016ஆம் ஆண்டுக்காக தேவைப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை தற்போதைய நிலவரத்தின்படி கணக்கிட்டபோது தற்போது எமது கிழக்கு மாகாணத்தில் 5021 ஆசிரியர்கள் வெற்றிடமாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகள் போன்றவற்றில் இருந்து கல்வி நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து வெளியாகுபவர்களுக்கு மத்திய அரசாங்கத்தினால் பரீட்சைகள் நடாத்தி சான்றுப்பத்திரங்களும் வழங்கப்படுகின்றன. இவ்வாறானவர்கள் மத்தியில் போட்டிப் பரீட்சையொன்றை நடாத்தி மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களைக் மத்திய அரசாங்கமே கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளை நாம் பார்க்கின்றோம். குறிப்பாக ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியர்கள் தேவையென்றால் ஆங்கிலத்துறை சம்மந்மாக அவர்கள் பரீட்சிக்கப்பட்டு அவர்களைத் தெரிவு செய்யலாம். ஆனால் ஆங்கலப்பாடத்திற்காக ஆசிரியர்கள் தேவைப்படுகின்றபோது அவர்கள் மத்தியில் நுண்ணறிவு போன்ற பரீட்சைகளை நடாத்தி அவர்களை வேண்டுமென்றே தோற்கடிக்க முனையும் மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாம் கண்டிக்கின்றோம். எதிர்காலத்தில் கல்வி அமைச்சு உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் எமக்கான விடங்களில் பாகுபாடு காட்டாமல் செயற்படுமாறு வேண்டுகின்றோம் என்றார்.

கட்­டா­ய­மாக பெண்கள் நிகாப் அணிய வேண்டும் - இதுவே உலமா சபையின் நிலைப்­பா­டு - ரிஸ்வி முப்தி

-விடிவெள்ளி-

பெண்கள் நிகாப் அணி­வதை ஜம்­இய்­யதுல் உலமா வாஜிப் என்­ப­தாக கரு­து­கி­ற­து. கட்­டா­ய­மாக பெண்கள் நிகாப் அணிய வேண்டும் என 2007 இல் வெளியிட்ட பத்­வா­வின் அடிப்­ப­டை­யி­லா­ன நிலைப்­பாட்டிலே­யே அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இன்னும் உள்­ளது என அதன் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி குறிப்­பிட்டார்.

அத்­துடன் நிகாபை தடை செய்­வ­தற்கு யாரேனும் முற்­பட்டால் அதற்­கெ­தி­ராக போராட வேண்­டி­யது பாரா­ளு­மன்­றத்தில் உள்ள 21 முஸ்லிம் எம்.பி.க்­க­ளி­னதும் ஏனைய சகல முஸ்­லிம்­க­ளி­னதும் கட­மை­யாகும் என்றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.

கடந்த 23.09.2016 வெள்ளிக்­கி­ழமை கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நிகழ்த்­திய குத்பா பிர­சங்­கத்­தி­­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்­டார். அதில் அவர் மேலும் குறிப்­பி­டு­­கை­யில், 

உலகத்தில் பெண்கள் முகத்­திரை அணியும் விட­யத்தை  ஒரு சர்ச்­சை­யான விய­ட­மாக மாற்றி விமர்­சித்துக் கொண்­டி­ருக்கும் கால கட்ட­த்தில் நாம் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிறோம். உல­கத்தில் குறிப்­பிட்ட சில நாடு­கள்தான் நிகாபை தடை செய்­தி­ருக்­கின்­றன. ஆனால் உலகின் பல நாடு­களில் இதனை வர­வேற்­கி­றார்கள். கண்­ணி­யப்­ப­டுத்­து­கி­றார்கள்.  

நிகாப் அணியும் உரிமை வழங்­கப்­பட வேண்டும் என்று சொல்­கி­றார்­கள்.

இமாம் ஷாபியீ அவர்­க­ளுடைய கிரந்­தங்­களின் அடிப்­ப­டை­யி­லேயே இந்த நாட்டின் வக்பு சட்டம், முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் என்­பன இயற்­றப்­பட்­டுள்­ள­ன. ஜம்­இ­ய்­யதுல் உல­மாவும் தனது பத்­வாவை வழங்கும் போது தன்­னிச்­சை­யாக செயற்­ப­டு­வ­தில்லை. அதற்கும் ஒரு கோட்­பாடு இருக்­கி­றது. 1924 இலி­ருந்து உல­மாக்கள் பத்­வாக்­க­ளை ஷாபியீ மத்­ஹபின் அடிப்­ப­டை­யி­லேயே வழங்கி வரு­கி­றார்­கள். 

 யுத்­தம் நடை­பெற்ற 30 வருட காலத்­திலும் இலங்­கையில் நிகாபை அணிந்த பெண்கள் இருக்­கி­றார்கள். நிகாப் அணியாத பெண்­களும் இருக்­கி­றார்கள்.  

அந்த அடிப்­ப­­டையில் 2007 இல் ஜம்­இய்­யதுல் உலமா தனது பத்­வாவை வழங்­கி­யி­ருக்­கி­றது. அதற்­க­மைய பெண்கள் நிகாப் அணி­வதை ஜம்­இய்­யதுல் உலமா வாஜிப் என்­ப­தாக கரு­து­கி­ற­து. கட்­டா­ய­மாக பெண்கள் நிகாப் அணிய வேண்டும் என்ற அந்த நிலைப்­பாட்டையே ஜம்­இய்­யதுல் உலமா எடுக்­கி­றது.  

இதை நான் பெப்­ர­வரி மாதம் 5 ஆம் திகதி சம்­மான்­கோட்டை பள்­ளி­வா­சலில் பிர­சங்கம் நிக­ழ்த்­தும்­போதும்  மார்ச் மாதம் 11 ஆம் திகதியும் ஜூலை மாதத்தில் பேசி­யதும் இன்று பேசு­வதிலும் எந்­த­வி­த­மான மாற்­றுக் கருத்­தும் கிடை­யாது. இதில் நாம் மிகத் தெளிவாக இருக்­கிறோம். நிகாப் என்­பது வாஜி­­பா­னது. அது கட்­டா­ய­மா­னது. 

இந்த நாட்டில் நிகாபை எதிர்க்கக் கூடி­ய­வர்கள் எவருமே இருக்­க­மாட்­டார்கள். பெண்கள் தமது மானத்தை கண்­ணி­யத்­­தை பாது­காக்க வேண்டும் என்­பதில் எல்­லோரும் ஒரு­மித்த கருத்­தி­லேயே இருக்­கி­றார்­கள். ஆனால் அதே­நே­ரத்தில் மாற்­றுக் கருத்­துள்­ள­வர்­க­ளையும் மதிக்க வேண்­டும் என்ற நிலைப்­பாட்டை ஜம்­இய்­யதுல் உலமா தன்னு­டைய  ஒற்­று­மைப்­ பி­ர­க­ட­னத்­தில் வலி­யு­­றுத்­­தி­யி­ருக்­கி­ற­து.

2007 இல் நாம் ஷாபியீ மத்­ஹபின் அடிப்­ப­டையில் நிகாப் வாஜிப் எனும் பத்­வாவை வெளியிட்ட அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா,  2009 இல் வெளியிட்ட ஒற்­றுமைப் பிர­க­ட­னத்­துக்கு அமை­வாக மாற்றக் கருத்­துக்­க­ளையும் மதித்து நடக்­கு­மாறு வலி­யு­றுத்­து­­­கி­ற­து.

எனினும் நிகாப் விட­யத்தில் 2007 இல் வெளியிட்ட பத்­வா­­­வு­டைய அதே நிலைப்­பாட்­டில்தான் இருக்­கி­றது என்­பதை வலி­யு­றுத்­து­கி­ற­து. நிகாப் என்­பது இஸ்­லா­மிய அடை­யா­ள­மாக இன்று காட்­சி­ய­ளிக்­கி­றது.

இதற்கு எதி­ராக யாரேனும் சட்­டங்­களை கொண்டு வந்தால் முஸ்­லிம்கள் அதனை தன்­னு­டைய உரி­மை­யாக எடுத்து அதற்­காக போராட வேண்டும். எங்­க­ளுக்­கி­டையில் நிலவும் சண்டை சச்­ச­ர­வு­களை இன்­றோடு விட்­டு­விட வேண்டும் என்­ப­தற்­கா­க­த்தான் இரண்­டா­வது தட­வை­யா­கவும் இந்த விட­யத்­­தை குத்­பாவில் குறிப்­பி­டு­கிறேன்.

இந்த விட­யத்தை வட்ஸ் அப்­க­ளிலும் ஊடகங்­க­ளிலும் பேசுவதையும் இதை வைத்து ஒரு­வ­­ருக்­கொ­ருவர் மோதிக் கொள்­கின்ற நிலை ஏற்­ப­டு­வ­தை­யும் தவிர்த்­துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்­டிலே அதா­னுக்கு ஏற்­பட்­டது போன்ற ஒரு சோக­மான நிலை­மையை ஏற்­ப­டுத்த வேண்டாம் என்ற எச்­ச­ரிக்­கை­­யையும் இந்த இடத்தில் உங்­க­ளுக்கு விடுக்க விரும்­பு­கிறேன் என்றும் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி மேலும் குறிப்­பிட்­டார்.

சர்வதேச அரங்கில் விரிவடையும் 'மைத்திரி - ரணில்' பனிப்போர்

அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கிடையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் இடம்பெற்ற சந்திப்பில் என்ன நடந்தது என்பதை அறிவது ஆர்வத்தைத் தூண்டியது. இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அமெரிக்காவின் உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் ஜோன் கெரிக்கு தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இந்தத் தகவலை வாசித்த கெரி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அரசாங்கத்திற்கும் இடையிலான தற்போதைய நிலவரம் தொடர்பாக மைத்திரியிடம் வினவினார். ஜோன் கெரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் சிறிலங்காவின் தேசிய அரசாங்கம் தொடர்பாக வினவுமாறு நிஷா பிஸ்வால் கேட்டமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மைத்திரி சந்தேகம் கொண்டிருந்தால் அது நியாயமானது.

எனினும், நிஷா பிஸ்வாலின் செய்திக்குறிப்புத் தொடர்பாக மங்களவும் ரணிலுமே உண்மையில் மகிழ்ச்சியடைந்தனர்.  மைத்திரிபாலவுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்திருந்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பாக ரணில் குழப்பமடைந்திருந்தமையே இதற்கான காரணமாகும்.

தனக்கோ அல்லது தனது உதவியாளருக்கோ அறிவிக்காமல் தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்காவிற்குச் சென்றமை தொடர்பில் ரணில் சந்தேகம் கொண்டிருந்தார். ஏனெனில் மகிந்தவைப் பயன்படுத்தி சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு ரணில் முயற்சிப்பதாக இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டே ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களை மைத்திரிபால தனது அமெரிக்காவிற்கான பயணத்தின் போது தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார் என ரணில் நம்பமுடியும்.

எனினும், மைத்திரியுடன் அமெரிக்காவிற்குப் பயணம் செய்த ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ரணில் தரப்பு விசாரணை செய்யும் என்பதிலும் எவ்வித சந்தேகமுமில்லை. இந்தச் செய்தியானது மைத்திரிக்கு எதிரான ஒன்றாகும்.

ரணிலிடம் அறிவிக்காது ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியுயோர்க்கிற்குப் பயணம் செய்திருந்தால், இந்தப் பிரச்சினை தொடர்பாக ரணில் மற்றும் மைத்திரிக்கு இடையில் கலந்துரையாடப்பட்டு தீர்வு காணப்பட்டிருக்கும். எனினும், இந்த விடயத்தை ஊடகங்களின் மூலம் வெளியிடுவதன் மூலம் இந்த நாடு மட்டுமல்லாது அனைத்துலக நாடுகள் மத்தியிலும் மைத்திரி மற்றும் ரணில் ஆகிய இரு தலைவர்களுக்கும் இடையில் பாரியதொரு முரண்பாடு உள்ளது என்கின்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்காவின் தேசிய அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவே ஜோன் கெரி வினவியிருந்தாரா அல்லது இல்லையா என்பது எமக்குத் தெரியாது. எனினும் இந்தச் செய்திக்குறிப்பானது நிஷா பிஸ்வாலால் அனுப்பப்பட்டமையே இங்கு முக்கிய விடயமாகும். இவர் அமைச்சர் மங்கள சமரவீரவின் நண்பியாவார்.

மங்களவின் வெளிவிவகார அமைச்சுடன் ரணில் முன்னர் முரண்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் பின்னர் அவர் அதனை மறந்துவிட்டார். வெளிவிவகாரக் கொள்கையானது மங்களவின் வெளிவிவகார அமைச்சால் சரியான வகையில் அமுல்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய ரணில் புதிதாக ஆணைக்குழுக்களை நியமித்திருந்தார். இது மட்டுமல்லாது, இந்த விடயம் தொடர்பாக ரணில், மைத்திரியுடனும் கலந்துரையாடியிருந்தார்.

இந்நிலையில் வெளிவிவாகார அமைச்சில் தலையீடு செய்வதை ரணில் திடீரென நிறுத்தியமைக்கான காரணம் எமக்குத் தெரியாது. ஏனெனில் மங்கள, ரணிலின் கருத்தை அனைத்துலக சமூகத்திற்கு எடுத்துச் சென்றிருந்தமையாக இருக்கலாம்.

அனைத்துலக சமூகத்தின் மனதை வென்றெடுப்பதற்காக மைத்திரி மற்றும் ரணில் ஆகியோருக்கு இடையில் பனிப்போர் ஒன்று ஆரம்பித்துள்ளமை தெளிவாகிறது. இந்தப் பனிப்போரில் ரணிலிற்கு ஆதரவாகவே மங்கள செயற்படுவதாக மைத்திரி தரப்புக் கருதுகிறது. இதன்காரணமாக போர்க் குற்றங்கள் தொடர்பாக மங்களவால் கூறப்படும் கருத்துக்களை மைத்திரி தரப்பு மறுத்து வருகிறது.

இதில் முதலாவது விடயம் மைத்திரியும் அவரது  தரப்பினரும் மகிந்த மற்றும் ராஜபக்ச குடும்பத்தை அரசியலிலிருந்து ஒதுங்கச் செய்வதற்கு முயற்சிக்கின்றனர். போர்க்குற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரலானது அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளில் ஒரு தடையாக இருப்பதாக இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் இந்த விடயம் சிங்கள பௌத்த மக்களை மகிந்தவிற்குப் பின்னால் அணிதிரள வைக்கும் என மைத்திரி தரப்புக் கருதுகிறது. ஆகவே, சிங்கள பௌத்த மக்களால் போர்க் குற்றங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் எவ்வாறு நோக்கப்படுகிறது என்பதற்கமைவாக அதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உலகத் தமிழ் பேரவை போன்ற புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் மங்கள மிகவும் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறார் என்பது வெளிப்படை. இதற்கு ரணில் எவ்வித எதிர்ப்பையும் வெளியிடவில்லை. ஏனெனில் இதன்மூலம் அடுத்த பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கை ஐ.தே.க வெல்வதற்கான சாத்தியம் உள்ளதாக ரணில் கருதுகிறார்.

அனைத்துலக சமூகத்தின் இதயத்தை வெல்வதற்காக ரணில் மற்றும் மைத்திரிக்கு இடையில் இடம்பெறும் பனிப்போரானது அடுத்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை வெல்வதற்கான ஒரு முயற்சியாக உள்ளது.

புலம்பெயர் தமிழ்மக்களின் மனங்களை வெல்வதன்மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை ஐ.தே.க வசம் பெற்றுக்கொள்ளலாம் என ரணிலிடம் மங்கள நம்பிக்கை தெரிவித்திருக்கலாம். இதன்காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பில் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாகவே பணியாற்ற வேண்டும் என ரணிலிடம் மங்கள எடுத்துக்கூறுவதற்கான சாத்தியம் உள்ளது.

எனினும், ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் அரசியலில் தலைதூக்கக் கூடாது என்ற மைத்திரியின் அரசியற் திட்டமானது மங்களவின் நிகழ்ச்சி நிரல் மூலம் அழிவடையலாம் என மைத்திரி அச்சமடைவதாகவும் நோக்கலாம்.

-வழிமூலம்       – சிலோன் ருடே ஆங்கிலத்தில் – உபுல் ஜோசப் பெர்னான்டோ மொழியாக்கம்- நித்தியபாரதி-

புற்றுநோய்க்கு எதிராக, போராட விரும்புகிறீர்களா..?


இலங்கையின் மிகப்பெரும் அபாயமாக புற்றுநோய் விளங்குகிறது. பிரதான புற்றுநோய் சிகிச்சையளிப்பு வைத்தியசாலையாக மஹரகம விளங்குகிறது. இந்த வைத்தியசாலைக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கிற போதிலும் அது போதுமானதாக இல்லை. இந்த வைத்தியசாலைக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கதீஜா பௌண்டேசனும், அதன் நிறுவனர் மொஹமட் ஹாஜியும், அதன் ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு இலங்கையர்களிடையே 252 மில்லியன் ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். அந்த நிதியில் நவீன பெட் ஸ்கேன் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

எனினும் மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு இன்னும் பலபல தேவைகள் உள்ளன. ஆசியாவில் சிறந்த புற்றுநோய் வைத்தியசாலையாக மஹரகம வைத்தியசாலையை மாற்றியமைகக்வும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உயர் பணியில் நீங்களும் ஒத்துழைப்பு வழங்கலாம்..!

Dear Sri Lankans,

We are the Fight Cancer Team in Sri Lanka, who raised a fund of 252mn to donate a PET Scanner to the National Cancer Institute of Maharagama.

Our team consists of 115 members now who are Sri Lankans living worldwide. 

We are a team with a vision to promote our National Cancer Institute of Maharagama to the "Best Cancer Hospital of South Asia" standard in order to prevent cancer from being the no.1 killer disease in Sri Lanka by 2020. 

To achieve a hospital that battles cancer with its full strength and capacity, our mission requires more soldiers to fight for this humanitarian course. 

Our fight is only a fair struggle in the name of mankind, and to serve and repay our motherland with all our dues and respect.

After the PET Scanner is donated, our wish is to donate all other required medical equipment to the hospital. 

The list includes:
Pet Scanner
MRI Scanner
CT Scanner
Endoscopy Unit
Broncoscopes
Colonoscopes
Ultra Sound Scanner
Genetic Lab
Ambulances
Hearses and etc.

To propagate our mission, the current plan is to get 250 members who could effectively involve in it. 

Please note that members are the driving force of this course. Hence we need more influential and strong warriors involved. 

This is an open request to send in details for those who wish to join us. Please write to us with following details.

*Name
*Country
*Profession
*How can you help Fight Cancer Team as a volunteer
*Email Address
*Watsapp no

Please contact:
MSH Mohamed,
Fight Cancer Team Sri Lanka
Via Watsapp +94712799648

ஞானசாரருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை, திருத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் வழக்கு விசா­ர­ணைகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்­த­போது நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை அவ­ம­திக்கும் வகையில் நடந்து கொண்­ட­தாக ஹேமா­கம நீதிவான் நீதி­மன்ற நீதிவான் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக முன்­வைத்­துள்ள குற்றப் பத்­தி­ரி­கையை திருத்­தங்­க­ளுடன் எதிர்­வரும் 13 ஆம் திகதி சமர்ப்­பிக்­கும்­படி மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் சட்­டமா அதி­ப­ருக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஊட­க­வி­யலாளர் பிரகீத் எக்­னெ­லி­கொ­டயின் கொலை தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட இரா­ணுவ உளவுப் பிரிவு அதி­கா­ரி­களை ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய தினத்­தன்று ஞான­சார தேரர் நீதி­மன்ற வளா­கத்­தினுள் கல­கத்தை உரு­வாக்கும் நோக்கில் செயற்­பட்­ட­தா­கவும் இதனை நீதி­மன்­றத்தை அவ­ம­திப்­புக்­குள்­ளாக்­கி­யுள்­ளாரா? என்­பது தொடர்பில் ஆரா­யு­மாறு ஹோமா­கம நீதிவான் ரங்க திசா­நா­யக்க கோரி­யி­ருந்தார்.

ஹோமா­கம நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தியின் இந்தக் கோரிக்கை நேற்று முன்­தினம் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது.

விசா­ர­ணை­யின்­போது ஞான­சார தேரரின் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி மனோ­கர டி சில்வா ஞான­சார தேரர் அன்­றைய தினம் எந்த வகையில் ஹோமா­கம நீதி­மன்­றினை அவ­ம­தித்தார் என்­ப­து­பற்றி சட்­டமா அதிபர் தனது குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டிலை என்றார்.

இந்­நி­லையில் மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றத் தலைவர் தேவை­யில்­லாத பிரச்­சி­னை­களை முன்­வைத்து வழக்­கினை தொடர்ந்தும் காலம் தாழ்த்த முயற்­சிப்­ப­தாகத் தெரி­கி­றது என்று குறிப்­பிட்டார்.

ஞானசார தேரர் 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஹோமாகம நீதிமன்ற வளாகத்தினுள் நீதிமன்றினை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

லசந்வின் சடலத்தை தோண்டும்போது, ஆளில்லா விமானத்திற்கு என்னவேலை - தொடருகிறது விசாரணை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்  லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை கடந்த செவ்வாய்க்கிழமை  தோண்டும் போது, அதனை படம் பிடிக்க முற்பட்ட ட்ரோன் கமரா (ஆளில்லா சிறிய ரக விமானம் மூலம் இயக்கப்படும் கமரா)குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த ட்ரோன் கமரா தொடர்பில் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளதாக , லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை விசாரணைகளுக்கு பொறுப்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திஸேரா   கல்கிசை பிரதான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீனுக்கு நேற்று அறிவித்தார்.

லசந்தவின் சடலத்தை மீளவும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த தோண்டும் போது, சடலத்தை ஊடகங்களுக்கு காண்பிக்க வேண்டாம் என உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேராவுக்கு, அவுஸ்திரேலியாவில் இருந்து லசந்தவின் பாரியார் தொலைபேசி ஊடாக கோரிக்கை முன்வைத்திருந்ததார். தமது இரு பிள்ளைகளும் அவற்றை பார்வை இடுவதனூடாக மனதளவில் பாதிக்கப்படுவர் என்பதைக் காரணம் காட்டியே அவர் உதவி பொலிஸ் அத்தியட்சரிடம் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனால் புகைப்படம் எடுப்பதற்கு ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என குறிப்பிட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, இதன் போது ட்ரோன் கமரா ஒன்ரூடாக யாரோ ஒருவர் அல்லது ஒரு  குழு புகைப்படங்களை எடுக்க முற்பட்டதாகவும், அது பொலிஸாரால் தடுக்கப்பட்டதாகவும் அது குறித்து பிரத்தியேக விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பரிசுப் பொருள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை, ஆசிரியர்களை வாழ்த்துங்கள் - உருக்கமான கோரிக்கை

தொலைபேசி ஊடாகவேனும் ஆசிரியர்களை வாழ்த்துமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச ஆசிரியர் தினத்தில் வாழ்த்துரைப்பது மிகவும் அவசியமானது என அவர் கோரியுள்ளார்.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கல்விக் கண்ணை திறந்த ஆசிரிய தாய் தந்தையருக்கு பரிசுப் பொருட்கள் வழங்காவிட்டாலும் பரவாயில்லை தொலைபேசி அழைப்பின் ஊடாகவேனும் அனைத்து மக்களும் ஆசிரிய பெருந்தகைகளை வாழ்த்த வேண்டும்.

தற்பொழுது எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சிறந்த நிலையில் இருந்தாலும் ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்களை மறந்துவிடக் கூடாது.

தற்போது ஓய்வு பெற்றுக்கொண்டுள்ள ஆசிரியர்களின் தொலைபேசி இலக்கங்களை கண்டறிந்து அவர்களுக்கு தொலைபேசி ஊடகவேனும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.

September 29, 2016

"மதவாதம், இனவாதம் என்ற விஷ கிருமியை செலுத்தி நாட்டை அழிக்க முற்படுகின்றனர்"

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், சுமந்திரன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தற்போது தமிழ் இனவாதிகளின் சிறைக்கைதிகளாக மாறியுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில தலைவர்களும் இனவாதிகளின் சிறைக்கைதிகளாக மாறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பத்தரமுல்லயில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மீண்டும் மதவாதம், இனவாதம் என்ற விஷ கிருமியை எமது சமூகத்துக்குள் செலுத்தி நாட்டை அழிக்க முற்படுகின்றனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் கோரும் சில போராட்டத்தின் பின்னணியில் சில இனவாதிகளும், மதவாதிகளும் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"விக்னேஸ்வரன் உடனடியாக, மன்னிப்புக்கோர வேண்டும்"

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் கருத்துக்களும் தெற்கின் இனவாதத்தை மேலும் பலபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.  அதேபோல் சிங்கள தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே விக்கினேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களுக்கு உடனடியாக மன்னிப்புக்கோர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உருப்பினரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறைக்கவும் முதலமைச்சர்களின் அதிகாரங்கள் ஒரு எல்லைக்கும் கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் நல்ல உதாரணமாகும். ஆகவே உடனடியாக அவர்களின் அதிகாரங்களை வரையறைக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

"கடமைகளை நிறைவேற்றுவதில், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தவறியிருக்கிறது"

“எம்மோடு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை அடைந்து கொண்ட SLMCகட்சி, அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  தேர்தலுக்குப் பின்னர் தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு தவறியிருக்கிறது. எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான கூட்டணிகளை SLM C உடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது கடுமையாகப் பாதித்திருக்கிறது."  என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

அண்மையில்  ‘நேத்ரா' தொலைக்காட்சியில் இடம் பெற்ற ‘வெளிச்சம்' அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பற்றிய சந்தர்ப்பத்திலேயே NFGGயின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த பொதுத் தேர்தலின் போது NFGG க்கும், SLMC க்கும் இடையில் மேற் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில், தேர்தலுக்குப் பின்னர் SLMC யின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கிறதா என  கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொறியாலாளர் அப்துர் ரஹ்மான்  மேலும் தெரிவித்ததாவது:

'ஒரு ஜனநாயக அரசியல் சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள், கூட்டு முயற்சிகள் என்பன தவிர்க்க முடியாதவை. ஆனால்,  அவ்வாறான கூட்டணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒரு அடிப்படைப் பார்வை எம்மைப் பொறுத்த வரையில் இருக்கிறது.

அதாவது, அதிகாரங்களையும், பதவிகளையும் மாத்திரம் கட்சிகளுக்கிடையில் பங்கு போடுகின்ற கூட்டணிகளாக அல்லாமல் மக்களின் நலன்களை கூட்டிணைந்த உழைப்பின் மூலமாக வென்றெடுக்கின்ற கூட்டணிகளிகளாகவே அவை இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே பல்வேறு கட்சிகளுடனும் பலவகையான கூட்டணி ஒப்பந்தங்களை நாம் செய்துள்ளோம். வட மாகாணத்தில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு செய்து கொண்ட ஒப்பந்தம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

வட மாகாணத்தில் நாம் பெரும் அரசியல் ஆதரவுத்தளத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய போனஸ் ஆசனத்தின் மூலமே எமது உறுப்பினர் வடமாகாண சபையில் அங்கத்துவம் வகித்தாலும் கூட மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதற்கு அவசியாமன  எமது சுயாதீனத்தை நாம் எப்போதும் விட்டுக் கொடுக்கவில்லை.

வட மாகாண சபையில் அரசியல் தீர்வு பற்றிய பிரேரணை கொண்டு வரப்பட்ட போது அதில் எமது மக்களுக்கு பாதகமாகக் காணப்பட்ட அம்சங்களை நாம் மாத்திரமே எதிர்த்தோம். ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகள் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. இதிலிருந்து கூட்டணிகளின் ஊடாக சமூக நோக்கத்திற்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையிலேயே SLMC யுடனான ஒப்பந்தத்தையும் நாம் மேற் கொண்டோம்.

இதன் பிரகாரம் இரண்டு கட்சிகளுக்கும் பல்வேறு கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. தேர்தலுக்கு முந்திய கடமைகள் தேர்தலுக்குப் பிந்திய கடமைகள் என இரண்டு வகையான கடமைகள் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்னரான எமது கடமைகளை நாம் நூறு வீதம் நிறைவேற்றியுள்ளோம். அதன் பலனாக SLMC கட்சி உச்சகட்டப் பிரயோசனத்தை அடைந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியாக நின்று முழுவீச்சுடன் போட்டியிட்ட SLMC யினால் 23000 வாக்குகளையே பெறமுடிந்தது. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் எம்முடன் கூட்டிணைந்ததன் காரணமாக வரலாற்றில் எப்போதுமே பெற்றிராத அளவு 38500 வாக்குகளை SLMC - NFGG கூட்டணியினால் பெற முடிந்தது.

கடந்த தேர்தலில் 32000 வாக்குகளைப் பெற்ற UPFA அணியினால்கூட பாராளுமன்ற ஆசனம் ஒன்றைப் பெறமுடியவில்லை. இந்நிலையில்  NFGG உடனான கூட்டணி இல்லாது போயிருந்தால் SLMC ஆசனம் ஒன்றைப் பெற்றிருக்கவே முடியாது என்பதனை பொதுப் புத்தியுள்ள எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறப்பபட்ட சாதாரண ஒரு ஆசனம் கிடையாது. முழு இலங்கையிலும்SLMCயின் சொந்தப் பெயரில் பெறப்பட்ட ஒரேயொரு ஆசனம் இது மாத்திரமேயாகும்.  'பாராளுமன்றத்தில் ஆசனத்தினைக் கொண்டுள்ள கட்சி’ என்கின்ற அந்தஸ்த்தும் கூட இந்த ஆசனத்தின் காரணகவே SLMC க்குக் கிடைத்துள்ளது.

இப்படியாக NFGG உடனான கூட்டணி மூலமாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை SLMC அடைந்து கொண்டுள்ளது. அப்படியிருந்தும் குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை SLMC தேர்தலுக்குப் பின்னர் ஏறத்தாள 100 வீதம் மறந்து விட்டது. இது ஒரு ரகசிய ஒப்பந்தம் அன்று. மிக பகிரங்கமாகவே இது கைச்சாதிடப்பட்டு தேர்தலுக்கு முன்னரே அனைத்து மக்களோடும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இது தொடர்பில் பல ஞாபக மூட்டல்களை SLMC தலைமைத்துவத்திட்டம் பல வழிகளில் செய்திருக்கிறோம். இங்கிருக்கின்ற நிஸாம் காரியப்பர் அவர்களுக்கும் இந்த விடயங்கள் அனைத்தும் தெரியும். ஆனால் அவை பற்றி எதையும் பொருப்படுத்தாது SLMC மிக அசிரத்தையாகவே இதுவரை நடந்து கொண்டு வருகிறது. மொத்தத்தில் NFGGதொடர்பில் SLMC க்கு இருக்கும் கடமைகளை நிறைவேற்றுவதில் அந்தக் கட்சி படுபயங்கரமாக தவறியிருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான இது போன்ற  கூட்டணிகளை SLMC உடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் NFGG  தனது கடமையினை முழுமையாக நிறைவேற்றியிருக்கும் நிலையில் இது முடிவடைந்தாலோ அல்லது இது போன்ற பொது உடன்பாடுகளை எதிர்காலங்களில் செய்ய முடியாது போனாலோ அதற்கான முழப் பொறுப்பையும் SLMCயே ஏற்றுக் கொள்ள வேண்டும்."

சீனங்கோட்டை ஜும்மா பள்ளிவாசலில், மாற்று மதத்தினரின் கல்விச் சுற்றுலா


சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையும் மேம்படுத்தும் நோக்கில் கௌரவ ஜனாதிபதி, பிரதமர் அவர்களின் பணிப்பின்பேரில் நல்லிணக்க கல்விச்சுற்றுலா பிலியந்தலை கல்விப்பணிமனையின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டது. இக்கல்விச் சுற்றுலாவில் தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு விகாரை, கோவில், தேவாலயம், பள்ளிவாசல் போன்ற வணக்கஸ்தலங்களுக்கு  விஜயம் மேற்கொண்டனர்.

பிலியந்தலை கல்விப்பணிமனையின் தமிழ் பிரிவு கல்வி பணிப்பாளர் I.L.M காதர் , தெஹிவளை மீலாத் முஸ்லிம் கல்லுரியின் அதிபர் M.S.M. சுஹார், மொரட்டுவ அரபாத் பாடசாலை ஆசிரியர் M. மஸ்ஹூர், மீலாத் முஸ்லிம் கல்லுரியின் ஆசிரியர் அஷ்ஷேய்க். S.L.M. இம்தியாஸ் (நளீமி) போன்றோரின் வழிகாட்டலின் அடிப்படையில், கலந்து கொண்ட அனைவரும் பேருவலை சீனங்கோட்டை ஜும்மா பள்ளி வாசலை தரிசித்த அதேவேளை அங்கு இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களும், அதன்  சிறப்பம்சங்களும் முன் வைக்கப்பட்டமை பெரும்பான்மை சமூகத்தவர் மத்தியில் புரையோடிப் போயிருந்த தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயம் மேலோங்க காரணமாக அமைந்தது.
இமாமின் கைகளை முத்தமிட்டு, அவர் குடித்த நீரை குடித்தல் - சவூதி இமாம் பதவிநீக்கம் (வீடியோ)

சவூதி நகரில் இடம்பெற்றுள்ள இறையில்லம் ஒன்றில் தொழுகைக்கு வந்த மக்கள் தொழுகைக்கு பிறகு தபருக் பரகத் என்ற பெயரில் அந்த பள்ளியின் இமாமின் கைகளை முத்தமிட்டதையும் அவர் குடித்து விட்டு வைத்த தண்ணீரை பரகத் என்ற பெயரில் மக்கள் குடித்ததையும் அதை அவர் தடுக்கமல் இருந்ததையும் தான் நீங்கள் பார்க்கும் வீடியோ விளக்குகிறது


இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியான சில மணி நேரத்தில் குறிப்பிட்ட இறை இல்லத்தின் இமாமை சவுதி அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது

மனிதனுக்கு சுயமரியாதை முக்கியம் என்பதினாலும் தனிநபர் வழிபாட்டை ஊக்கபடுத்தும் விதத்தில் அந்த இமாம் நடந்து கொண்டதாலும் பணிநீக்கம் செய்ய பட்டதாக அந்த துறைக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது

செய்திக்கான ஆதாரம்


الرئيسية ← أحدث الأخبار
مصدر لـ«تواصل»: استدعاء إمام جامع الخير في مكة بعد انتشار فيديو «التبرّك»
10:01 ص, 28 ذو الحجة 1437 هـ, 29 سبتمبر 2016 م2915518

تواصل – خالد الغفيري:

أكد مصدر رفيع المستوى بفرع وزارة الشؤون الإسلامية في مكة المكرمة استدعاء إمام جامع الخير بحي الرصيفة وذلك على خلفية مقطع «التبرك» المتداول.

وقال المصدر لـ “تواصل” قام فرع الوزارة باتباع الإجراء النظامي في حق إمام الجامع، إذ تم استدعاؤه وأخذ أقواله، حيث أقر بما قام به يوم الجمعة الماضي من تجمُّع الناس حوله تبركاً به وبالشرب من الإناء بعده، مبرراً ذلك أنه تأسياً بالأسلاف.

وأضاف المصدر أن فرع الوزارة قد رفع ما يتعلق بالحادثة إلى مقام وزارة الشؤون الإسلامية والدعوة والإرشاد حيث ينتظر أن تفصل فيه الوزارة.

وكان فيديو متداول أظهر الإمامَ يقف بين المصلين، وهم يتسابقون لتقبيل يده، وقام بعضهم بإعطائه زجاجات مياه لينفث فيها ويشربون منها ت

நான் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று சொல்லுவதில்லை - ஒபாமாவின் அதிரடிப் பேச்சு


உலகில் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லிம்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள் : அமெரிக்க அதிபர் ஒபாமா பேச்சு.....!!

அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று (28.09.16) பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் CNN செய்தியாளர் நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சொல்ல மறுக்கிறீர்களே, அது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த ஒபாமா...

அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பில்லியன் கணக்கில் வாழ்கின்றனர். உலகம் முழுவதும் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லிம்கள் அமைதியையே விரும்புகின்றனர். இந்த நாட்டை (அமெரிக்காவை) உருவாக்கியதில் முஸ்லிம்களின் பங்கு உள்ளது. அரசின் முக்கியத்துறையான ராணுவத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றில் இணைத்து பெரும் பங்காற்றி வருகின்றனர்.

நம்முடைய அண்டை வீட்டுக்காரர்களாக வாழும் முஸ்லிம்களை தீவிரவாதிகளோடு எப்படி தொடர்புப்படுத்த முடியும் ? கிறித்தவர்கள் குழுக்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டால் அவர்களை கிறித்தவ தீவிரவாதம் என்போமா ? தீவிரவாதிகளை மதத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது.

2

தங்களது காட்டுமிராண்டித்தனமான செயல்களை நியாயப்படுத்த 'இஸ்லாம்' என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள் என்று கூறும் ஒபாமா, தான் ஒருபோதும் 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்று கூறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒபாமா வெர்ஜீனியாவில் பேசியதாவது:

"இது ஒரு ‘தயாரிக்கப்பட்ட ஒரு சொல் பயன்பாடு ஆகும். ஆனால் அல் காய்தா, ஐஎஸ் போன்ற பெயர்களுடன் பயங்கரவாத அமைப்புகள் இயங்குகின்றன என்பதில் ஐயமில்லை. இவர்கள் திரிபுவாதிகள், வக்கிரமாக தங்கள் காட்டுமிராண்டித்தனம் மற்றும் கொலைகளுக்கு இஸ்லாம் என்ற பெயரை திரித்து பயன்படுத்துகின்றனர். இஸ்லாத்தின் பெயரால் தங்கள் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
இவர்கள்தான் அப்பாவி மக்களைக் கொல்கின்றனர், முஸ்லிம்களைக் கொல்கின்றனர், பாலியல் அடிமைகளை வைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் செய்யும் எந்த ஒரு அபவாதத்தையும் மதரீதியான காரணங்களினால் நியாயப்படுத்த முடியாது.
இந்நாட்டில் முஸ்லிம்கள் அமைதியை நாடுபவர்கள், பொறுப்பு மிக்கவர்கள், ராணுவத்தில் உள்ளனர், போலீஸ் அதிகாரிகளாக உள்ளனர், ஆசிரியர்களாக உள்ளனர். அண்டை வீட்டாராக, நண்பர்களாக இருக்கின்றனர்.
இது குறித்து நான் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம் குடும்பத்தினர் மற்றும் அயல்நாடுகளில் உள்ள முஸ்லிம்களிடம் நான் கேட்டறிந்த போது இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று கூறுவது இஸ்லாத்தையே பயங்கரவாதம் என்பது போன்ற உள்ளர்த்தங்களை கொடுக்கிறது என்று கூறினர். இதனால் தங்கள் உணர்வுகளே தாக்கப்படுவதாக அவர்கள் வருந்துகின்றனர்.
சில வேளைகளில், இதனால் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முஸ்லிம்களின் ஒத்துழைப்பைக் கோர முடிவதில்லை.
எனவே, இஸ்லாமிய பயங்கரவாதம் என்று கூறும்போது, அவர்கள் ஏதோ இஸ்லாத்துக்காக பேசுபவர்கள் போல் ஆகி விடுகிறது. நிச்சயம் இதனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அமெரிக்க அதிபராக விருப்பம் கொண்டு போட்டியிடுபவர்களும் இத்தகைய பிரயோகத்தை தவிர்ப்பது நல்லது.
இவ்வாறு கூறினார் ஒபாமா.

இவரைத் தெரியுமா..?

-மவ்லவி, கான் பாகவி-   

அவர் ஒரு ஆரம்பக் கால முஸ்லிம். 17 ஆவது வயதில் இஸ்லாத்தில் இணைந்தவர். அவருக்குமுன் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு, ஸைத் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் மட்டுமே இஸ்லாத்தில் இணைந்த ஆண்கள்.

மரியாதைக்குரிய நபித்தோழர். சொர்க்கவாசிகள் என நற்செய்தி கூறப்பெற்ற பதின்மரில் ஒருவர். அன்னை ஆமினாவின் பனூஸுஹ்ரா குடும்பத்தைச் சேர்ந்த இளவல்.

இந்த மாமன்முறை இருந்ததால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவருக்கு மரியாதை கொடுத்து வந்தார்கள். ஒருதடவை தோழர்களுடன் அமர்ந்திருந்த நபிகளார், அவர் வருவதைப் பார்த்துவிட்டு,

''இவர் என் மாமன்; என் மாமன் போன்ற ஒருவரை யாரேனும் எனக்குக் காட்டட்டும்!'' என்று (பெருமிதத்தோடு) சொன்னார்கள். (திர்மிதீ, ஹாகிம்)

ஹிஜ்ரத்திற்குமுன் 23ஆம் ஆண்டில் மக்காவில் அவர் பிறந்தார். அம்புகள் செதுக்கும் பணியில் ஈடுபட்டார். இப்பணி, அம்பெய்தல், வேட்டையாடல், போர் ஆகிய தீரச் செயல்களுக்கு முன்னோடியான ஒரு பணியாகும். குறைஷி இளைஞர்களுடனும் தலைவர்களுடனும் கலந்துறவாடி, அவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் நேரத்தைக் கழித்துவந்தார்.

ஒருநாள் இரவு கனவொன்று கண்டார். இருள்படர்ந்த ஓரிடத்தில் அவர் நடந்துசெல்கிறார். அவர் நடக்க நடக்க இருள் கூடிக்கொண்டே போகிறது. அடுத்து ஒளிரும் நிலாவைப் பார்க்கிறார். அங்கு அபூபக்ர், அலீ, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரைக் காண்கிறார்.

விழித்ததும், அந்த நிலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் என அறிகிறார். இஸ்லாத்தில் இணைகிறார்.

இறைவழியில் அம்பெய்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். அவருக்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருமுறை தம் தந்தையும் தாயும் அர்ப்பணம் என்று கூறினார்கள் என்றால், பார்த்துக்கொள்ளுங்கள். 'உஹுத்' போரில், ''அம்பெய்வீராக! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணம்!'' என்றார்கள்.

இம்மார்க்கத்திலிருந்து அவரை வெளியே கொண்டுவருவதற்காக எத்தனையோ இடையூறுகள் செய்யப்பட்டன. எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. மனிதர் உறுதியாக இருந்துவிட்டார்.

உச்சகட்டமாக, ஈன்ற தாயின் பாசம் குறுக்கே நின்றது. இஸ்லாத்தைக் கைவிட்டுப் பழைய மதத்திற்கே மகன் திரும்பிவராவிட்டால், தான் உண்ணப்போவதில்லை; அருந்தப்போவதில்லை என்று தாயார் விரதம் பூண்டார்.

தனது பிடிவாதத்தில் உறுதியாக இருந்து மரணத்தை நெருங்கிவிட்டார் அன்னை. இளைஞர் சென்றார்; தாயை ஒருமுறை பார்த்தார். தாயோ வேதனையில் துடித்துக்கொண்டிருந்தார். ஆனால், இளைஞரின் உள்ளத்தில் ஈமான் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நின்றது.

சொன்னார்: தாயே! உனக்கு நூறு உயிர்கள் இருந்து, அவை ஒவ்வொன்றாகப் பிரிந்தாலும் என் மார்க்கத்தைக் கைவிடமாட்டேன். சாப்பிடுங்கள்! சாப்பிடாமல் இருங்கள்! உங்கள் விருப்பம்.

மகனின் நெஞ்சுரத்தைக் கண்ட தாய் தன் உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெற்றார்.

துஆ ஏற்கப்பட்டவர் என்று பிரசித்தி பெற்ற அந்த நபித்தோழரை, கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இராக்கின் ஆட்சியராக நியமித்தார்கள்.

இராக்கின் தலைநகராக அப்போதிருந்த கூஃபா நகரின் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்திய ஆட்சியர், புதுப்புது கட்டடங்களை எழுப்பத் தொடங்கினார்.

வேடிக்கை என்ன தெரியுமா? அவரைப் பற்றி யாரோ ஒருவர் கலீஃபாவுக்குப் புகார் மனு அனுப்பினார்.

''ஆட்சியர் இரகசியத்தைக் காப்பதில்லை; சமமாகப் பங்கிடுவதில்லை; அழுத்தமாகத் தீர்ப்பளிப்பதில்லை; ஒழுங்காகத் தொழவைப்பதில்லை'' என்று புகார் மனுவில் எழுதப்பட்டிருந்தது.செய்தியறிந்த ஆட்சியர் சிரித்துவிட்டுச் சொன்னார்:

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகையைத்தான் அம்மக்களுக்கு நான் தொழுவித்தேன். முதல் இரு ரக்அத்களை நீட்டுவேன்; பிந்திய ரக்அத்களைச் சுருக்குவேன்.

கலீஃபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியரை மதீனாவுக்கு வரவழைத்தார்கள். அவரும் வந்து சேர்ந்தார். குற்றச்சாட்டை நோட்டமிட்ட கலீஃபா, உண்மை கண்டறியும் குழு ஒன்றை கூஃபாவுக்கு அனுப்பினார்கள்.

ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்ற குழுவினர், ஆட்சியரைப் பற்றி மக்களின் கருத்தென்ன என்று ஆய்வு செய்தனர். ''அவர் சிறந்த மனிதர்'' என்றே மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இறுதியாக ஒரு பள்ளிவாசலில் குழுவினர் ஆய்வை மேற்கொண்டபோது, அனைவரும் நற்சான்றே அளித்தனர்; ஒரே ஒரு மனிதர் தவிர. அவர் சொன்னார்: நான்தான் புகார் மனு அனுப்பியவன்.

ஆக, கருத்தெடுப்பில், ஒருவரைத் தவிர நூறு விழுக்காட்டினர் ஆட்சியரை சரி கண்டிருந்தனர்.

எனவே, அத்தோழரை மீண்டும் கூஃபா சென்று பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு கலீஃபா சொன்னபோது, அந்த நல்ல நபித்தோழர் சிரித்தார்.

''முறையாகத் தொழவைக்கவில்லை என்று கருதும் ஒரு கூட்டத்தாரிடமா நான் திரும்பச் செல்ல வேண்டும் என்கிறீர்கள்?'' என வினவினார்.பிறகு புகார் அனுப்பிய மனிதரிடம் சென்று இவ்வாறு பிரார்த்தித்தார்:

இறைவா! இம்மனிதர் பொய்யராக இருந்தால், இவருக்கு நீண்ட ஆயுளையும் ஏழ்மையையும் கொடு! குழப்பங்களுக்கும் சோதனைகளுக்கும் இவரை ஆட்படுத்து!

பல்லாண்டுகள் கழிந்தபின், புகார் கொடுத்த அந்த மனிதர், சாலைகளில் நின்று பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். தள்ளாத வயதில் புருவங்கள் விழுந்து கண்களை மூடிவிட்டன. பெண்களுக்குத் தொல்லை கொடுப்பதும் மக்களின் ஏச்சுக்கு ஆளாவதும் அவருக்கு வாடிக்கையானது.

அந்தக் கிழவரிடம், யாரேனும் அவரது நிலை குறித்து விசாரித்தால், ''அந்த துஆ பலித்துவிட்டது'' என்று கூறுவாராம்!இறுதியாக, நம் நபித்தோழருக்கு இறப்பு வந்தபோது, கிழிந்த ஒரு கம்பளி ஆடையைக் கொண்டுவரச் சொல்லி, அதிலேயே தமக்கு 'கஃபன்' அணிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ''இதை அணிந்துகொண்டுதான் 'பத்ர்' போரில் எதிரிகளைச் சந்தித்தேன்; இதனுடனேயே அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறேன்'' என்றார்.ஹிஜ்ரீ 55ஆம் ஆண்டு மறைந்த அந்த நல்ல மனிதர் 'அல்பகீஉ' மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.யார் அவர்?

அந்த நபித்தோழர்தான், சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள். 

சட்டவிரோத இஸ்ரேலின், போர்க்குற்றவாளி ஷிமோன் பெரஸ்

இரு முறை இஸ்ரேலிய பிரதமராகவும் ஒரு முறை ஜனாதிபதியாகவும் இருந்த ஷிமோன் பெரஸ் தனது 93ஆவது வயதில் மரணமடைந்தார்.

மூளையில் இரத்தக் குழாய் வெடிப்பால் இரு வாரங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரஸின் உடல் நலம் தேறிவந்தபோதும் கடந்த செவ்வாயன்று அவரது உடல்நிலையில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.

டெல் அவிவ் நகருக்கு அருகாமையில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் வைத்து அவர் நேற்று புதன்கிழமை மரணித்தார்.

1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது இருந்த கடைசி தலைமுறை அரசியல்வாதிகளில் ஒருவராக பெரஸ் இருந்தார். அவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் அவர் கடும்போக்காளராகக் கருதப்பட்டார். ஆனால் 1990களில் பாலஸ்தீனர்களுடன் அரசியல் ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதற்கு அவர் முக்கிய பங்காற்றி, அதற்காக யாஸிர் அரபாத் மற்றும் யிஷ்தாக் ரபீனுடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசை வென்றார்.

இஸ்ரேலிய ஜனாதிபதியாக ஏழாண்டு காலம் பணியாற்றிய பின்னர், இரண்டாண்டுகளுக்கு முன்னர் அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். இஸ்ரேலின் உயர் பதவிகள் அனைத்தையும் வகித்தவராக அவர் இருந்துள்ளார்.

இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்தின் தந்தை என்றறியப்படும் பெரஸ், பிரான்ஸுடன் ரகசியமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அணுசக்தித் தொழில்நுட்பத்தைப் பெற்று, டிமோனாவில் அணு உலை கட்ட வழிவகுத்தார்.

போலந்தில் பிறந்த ஷிமோன் பெரஸ், அப்போது பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட பாலஸ்தீனத்துக்கு 1934இல் தனது 11 வயதில் குடியேறினார். பின்னர் சியோனிஸ அமைப்பில் இணைந்த அவர் இஸ்ரேலின் நிறுவனரான முதல் பிரதமர் டேவிட் பென்கூரியனை தனது வழிகாட்டியாக கொண்டவராவார்.

இஸ்ரேலின் தற்போதைய தலைவரான பெஞ்சமின் நெதன்யாகு, பெரஸின் மறைவு குறித்து தனது ஆழ்ந்த தனிப்பட்ட இரங்கலைத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அமைச்சரவை பின்னர் தனது அஞ்சலியை வெளிப்படுத்த சிறப்புக் கூட்டம் ஒன்றில் கூடவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா விடுத்த இரங்கற் குறிப்பில், ஷிமோன் பெரஸ் வரலாற்றின் போக்கை மாற்றியவர் என்றும், இஸ்ரேலின் சாரமாக விளங்கியவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகுதிகளில் யூதக் குடியேற்றங்களுக்கு அங்கீகாரம் அளித்த அரசில் பெரஸும் இருந்துள்ளார். எனினும் பலஸ்தீனம் கோரும் நில உரிமை குறித்து விட்டுக்கொடுப்புடன் செயற்பட வலியுறுத்தியிருந்தார்.

எனினும் பலஸ்தீனர்கள் அவரை ஒரு யுத்த குற்றவாளியாகவே ஞாபகம் வைத்திருப்பதாக பலஸ்தீன தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக பெரஸ் பிரதமராக இருந்தபோது 1996 ஆம் ஆண்டு இஸ்ரேல் இராணுவம் தெற்கு லெபனானிய கிராமமான க்வானாவில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 106 பேர் கொல்லப்பட்டனர்.

பெரஸ் பற்றி குறிப்பிட்ட பலஸ்தீன முன்னாள் அமைதி பேச்சுவார்த்தையாளர் டியானா புட்டு, “இந்த நபர் மிக ஆரம்பத்திலேயே ஒரு யுத்த குற்றவாளியாக இருந்தவர்” என்றார்.

இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல் நாளை வெள்ளிக்கிழமை ஜெரூசலத்தில் இருக்கும் தேசிய கல்லறையில் அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது விருப்பத்திற்கு அமையவே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பெரஸின் முன்னாள் பிரத்தியேக உதவியாளர் யோனா பார்டல் குறிப்பிட்டுள்ளார். 

நிர்வாண சஞ்சிகையில், ஹிஜாபிய பெண் - முஸ்லிம்களுக்கு உதவியாக இருக்குமென நம்புகிறாராம்..!

நிர்வாண பெண்களுக்கு பிரபலம் பெற்ற பிலேபோய் சஞ்சிகையில் முதல் முறை ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண் ஒருவரின் படங்கள் பிரசுரிக்கப்படவுள்ளன.

வரும் ஒக்டோபரில் வெளியாகவுள்ள சஞ்சிகையில் நூர் தகூரி என்ற அமெரிக்க ஊடகவியலாளர் இடம்பெறவுள்ளார். செய்தி வலையமைப்பொன்றில் செய்தியாளராக பணியாற்றும் அந்த பெண் கறுப்பு ஜெக்கட், ஜீன்ஸ், பாதணி மற்றும் ஹஜாப் அணிந்து பிலேபோய் சஞ்சிகையில் தோன்றவிருப்பதாக அந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.

லிபிய பூர்வீகம் கொண்ட தகூரி, தான் அமெரிக்க வர்த்தக தொலைக்காட்சியில் ஹிஜாப் அணிந்த முதல் தொகுப்பாளராக செயற்பட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். தனது பணி அமெரிக்காவில் போராட்டத்திற்கு முகம்கொடுக்கும் முஸ்லிம் பெண்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறார்.

பிலேபோய் சஞ்சிகை அண்மைக் காலத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தது. அதில் பெண்களின் நிர்வாண படங்களை வெளியிடுவதை நிறுத்தியது முக்கிய மாற்றமாக கருதப்படுகிறது.

எனினும் ஆபாச சஞ்சிகை ஒன்றில் முஸ்லிம் பெண் ஒருவர் தோன்றுவது பற்றி கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன. தான் விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை என்று தகூரி பிளேபோய் சஞ்சிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.


3 பெற்றோர் கொண்ட, முதல் குழந்தை இதுதான்..!!!


மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை மெக்சிகோவில் பிறந்துள்ளது. இந்தத் தொழில் நுட்பத்தின் மூலம் பிறந்த ஐந்து மாத ஆண் குழந்தைக்கு, அதன் தாய் மற்றும் தந்தையிடமிருந்து கிடைக்கும் வழக்கமான மரபணுவைத் தவிர, கூடுதலாக கொடையாளியிடமிருந்த சிறிய ஒரு மரபணுக் குறியீடும் கிடைத்துள்ளது.

அந்தக் குழந்தையின் ஜோர்தானியத் தாயின் மரபணுவில் இருக்கும் ஒரு பிரச்சினை குழந்தைக்கு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவே இந்த முன்னெப்போதும் செய்திராத நடவடிக்கையை அமெரிக்க மருத்துவர்கள் எடுத்தனர்.

இந்த சிகிச்சை முறை மருத்துவத்தில் புதியதொரு சகாப்தத்தை உருவாவதைக் காட்டுகிறது என்றும், இதே போன்று அபுூர்வ மரபணு பிரச்சினைகள் கொண்ட குடும்பங்களுக்கு இது உதவும் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த முயற்சியில் அமெரிக்க மருத்துவ குழு ஈடுபட்டுள்ளது.் மெக்சிகோவில் இது போன்ற குழந்தை பெற தடை சட்டம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூவரின் மரபணுவைக் கொண்ட குழந்தை உருவாக்கப்படுவது இது முதல்முறையல்ல. 1990களிலேயே இந்த முயற்சி ஆரம்பிக்கப்பட்டபோதும் முற்றாக புதிய தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படுவது இது முதல் முறையாகும். 

Palestine & Death of Shimon Peres:

Dr SLM Rifai.Naleemi.

28/09/2016 former prime Minister of Israel died at age of 93. what legacy he has left to the humanity? He may been as a hero in the hearts of some Zionists and western political leaders and yet, injustice he has done to Palestinian people will be not forgotten for ever by humanity and 1.6 billion Muslims all over the world will not forget what he has done to Muslim people in Palestine. Indeed, Humanity except Zionist agents are against all atrocities that have been committed on innocent Palestine people.

Today, people in Palestine are butchered and murdered in broad day light in front of live cameras. Even children and teenage boys and girls are being killed and tortured in broad day light in front of cameras. Literally, four Million Palestine people are living in an open prison like slaves in this so called modern civilized world.

This is the legacy of this man who died at the age of 93. How many thousands innocent Palestinians may have been killed or chased out, of tortured with the wrong policies of this man and Israel political leadership.
In this modern world the ethics and moral principles have been changed and redefined as each and every community likes...Israel is founded on a land that was carved out from someone else ...it was British who helped the creation of Israel.. Under so called Balfour Declaration this land of the second Holy mosque for more than 1.6 billion Muslims was handed over to Jews people who migrated from all parts of the world. The foundation of this Israel state is laid on the land that had been grabbed from innocent people of Palestine.

Thus, Israel is illegally created country in the world map today .There was no such a country before 1948. ...1.6 billion Muslims all over the world strongly declare that Israel was a created by by British government in 1948 and west has been protecting it for its own interest in the ME. Mr George Galloway the former British MP.openly says that British government had done a great injustice for the people of Palestine. (..you steal someone else land and donate it to a third person..What right does Britain has got to do this?) This was the question repeatedly asked by him..

This Palestine occupation by Israel may seem good for some morally corrupted western powers to protect its interest in ME and yet, it is morally wrong . You do not need to seek evidence for this from any history book. but your consciousness will tell you that it is a wrong policy of western power to support Israel unconditionally. The consciousness of humanity tells us that it is a wrong policy . UN and all human rights commission which are controlled by Zionism may disagree but consciousness of heart would not go with this Zionism that kills thousands of innocent people in Palestine: That is why we see Billions of people are against this Israel aggression.

After years of sickness and health problems, Today Mr Shimon Peres met his creator and Lord, whatever Zionists may say about him and yet he met his creator and lord of this universe with blood of thousands of innocent people..

We Muslims and Jewish community have some identical theological issues. We all believe that God will question all of us on the Day of Judgement? there are so many theological similarities between Jewish and Muslim faith.. ( King Solomon said " The dust will return to the ground as it was and the spirit will return to God who gave it" Ecclesiastes: 12: 17). We Muslims too share this faith in that we all belong to God and we all return to him). Now

Whatever reasons and rationales we may say for the creation of Israel...it is not us human beings who judge the legacies of Mr Shimon Peres but rather creator of this universe and the Lord of universe will judge him and he will pay the price for what he has done. This may look odd for the secularist Zionist and atheists of western political leaders and yet, for the believers of both Muslim and Jewish people this is a part of their belief.

Supporters of Zionism may praise him as a statesman or founding father of Israel and yet who will be there for him on that Day of Judgment 

For any materialistic man who doesn't believes in Judgment Day his legacies may be heroic in defense of Israel and yet, no soul can.protect him.from divine punishments on that Day when humanity returns to its Lord. 

It is said that he helped to build up his country’s formidable military might and to expand its territories.. literally it means to looted land of Palestine people. It is also said that he tried hard to establish a lasting peace with Israel’s Arab neighbors.

These are wrong legacies of this man. 
He robbed the land of Palestinian people,
He was behind the murder of thousands of innocent Palestinians,
He expanded illegal settlements, 
He built up his military to serve western interest in ME.
He went to war with Arab nations in many time.
In the name of hundreds of peace talk he cheated Arab leaders.
These are some of the legacies of this man who meets his Lord with blood of innocent people in his hand.. Today, we all say good bye to him and but his fate will rest in the hands of Lord who created all humanity and Lord of humanity would not do any injustice
All injustice that have been committed on the people.of Palestine will be paid off ..Today Palestine people will say that justice will be done to this man by his Lord..He may have been protected by American and British for his expansion of settlement and yet Today no American and no British can save his soul from.the punishment of his Creator and Lord of this universe...
Today people of Palestine feel relief that justice will be done for the longest Israel statement who looted their land and who killed many of innocent people in Palestine
Justice is unconditional for all. There is no one type of justice for Palestine people and another type for Israel people...

Today, justice is twisted by supper powers in this modern world. Mighty is always right in this world.. but beyond this physical world there is a moral world. In that world Lord of this universe will bring each one of us into justice. ..but justice can not be twisted on that Day.....Our Lord and Creator will never and ever manipulate His justice...It will.be unconditional justice to all poor and rich, weak and wrong will have same justice..

Today, world leaders are flying to pay respect to his dead body and yet, only God knows what hold for his soul in front its Lord... No one protect him from divine judgement 
So now people.of Palestine will be relieved that today this man will get justice and he will be questioned for all his actions by his and our Creator. 

May Allah make this man's death as a lesson to Israel political leadership to stop expansion and do justice to the people of Palestine? May Allah make this man's death as warning to Israel army to stop killing of innocent children of Palestine..
Reply, Reply All or Forward | More

Newer Posts Older Posts Home