August 17, 2016

SLMC + TNA உறவைகுழப்ப சிலர் திட்டம் - விட்டுக்கொடுப்புக்கள் அவசியம் என்கிறார் ஹக்கீம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பரஸ்பரமாக செயற்பட முயற்சிக்கின்ற போது சில தரப்பினர் அதனை சீர்குலைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அமைச்சர் இந்தக் கருத்தினை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பரஸ்பரமாக செயற்படுவதாகவும் அதனை சிலர் குழப்ப திட்டமிட்டுள்ளாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவோருக்கு மக்கள் அங்கீகாரம் அளிக்க மாட்டார்கள் எனவும் மக்களை குழப்புவதற்கு போலியான கருத்துக்களை அவர்கள் வெளியிடுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தற்போது நாட்டில் சட்ட ஆட்சி நடைபெறுகிறது என குறிப்பிட்ட ரவூப் ஹக்கீம், யாரையும் கடத்தி அச்சுறுத்தி எதனையும் செய்யலாம் என்ற காலம் மாறியுள்ளதாக கூறியுள்ளார்.

நிரந்தர தீர்வு என்பது அனைத்து சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிம்மதி தரும் தீர்வாக அமைய வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதற்கான காலம் தற்போது நெருங்கி வருவதால் சில விட்டுக் கொடுப்புக்கள் அவசியம் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

11 கருத்துரைகள்:

இவர் சொல்லும் விட்டுக்கொடுப்பும் அவர்கள் கேட்கும் வடகிழக்கு இணைப்பும் ஒன்றுதான் அவ்வாறு இவர் சம்மதம் தெரிவித்துவிட்டு காலம் கடந்து தான் செய்தது மாகா தப்பு என்று மன்னிப்பு கேட்பா அதாவது கடந்த மஹிந்த ஆட்சியில் 18 திருத்த சட்டத்துக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்ததை மக்கள் மறக்கவில்லை என்பதை அமைச்சர் ஞாபகப்படுத்திக்கொள்வது மிகவும் சிறந்தது வாடகிழக்கு இணைந்தால் எதிர் காலத்தில் நசுக்கப்படுவது வடகிழக்கு முஸ்லிம்கள்தான் மத்திய மாகாண கண்டி மக்கள் அல்ல என்பதுதான் உண்மை

இந்த Mustafa மாதிரி, இப்படி பழைய கதைகளை கதைத்துக்கொண்டு குழம்பும் வாதிகள் பலர் இருக்கின்றார்கள்.

Keep relationship u with TNA but don't sale the muslim society

People in the east must get rid of this traitor Hakeem and should not vote for SLMC. Get him lost.

முழு இஸ்லாமிய சமுதாயத்தின் பிரதிநிதி என்கிற அந்தஸ்தை யார் இவருக்கு கொடுத்தது.? கிழக்கு வடக்கோடு இணைய கிழக்கு முஸ்லிம்கள் மனது வைக்க வேண்டுமே ரவுப் ஹக்கீம் என்கிற சந்தர்ப்பவாத பச்சோந்தி அரசியல்வாதியல்ல.ஹக்கீம் இன்னொரு முறை முஸ்லிம்களுக்கு துரோகமிழைத்து வரலாற்று முழுக்க துரோகி எனும் பட்டத்தை சுமக்க விரும்பாதீர்

வடகிழக்கு இணைப்பிற்கு நாங்கள் சிங்களவர்களோடு கைகோர்த்து வீதிக்கு இறங்குவது தான் தீர்வு. இவர்கள் போன்ற சுயநலவாதிகளை நம்பி பயனில்லை. முஸ்லிம்களே விழித்துக்கொள்ளுங்கள்

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்ற கருத்தை படிப்படியாக முஸ்லீம் மக்களிடம் திணிப்பதட்கு ஹக்கீம் ஆரம்பித்துள்ளார் .

இந்த அரசியல் தீர்வு எப்படி இருக்க வேண்டும் இதில் முஸ்லிம்களின் உரிமைகள், அபிலாசைகள் என்ன போன்ற எந்த அடிப்படையான நோக்கும், கருத்தும் இந்த ஹக்கீமிடம் இல்லை என்பது தான் இதுவரை நாம் அவதானித்தது. யார் யாரை குழப்புவது என்பதே விளக்கம் காணாத தலைமை. அந்த விட்டு கொடுப்பு என்ன?? நீங்கள் தமிழர் தரப்புடன் பேசுவது என்ன?? போன்ற விடயங்கள் ஒருத்தருக்கும் தெரியாது. ஆனால் சாதாரண கிழக்கு மாகாண முஸ்லிமுக்கும் தெரிந்த விடயம் தான் வடகிழக்கு இணைப்பு என்பது அதை விடுத்து தமிழர்களுக்கு உங்களுடன் பேசுவதட்கு எந்த தேவையும் இல்லை. இதில் என்ன விட்டு கொடுப்பு உள்ளது. தலைவர் அஷ்ரப்பின் வடகிழக்கு இணைப்பும் தென்கிழக்கு அலகு என்னும் ஒரு கருத்து அன்றைய சூழ்நிலை( சர்வதேசத்தின் அழுத்தம், புலிகளின் கரம் மிகவும் ஓங்கிய நிலையில் இருந்தது. எரிகின்ற வீட்டில் முடிந்ததை பிடிங்கிக் கொள்ளும் ஒரு நிலை அவ்வளவுதான்.) காரணமாக மிகவும் பலயீனமான முடிவாகும் . தற்போதைய அரசியல் நிகழ்ச்சி நிரலில் பெரும் சக்திகள் ( இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், புலம் பெயர் தமிழர்) பின்னால் உள்ளன. ரில்லியன் கணக்கில் பணம் புரள வாய்ப்பு உள்ளது. ( ஏனெனில் வடகிழக்கு மாகாண சபை தேர்தலில் பங்கு கொள்ள வைப்பதட்காக இந்தியா எப்படியெல்லாம் தலைவர் அஸ்ரப்புடனும் பேசியது என்பது எமக்கு தெரியும்) எனவே இந்த தலைமை இந்த விடயத்தில் மிகவும் பலயீனமானது என்பது கடந்த கால அரசியல் முடிவுகளில் இருந்து விளங்கிக் கொள்ளலாம். அவை எவை என்பதை சற்று பார்த்தால்:

** சந்திரிக்கா மந்திரி சபையில் இருந்து ஹக்கீம் வெளியேற்ற பட்டமை.
** ரணிலுக்கு ஆதரவு அளித்ததால் அதாவுல்லா தலைமையிலும் ஒரு பிரிவு ( ஹரீஸ் உட்பட????!!!!! இப்போது இன்னொரு விடயமும் ஹரீசால் சொல்லப்படுகிறது, பத்து தாருஸ்ஸலாம் கட்டுமளவுக்கு ஹக்கீமிடம் பொருளாதாரம் உள்ளது என்பதை பகிரங்கமாக கூறியுமுள்ளார். ?????? !!!!!!), றிஸாத்தின் தலைமையில் இன்னொரு பிரிவு. இத்த வரைக்கும் ரணில் முஸ்லீம் தரப்பை புறக்கணித்து புலிகளுடன் ஒஸ்லோவில் பேச்சு நடத்தி கொண்டிருந்தார். நாட்டின் இறைமைக்கு குந்தகம் என்று ரணில் அரசாங்கம் சந்திரிக்காவால் கலைக்க பட்டது வேறு விடயம்.
** கட்சியை காப்பாற்ற என்று சொல்லி கொண்டு ராஜபக்சவின் அழைப்பை ஏற்று அவருடன் பட்டம் பதவிகள் இன்னும் பல பெற்று கொண்டு ராஜபக்ச ஆடசியில் பங்கெடுத்தமை.
** 18 வது, கசினோ, தெவிநுகம, சட்ட மூலங்களை ஆதரித்தமை.
** முஸ்லிம்களுக்கு எதிராக அத்தனை அநியாயமும் அவமதிப்பும் நடந்து கொண்டிருக்கும் போது அமைச்சரவையில் இருந்து கொண்டு பார்வையாளராக இருந்ததை தவிர முஸ்லிம்கள் எதையும் காணவில்லை. உலகமே இதை பற்றி பேசியது.
** கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை ஆதரிப்பதட்கு தபால் மூல வாக்களிப்பு முடியும் மட்டும் ராஜபக்சவுடன் பேச்சு வார்த்தையில் இருந்தமை. அந்தளவு ஆசையும் ( ராஜபக்சவின் டீல் ) தடுமாற்றமும் ( மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்).
** தேசிய பட்டியல் விடயத்தை தீர்த்து வைக்க வக்கில்லாத தலைமை. பல வாக்குறுதிகள், பல கழுத்தறுப்புக்கள் இதனால் கட்சிக்குள் குழப்பமும் குத்து விட்டுக்களும்.
இன்னும் பல எழுதிக்கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் இந்த ஹக்கீம் தலைமையும் அவரது அடிவருடிகளும் எதை பெற்று கொண்டது ( பதவி, பட்டம்... etc.) எதை விட்டு கொடுத்தது ( முஸ்லிம்களின் உரிமை, தனித்துவம், தன்மானம், மலினமான அரசியல் கலாச்சாரம் அறிமுகம் ..என பல ).

மாற்றம் தேவை. முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் முன்வருவார்களா? புத்தி ஜீவிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் இதட்கு வழி சமைப்பார்களா??

சாத்வீகம் புறக்கணிக்கப்படுமானால் அது எந்த வித விளைவை ஏட்படுத்தும் என்பது யாவரும் அறிந்த விடயம் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

Hakkem We Know How our Good Relationship With Other All Religion Alhamdulillah Don't Teach Your Political Relations. You Made Many Many Mistake For Muslim Community If You Can't do anything for Muslim Community Please Keep quit or quit from SLMC Please Don't Make any trouble For us. We Don't Want You in SLMC Leader. This Time
Really We Missing The Best Leader ASHRAFF
East and North Must be Separate

Ajan Antoniraj/?????????? Your Selfish Comment We Don't Care Your Comments
Enjoy you With Your Comment

13 வது சட்டத்திருத்தத்துக்கு முஸ்லிம் தலைமைகள் ஆதரவளிப்பதன் மூலம் இந்த நாட்டிலே முஸ்லிம்கள் இரண்டு பெரும் பான்மை சமூகத்தால் ஆழப்படப் போகும் துர்பாக்கிய நிலை ஏர்ப்படப்போகிறது . மத்திய அரசாங்கத்துக்குக் கீழ் ஆளப்படுகின்ற முஸ்லீம்கள் மாகாண அரசாங்கத்துக்குக் கீழும் ஆளப்பட வேண்டுமா? . சிங்கள பெரும்பான்மையின் கீழ் ஆழப்படுகின்ற முஸ்லீம்கள் தமிழ் பெரும்பான்மையின் கீழும் ஆளப்பட வேண்டுமா?. அமைச்சர் ஹக்கீம் அவர்களே நீங்கள் கூறுவது எந்தவகையில் நியாயம்?. நீங்கள் TNA யோடு உறவாடிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் லாபமாக இருக்கலாம். முஸ்லீம்களுக்கு எந்த வகையிலும் லாபமில்லை . அமைச்சர் ஹக்கீம் அவர்களே வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு நீங்கள் உடன் படுவதன் மூலம் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை இல்லாமல் செய்து முஸ்லீம்களுக்கு மீண்டுமொரு அடிமைசாசணத்தை எழுதப் போகின்றீர்களா? காணி அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்குவதற்கு உடன்பட்டு நாட்டிலுள்ள முஸ்லிம்களின் மேலதிக காணிகளை மாகாண அரசுக்கு தாரைவார்க்கப் போகின்றீர்களா ?. சொல்லுங்கள். அன்று தமிழரசு கட்சியின் தலைவர் அமரர் செல்வநாயகம் ஐயா அவர்களினால் தமிழ் பேசும் இனமாக அங்கிகரித்த மக்களாக, வடகிழக்கிலும் வடமத்தியிலும் தானும் தன்பாடுமாக வாழ்ந்த முஸ்லீம்களை , விடுதலைப் புலிகளினால் இனப் படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் செய்யப்பட்ட போது அங்கிகாரம் வழங்கிய த.வி.கூட்டணியினர், விடுதலைப் புலிகளை தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், பெரும் தலைவர் அஷ்ரப் அவர்களை படுகொலை செய்த தற்கொலை குண்டுதாரியான கதிர்காமர்தம்பிக்கு காரைதீவில் ஊர்வலமும் எடுத்தார்களே இதை மறந்து விட்டீர்களா? அன்று புலித்தோல் போர்த்திய பசுக்களாக இருந்தவர்கள் இன்று பசுத்தோல் போர்த்திய புலிகளாக காரியம் சாதிக்கப் பார்க்கின்றார்கள். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாதுபோன இறையாண்மை உள்ள மதசார்பற்ற தனி ஈழத்தை இன்று ஜனநாயக நீரோட்டத்தில் நின்று பணப்பலத்தின் மூலம் நிறுவிக்கொள்ள முயற்சிக்கின்றார்கள்.1976ல் அன்று நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் தோல்வி கண்டதனால் இன்று வடமாகாண தீர்மானம் வன்னித் தீர்மானம் போன்றவைகளை நிறைவேற்றி தனி இறைமை கொண்ட ஈழ நாடகத்தை அரங்கேற்றப் பார்க்கிரார்கள் என்பது முஸ்லிம் காங்கிரஸுக்கும் அதன் தலைமைக்கும் புறியவில்லையா? புலிப் பயங்கர வாதிகளினால் அநியாயமாக கடுமையாக பல பாதிப்புகளுக்கு உள்ளான வடகிழக்கு முஸ்லிம்களின் எந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு கண்டு கொடுத்துள்ளீர்கள். குறைந்தது தமிழர்களிடம் அகப்பட்டுக்கொண்ட காணிகளையாவது த.வி.கூட்டணியினருடன் பேசி பெற்றுக் கொடுத்துள்ளீர்களா? அல்லது அவர்களாவது திருப்பிக் கொடுத்துள்ளார்களா? இல்லவே இல்லை. வடமாகாணத்தை ஆளுகின்ற தமிழர் தரப்பு முஸ்லிம்களுக்கு இதுவரை என்ன செய்திருக் கின்றார்கள். ஓர் உப்பைக்கூட இன்னும் கொடுக்க மனமில்லாத அவர்கள் வடமாகாணத்தில் இருந்து அவர்களால் துரத்தியடிக்கப் பட்ட முஸ்லிம்களை மீண்டும் சொந்தமண்ணில் குடியேற எடுக்கின்ற முயற்சிகளை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர். இவர்களை மீண்டும் எவ்வாறு நம்புவது. எமது விலைமதிக்க முடியாத பல நூறு உயிர்களை விட்டுக் கொடுத்திருக்கின்றோம். பல ஆயிரம் கோடி ரூபாய்ப் பணத்தையும் பல ஆயிரம் கிலோ தங்க நகைகளையும் பல கோடிப் பெறுமதியான சொத்துக்களையும் இழந்துள்ளோம். விட்டுக்கொடுத்துள்ளோம் எனவே இன்னும் எதை நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் .

Post a Comment