August 19, 2016

"ஹலால் சான்­றிதழ் மூலம் கிடைக்­கப்­பெறும் பணம் IS க்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கி­றது"

ஹலால் சான்­றிதழ் வழங்­கு­வதன் மூலம் பெற்றுக் கொள்­ளப்­பட்ட நிதி ஐ.எஸ்.அமைப்­புக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­துடன் தற்­போதும் ஹலால் சான்­றிதழ் மூலம் கிடைக்­கப்­பெறும் பணம் ஐ.எஸ்.அமைப்­புக்கு அனுப்­பி­வைக்­கப்­ப­டு­கி­றது என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.

கிரு­லப்­ப­னை­யி­லுள்ள பௌத்த மத்­திய நிலை­யத்தில் நடை­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

இலங்­கை­யி­லி­ருந்து சிரி­யா­ சென்று ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து போரிடும் போது கால­மான அபூ சைலான் என்­ப­வ­ரது குடும்­பத்­துக்கும் இந்த நிதி­யி­லி­ருந்து நஷ்ட ஈடு வழங்­கப்­பட்­டுள்­ளது.

ஹலால் சான்­றி­த­ழுக்கு எதி­ராக நாம் குரல் கொடுத்­த­தை­ய­டுத்து உலமா சபை அந்த கட­மையை கைவிட்டு தற்­போது வேறோர் நிறு­வனம் இந்த வேலையைச் செய்­கி­றது.

ஹலால் தொடர்­பாக நாம் மறந்­தி­ருந்தோம். ஆனால் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மீண்டும் அதனை ஞாப­கப்­ப­டுத்தி விட்டார்.

ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் ஞான­சா­ர­தே­ரரை குற்றம் சுமத்­தி­யுள்ளார். ஹலா­லுக்கு எதி­ராக குரல்­கொ­டுத்­ததை தவ­றா­னது எனவும் இன­வாதம் எனவும் தெரி­வித்­துள்ளார்.

ராஜித சேனா­ரத்­னவின் கருத்தை நாங்கள் கண்­டி­ருக்­கிறோம். ஹலால் முஸ்­லிம்­களின் உரிமை. ஆனால் ஹலால் சான்­றிதழ் மூலம் இந்­துக்­க­ளையும் பௌத்­தர்­க­ளையும் ஹலா­லுக்கு நிர்ப்­பந்­திப்­பதை நாம் எதிர்க்­கிறோம். ஹலால் சான்­றிதழ் வழங்­கப்­ப­டு­வதன் மூலம் பெற்றுக் கொள்­ளப்­படும் பணம் இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்­துக்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது என்று நாம் உறு­தி­யாக கூறு­கிறோம்.

பொது­பல சேனாவோ ஞான­சார தேரரோ இன­வா­தத்தைப் பரப்­ப­வில்லை. ராஜித சேனாரத்னவின் கருத்துகளே இனவாதத்தை தூண்டுவதாக அமைந்துள்ளன.

ஹலால் விடயத்தில் அமைதியாக இருந்த எம்மை ராஜித சேனாரத்ன மீண்டும் தூண்டிவிட்டுள்ளார் என்றார்.

5 கருத்துரைகள்:

வெறுமனே பத்திரிகையாளர் கூட்டங்களில் இவ்வாறான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை முனவைக்காமல் தகுந்த ஆதாரங்களை கொண்டுவரவேண்டும் . BBS க்கு முஸ்லிம்கள் மீது குற்றம் சொல்லாவிட்டால் தூக்கமே வராது போலும் . இந்த குற்றச்சாட்டு என்றால் ஒரு பெரிய நகைச்சுவையே .

Dear Mr Dilantha,

Your intention is not to allow us to consume purified food and drink. The Muslims living in Sri Lanka and all over the world have already announced that ISIS is a Terrorist group and they are un-Islamic. Therefore if you have any document to prove that the money is pumped to ISIS we all will get together to take legal action to punish the party concerned. Instead of this you are kindly requested to stop slinging mud on the Muslim community on base less and malicious allegations. We hope and encourage that you will draw a programme to bring all the communities under one banner of peace and to fight the common enemy who work against our Nation - Sri Lanka.

We wish you for a great success in this task.

I would like remind another incident happened during aluthgama attack. BBS and minister champikka ranawaka brought a big allegation against whole Muslim community that a active jihad group was functioning in Sri Lanka and that was behind althgama attack. but they didn't disclose any kind of evidence for thire false allegation,
So we Muslims no need to bother much for these baseless and inflammatory talk from BBS. Because majority of Buddhists aware of this group and they allready rejected it.

இவனும் ஹலால் பிரச்சினை பற்றி அதன் பணம் பற்றி பல நாட்களாக மேடை போட்டு கத்திக்கொண்டுதான் இருக்கிறான்,இதற்க்கு பதிலளிக்கு முகமாக பெரியதோர் பத்திரிகையாளர் மாநாட்டை உலமா சபை கூட்டி அதன் உண்மை தன்மையை விலக்கப்படுத்துவதுதான் செரியான முறை.கன்னத்தில் அறைந்தால்போல் பதில்களை கொடுக்காமல் பொறுமை காப்போம் என்பது ஜீரணிக்கக்கூடியது இல்லை.ஆரம்பத்தில் இவனுக்கு மழுக்க வேண்டிய முறைப்படி மழுக்கி இருந்தால் இந்தளவுக்கு வளர்ந்து இருக்க மாட்டான்.

Post a Comment