Header Ads



இலங்கையில் புர்காவுக்கு தடை - யோசனையை முற்றாக நிராகரித்தார் ஜனாதிபதி மைத்திரி



முஸ்லிம்கள் பெண்கள் அணியும் புர்கா உடைக்கு தடைவிதிக்குமாறு பாதுகாப்பு சபைகூட்டத்தில் பாதுகாப்பு உயர் அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் கோரப்பட்ட போதும் ஜனாதிபதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவதை தடுக்கும் நோக்கில் இந்த யோசனைமுன்வைக்கப்பட்ட போதும் அதனை முற்றாக ஜனாதிபதி எதிர்த்துள்ளதுடன் இவ்வாறு புர்கா அணிந்த தீவிரவாதிகள் எவரேனும் எமது நாட்டிற்குள் நுழைந்ததற்கான ஆதாரம் உள்ளதா? என பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஜனாதிபதி வினவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புர்கா அணிந்து இலங்கையில் பிரச்சினை ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் இரண்டு உள்ளதாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன், கட்டுநாயக்கவிமான நிலையத்தில் அண்மையில் ஆண் ஒருவர் புர்காவுடன் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டமை மற்றும் கண்டிப் பிரதேசத்தில் புர்கா அணிந்து வங்கி ஒன்றில்இடம்பெற்ற கொள்ளை தொடர்பான சம்பவங்களை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஜேர்மன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் புர்காவிற்கு தடைவிதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கையில் தற்போது அவ்வாறான செயற்பாடுகளுக்கு சென்றால் கடந்த காலங்களில் ஏற்பட்டதைப் போன்ற மத விவகாரங்கள் தலைத்தூக்கும் என்று ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம்தெரிவித்துள்ளது.

அத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகளின் இலக்காக இலங்கை உள்ளமைக்கு பாதுகாப்பு புலனாய்வின் எந்த அறிக்கையும் உறுதிப்படுத்தவில்லை என்றும், எனவே இதுதொடர்பில் கலவரப்பட தேவையில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் அருகிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. This is STEP-1 and will see STEP-2 soon.

    A monk wearing his religious dress killed BANDARANAYAKA ( A former Prime minister ).

    Doese this mean Srilank should band the CLOTH Code of this MONKS ?

    For those Authority trying to band BURGA... Remember Muslims in Srilanka has not created violence toward other society BUT BBS created such incident in many places ( eg Aluthgama) and killed people and created hate speech toward ethnic racism. Why not you think of putting BAND on them? You play DOUBLE standard toward Muslim of this country or working for an Allient AGENDA.

    We Lived, Living and love to live peacefully with other races in this country. Please do not distrube our peaceful co-existance with other race in our own land.

    ReplyDelete
  2. Well Said Rasheed Brother.

    ReplyDelete

Powered by Blogger.