August 11, 2016

மாவனல்லையில் பிரமாண்ட வர்த்தக நிலையத்தை, தாரை வார்த்த முஸ்லிம்கள்

-நஸீஹா ஹஸன்-

மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள மிகப்பிரமாண்டமான அல்முபாறிஸ் வர்த்தக நிலையம் பெரும்பான்மை கைகளுக்குச் சொந்தமாகியுள்ளது. 

முஸ்லிம்கள் செறிந்து வாழும் மாவனல்லை நகர மத்தியில் அமைந்துள்ள பல கோடி ரூபா பெறுமதியான இந்த பிரமாண்ட கட்டிடம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளுக்கு சென்றுள்ளமை முஸ்லிம்களுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தக் கட்டிடத்தை பயன்படுத்தி மாவனல்லையில் உள்ள ஏனைய முஸ்லிம்களின் வியாபாரத்தை சிதைக்கக் கூடிய அபாய நிலை உருவாகியுள்ளது. 

6 மாடிகளைக் கொண்டதாக 2013 ஆம் ஆண்டு இந்த வர்த்தக நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நிர்மானப் பணிகளுக்காக பணம் பெறப்பட்டுள்ளது. அந்த பணத்தை குறித்த திகதியில் வழங்கத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால்  வர்த்தக நிலையம் பறிமுதல் செய்யப்பட்டு பகிரங்க ஏலத்தில் விடப்பட்டுள்ளது. 

இதன் போது ஆரம்ப விலையாக 600 மில்லியன் ரூபா ஏலம்விடப்பட்ட போதிலும் அதனை யாரும் பெற்றுக் கொள்ள முன்வரவில்லை. இதனால் இறுதியாக இது குறித்த வங்கிக்கே சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆகவே, இந்த கட்டிடத்தை முஸ்லிம்கள் பக்கம் திருப்பிக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இன்னும் உள்ளது. இதனை எமது சமூகத்தில் உள்ள தனவந்தர்கள் சமூக நோக்கோடு முன்வந்து அந்தக் கட்டிடத்தை பெற்றுக் கொள்வார்களாயின் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.  

25 கருத்துரைகள்:

Is it a mosque to worry about? It would not have happened if the Muslim owner had not borrowed money on interest.

Pls give me the contact person
I can deal it

வங்கி எடுகக போகுது வட்டி பணம் காட்டவில்லை இதுக்கு போய் இப்படி பில்டப்

Hw to contact the relevant party. My contact is 0777285485

வங்கியில் வட்டிக்கு கடன்வாங்கீ கடனையும் கட்ட முடியாமல் வட்டியும் கட்ட முடியாமல் வங்கியால் சுவிகரிக்கபட காரணம் இஸ்லாம் சொல்லும் கொடுக்கல் வாங்கல் இல்லாமல் மன ஆசையில் கடன் பட்டுவிட்டு முஸ்லிம்களின் சொத்துரிமை பேசுவது எந்த வகையில் நியாயம் இஸ்லாத்தில் இல்லாதவைகளை நாம் ஆசைப்படுவதால் வரும்விளைவுகளை சமுதாய உரிமையோடு எவ்வாறு ஒப்பிட்டு சமுதாயத்தை சூடாக்குவது

இதன் நிர்மாணப் பணிகளுக்காக பணம் எவ்வழியில் பெறப்பட்டது என்பதனை அறிய முடியுமா?

Outrageous thinking . Bank money involved in the building
means , all Srilankans' money.Opening bid did not attract
any offer means,price is too high and nobody is interested
including non-Muslims. Business means profit out of any
purchase . There are millions of properties that change
hands among all communities. Banks have no religion only
money . Any Srilankan should be able to run any business
in any part of the country if there's a demand for the
commodity in the area and if it is allowed by law .
Muslims are complaining that they are not allowed to
operate in some parts of the country by the majority
and this article highlights that Muslims too do not
like non-Muslims to enter their areas . But businesses
operate as I said , on profit basis and not on
communal sentiments.Whoever offers the best price wins
it . We should never send the signal that we will buy
from the majority and not ready to sell them our
property .

Pls phone no kudunka nan vankukintren

நல்ல கேள்வி. இதன் ஆரம்ப நிர்மாண பணிகளுக்கென திட்டமிட்டு மாவனல்லை நகரில் உள்ள அனேகமான தனவந்தர்கலிடம் கோடிக்கனக்கில் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டது அதிகமானோர் அறிய வாய்ப்பில்லை. இலகுவில் லாபம் பெற எண்ணிய அவர்களின் முதலீடுகளும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த கட்டிடத்தின் கீழ் மாடியிலுள்ள பல கடைகள் நம்பிக்கை அடிப்படையில் பலருக்கு விற்கப்பட்டுள்ளது. அவற்றின் உரிமையாளர்களின் நிலையும் அதே. நேர்த்தியான திட்டம் இல்லாமலும் அதற்கேற்ற வருமான வழிகள் இல்லாமலும் இந்த அடுக்கு மாடி கட்டிடம் பல மாதங்களாக வெறிச்சோடி கானப்பட்டது. இதன் உரிமையாளரின் இயலாமை காரணமாக இன்று இந்த சொத்து மத்துமல்லாமல் மாவனல்லையில் இருக்கும் அநேகமான தனவந்தர்களின் கோடிக்கணக்கான பணமும் இல்லாமல் போனது தான் கசப்பான உண்மை.

Contact Izzath 0773995522

அந்த கட்டிடத்துக்கு எனக்கு சந்தர்ப்பத்தில் , நான் அவதானித்த ஒன்றுதான் கீழ்மாடியில் Machinery கடையும் , 3 அல்லது 4 வது மாடி என நினைக்கிறேன், super market உம் இருந்தது... இந்த அமைப்பே fundamentally wrong... மேலும் புடவைக்கடை மேல மாடி. இனி எப்படி பிஸ்னஸ் நடக்கும்.
கேள்விப்பட்டதில் உரிமையாளர் ஒரு ஆட்டோ டைரவராக இருந்து கட்டார் சென்று கட்டார் நாட்டவர் ஒருவரின் உதவியுடன் இதை ஆரம்பித்தாகவும், new year eve இல் வெகு ஆடம்பரமாகவும் இஸ்லாதுக்கு புறம்பாக பட்டாசு கொழுத்தி வெகு ஆடம்பரமாக new year உ கொண்டாடியதாகவும் கேள்விப்பட்டேன்..
மாவனல்லையில் ஒருவருக்கொருவர் பொறாமையின் காரணமாகவும் வரவுக்கு மீறிய செலவு காரணமாகவும் பல முஸ்லிம் கடைகள் அந்நியரின் வசமாகியது எனவும் கேள்விப்பட்டேன்.

Sritharan Sri

Enayya vambukku intha vilai kodukkureeru ?

Why you have to contact the party the news says it belongs to the bank now

இது வெளிநாட்டு காசில் கட்டப்பட்டதா? அல்லது மாவனல்லை வர்த்தகர்களின் பணம் கொண்டு கட்டப்பட்டதா என நான் அறியேன்.

ஆனால், பிழையான இடத்தெரிவு, வாகனத் தரிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளற்ற கட்டடம் என்பதும் அக்கட்டடத்தை வியாபரத்துக்கு ஒவ்வாத தளமாக மற்றிவிட்டது என்பதே உண்மை.

இங்கு இலாபம் அடைந்தவர்கள் உத்தேச திட்டத்தின் தரகர்களும், கட்டடக்கலைஞர், பொறியியலாளர், நிர்மான ஒப்பந்தக்காரர் மட்டுமேயாகும்.

புற நகர் பகுதியில் இலகு வாகனத் தரிப்பிட வசதியுடன் நெடுஞ்சாலை பயணிகள் பார்வைக்குற்படக்கூடிய இடத்தில் இவ்வணிகத்தளம் அமையப்பெற்றிருக்குமாயின், வெற்றி கண்டிருக்கும்.

இங்கு இன ரீதியான கண்ணோட்டத்தையும் மீறி, இரவில் விழுந்த குழியில் எவரும் பகலில் விழக்கூடாது.அல்லாஹ் நஷ்ட்டங்களை விட்டும் மனிதர்களைப் பாதுகாக்கட்டும்.

600 மில்லியன் ரூபாய் என்பது 60 கோடிகள் அல்லது 6000 இலட்சங்கள் என்பதையும், கஷ்ட்டப்பட்டு சதம் சதமாக சம்பாதித்த எந்த ஒரு மனிதனும் பெறுமதியற்ற ஒன்றுக்காக செலவிட முன்வரமாட்டான் என்பதையும் நஸீஹா ஹஸன் விளங்கிக்கொள்ள வேண்டும்.

Sri malli, naaiku why pore thengai?? Arthur sari, ungal thalivar eppovo thali sithari pooy vittare.

This is utterly a business failure ...ask experts about it...ask ALHAAJ FOUZ ...he would have handled this business more viable way.
Does this town need such a huge center for a business? I do not think.?
From the start it was a failure ..
This town is not kandy or Colombo or even kegalle to have such huge building
To Martian..
Look how many customers would come there each day.
It was not possible to have such building in a small place like this town..this is a good lesson for all.othere people ..

do not bother on these kind of news, as a meadia please try to maitain a unbiaes anti-racist media reports.

Pure racism by JaffnaMuslims...

So many world frontline businesses have gone and still
going bust , due to many reasons . Many products have
become antiques due to the advance of technology .
Mobile phone , Tablet and laptop revolution has sent
many other products to the museum . Telex , Fax ,
printer , camera , watches , video camera , tape recorder
cassette recorder , record player ,film rolls all now
have become out of use because of smart phones and
PCs. Just one example . Same thing with motor car repairs .
old mechanics can not cope with modern vehicles . Another
side of the story is world economic situation going bad to
worse . People are spending less everywhere and if we are
not in touch with these realities , no survival for us .
Mawanellla building is only a tip of the iceberg .

Invoke the almighty Allah sincerely for the remedy. He is the only one who can bring up contentment and relief.

If he didnt borrow... would u give the money him...???

அன்பானவர்களே ! இந்த செய்தியை எழுதிய நஸீஹா ஹசன் அவர்கள் முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ளார் இந்த கட்டிடம் பெரும்பான்மை சமூகத்துக்கு சென்றுள்ளது என்றும் கடைசி பத்திக்கு முன் உள்ள பத்தியில் இந்த சொத்து முஸ்லிம்களுக்கு திருப்பி கொள்ளும் வாய்ப்பு இன்னும் இருக்கு யாராவது தனவந்தர்கள் முன் வந்து இதனை வாங்கி முஸ்லிம்களை காக்க வேண்டும் என்று ! இந்த செய்தி ஒரு விளம்பரமாக கணிக்க வேண்டியுள்ளதா? அல்லது உண்மையான சமூக நோக்கமாக கணிக்க முடிகிறதா ? எதுவாயினும் இவ்வளோ பெரிய தொகையை கொடுத்து சமூக நலம் காக்க யார் முன்வருவர் ? அப்படி வந்தாலும் இது ஒரு வர்த்தக தொடர்பான விடயம் இதனை இலாபகரமானதாக தான் யாரும் கருத முடியும். அதுதான் நியதி உண்மையும் கூட அதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. எனினும் இங்கு நான் இரண்டு முக்கிய அம்சங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் .

01. எங்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையின் பலம்
02. பிற சமூகத்துடன் நாம் இன்னும் இணைத்து வாழ விருப்பமில்லாத சமூகமாக நாம் எங்களை தனிமை படுத்தி வாழ விரும்புவது. (இதுதான் இன்று பிரச்சினையே !)

Continue..second
முதலாவது பற்றி இங்கு சொல்ல வேண்டுமானால் உங்களில் சிலரை இங்கு குறிப்பிடலாம் இந்த கட்டிடம் யார் காட்டியது அவர் செய்த தவறுகள் என்ன அவர் இப்படி பட்டவர் வட்டிக்கு பணம் எடுத்துள்ளார் அதனால் தான் இப்படி நடந்துள்ளது அவர் ஆட்டோ சாரதி என்று அவர் குறையை மட்டும் உங்கள் கருத்தாக முன் வைக்கின்றீர்கள் அவர் இவ்வாறான ஒரு இக்கட்டில் விழுந்து விட்டார் என்று யாரும் இங்கு முஸ்லிம்கள் கவலை கொண்டீர்களா ? என்ன ஒற்றுமை உங்களிடம் ! என்ன ? சகோதரத்துவம் உங்களிடம் !? ரீபத் பேசுவது கூட வட்டி போன்ற பாவம் தான் இன்று இந்த ஒற்றுமை இன்மை நமது சகோதரர்களை பற்றியே குறை தேடி திரிவதால் தான் இன்று அந்நிய சமூகம் அவர்கள் ஒற்றுமையை வலியுறுத்து வருகிறார்கள் ! இன்று இந்த கட்டடம் மட்டும் தான் அவர்கள் காய் மாறுகிறது என்று அழுகிறோம் ஆனால் 100 க்கு 70 வீதம் முஸ்லிம்களின் வியாபாரம் இப்போது முடக்கப்பட்டுள்ளது இது ஒரு வகையான பொருளாதார பனிப்போர் இதை இன்னும் எங்கள் சமூகம் புரியாமல் நம்மை நாமே குறை பேசி பொறாமைபட்டு கொண்டு வாழ்வது கேவலமாக உள்ளது.
இரண்டாவது விடயம் பற்றி குறிப்பிட வேண்டுமானால் நாம் கொழும்பு நகரில் வாழும் பிற மக்களுடன் தான் வாழ்கிறோம் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் செய்கிறோம் எந்த பிரச்சினையும் இல்லாமல் அவர்களும் தமிழ் பேசுகிறார்கள் எமது பெருநாளைக்கு அவர்களுக்கு உணவுகளை வழங்குகிறோம் அவர்களும் எமக்கு அவர்களுடைய பெருநாளைக்கு பலகாரங்கள் எமக்கு தருகிறார்கள் இப்படி ஒரு அன்னியோன்னியம் இன்னும் இருக்கு இதை தவிர சில கிராமங்களிலும் இவ்வாறு இன்னும் ஒரு சிறந்த ஒற்றுமை இருக்கு ஆனால் தனி முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில் ஒரு அந்நிய சகோதரர் கடை வைக்க கூடாது முஸ்லிம்கள் மட்டும் தான் கடை வைக்க வேண்டும் என்று முஸ்லீம் மக்கள் நினைப்பது தவறா இல்லையா ? பெரும்பான்மை மக்களாக அவர்கள் வாழும் போது நாம் அவர்களுடன் இணைந்து வாழவேண்டியது மிகவும் அவசியம் எம்மிடம் உள்ள நல்ல பண்புகளை, எமது மார்க்கத்தின் சிறந்த தன்மைகளை அவர்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு இதனால் ஏற்படும். அவர்கள் ஒரு பக்கம் கூட்டமாகவும் நாம் ஒரு பக்கம் கூட்டமாகவும் வாழ்வதால் அவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்வதும் எமது மார்க்க விடயங்களை புரிந்து கொள்ளாமல் பிறர் சொல்லும் கட்டு கதைகளை நம்பி எம்மை காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பார்கள் அவர்களும் நல்ல பண்புள்ள மக்கள்தான் நாம் அவர்களை முற்றிலும் ஒதுக்கி நடக்க ஆரம்பித்ததால் தான் நமக்கு இந்த நிலை ! இதை பற்றி பெரிய கட்டுரை ஒன்றே எழுதலாம் . எனவே கடைசியாக ஒன்று " முஸ்லிம்களே ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடித்துக் கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று படைத்த இறைவன் நம்மை பார்த்து தினமும் அல் குர்ஹான் மூலம் சொல்லிக் கொண்டிருக்கிறான் அது எமக்கு விளங்கவில்லையா ? பிற சமூகத்துடன் எமது அன்பு நபி எப்படி வாழ்ந்து காட்டினார்கள் அந்த பிற சமூகம் தந்த நற்பெயர் தானே அல் அமீன் ! என்பது அவர்களுடன் நபி வாழாமல் ஒதுங்கி போகவில்லை அந்த பிற சமூகத்திடம் இருந்து வந்தவர்கள் தான் ஸஹாபாக்கள் எனவே இதனை நன்கு புரிந்து நாம் நடந்தால் பிற சமூகத்தால் எமக்கு தொல்லை வராது ! நாம் தான் அவர்களுக்கு தொல்லை தருகிறோம் நாட்டின் பேரை கெடுக்கின்றோம் - போதைவஸ்து முதல் கடத்தல், கலப்படம் (தேயிலை) என்று அதனை அநியாயத்தையும் தைரியமாக செய்கிறோம் !. எமது பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளில் அதுவும் இஸ்லாமிய சர்வதேச பாடசாலைகளில் படிக்க வைக்க வேண்டும் என்று நாம் முஸ்லிம்கள் விரும்புகின்றோம். அதுவும் ஒரு வர்த்தகமாக ஆகிவிட்டது. அரசாங்க முஸ்லீம் பாடசாலைகள் 100 க்கு 40 வீதம் மூடப்படும் நிலையில் உள்ளது (உதாரணம் : கண்டி சித்திலெப்பை முஸ்லீம் பாடசாலை,) இன்னும் பல பாடசாலைகள் பல பிரதேசங்களில் இந்த நிலையில் தான் உள்ளது. அந்தோ பரிதாபம் ! சற்று அல்ல நிறையவே சிந்திப்போம் !

Post a Comment