Header Ads



மட்டக்களப்பில் முஸ்லிம், நாடுகளின் தனவந்தர்கள் (படங்கள்)


(பாத்திமா நிஜா)

இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்  ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் மத்திய கிழக்கைச் சேர்ந்த தனவந்தர்கள் உயர்மட்டக்குழுவொன்று இன்று (14) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டது.

குறித்த உயர்மட்டக் குழுவினருடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மற்றும் ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷேஹ் மும்தாஜ் மௌலவி ஆகியோர் இணைந்து ஏறாவூர் அப்துல் மஜீட் கிராமத்துக்கு சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள வீட்டுத் தொகுதியைப் பார்வையிட்டனர்.

மேலதிகமாக அப்பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகள் சம்மந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மற்றும் ஹிரா பவுண்டேஷன் செயலாளர் அஷ்ஷேஹ் மும்தாஜ் மௌலவி ஆகியோர் உயர்மட்டக்குழுவினருடன் கலந்துரையாடினர்.

ஏறாவூர் அப்துல் மஜீட் கிராமத்தில் மத்திய கிழக்கைச் சேர்ந்த தனவந்தர்களின் உதவியினால் 50 வீடுகள் அமைக்கப்பட்டு அப்பிரதேச மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கிராமத்தில் வீடுகள் அமைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இவ்வீடுகள் மற்றும் வீட்டுக்கான தளபாடங்கள் என்பன அண்மையில் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஹிரா பவுண்டேஷன் ஊடாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



5 comments:

  1. These racist luantics..?.why regionalism?
    So many projects to help is needed for them.?
    This kind of leadership is selfish
    Why not do do some thing to all

    ReplyDelete
  2. Ateeq Abu,,, Fear Allah...

    These Donars have come to help our Muslim brothers.. Why not possible for you to consider every muslim as your brother.

    Leave your politics and THINK as Muslim regardless of which area or which country they are living in this world.

    ReplyDelete
  3. பிரதேசவாதம் ஒன்றும் அவர்களுக்குப் புதிதல்ல.

    ReplyDelete
  4. THESE DONORS HAVE COME TO HELP SOME PEOPLE IN YOUR AREA.. WHAT YOUR mp HAS DONE FOR SRI LANKAN MUSLIM.. HE ACCUMULATED HIS WEALTH.,. HIS FAMILY WEALTH.. HIS FRIEND WEALTH.. NOW SOME PEOPLE AROUND HIM IN HIS VILLAGE.. NOT POOR OF NEXT VILLAGES.. HE USED ARAB OIL MONEY FOR HIS POLITICS .. HE DOES NOT CARE WAHABISM OR SALAFISIM. OR SHIAIM.. HE CARE ABOUT POLITICS .. SPEAK TO HIM.. LOOK PREVIOUS POLITICAL LEADERS HOW THEY SERVE THIS NATION.. COMMUNITY .. WOE TO RACISM..

    ReplyDelete
  5. If this is regionalism, then what do you say VoiceSriLanka about Indian housing scheme in the North & East and they are mostly for Hindus and Christian Tamils...

    ReplyDelete

Powered by Blogger.