August 14, 2016

"முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம், ஒருபோதும் பலிக்காது"

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பில் நாட்டின் பிரதமரிடம் வாக்குறுதியை பெற்றுத்தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே அதனை நிறைவேற்றியும் தரும் என்று அக்கட்சியின் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தை வைத்து ஒவ்வொருவரும் சொந்த அரசியல் செய்ய நினைத்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் ஒருபோதும் பலிக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துவதற்கான ‘வீட்டுக்கு வீடு மரம்’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண விழா சனிக்கிழமை (13) சாய்ந்தமருதில் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவற்றைக் கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

"சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் நாம் நடவடிக்கை எடுத்தே வருகின்றோம். அது பிரதமர் அளித்த வாக்குறுதி. மக்களின் அதிகபட்ச ஆணையைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸினால் பெற்றுத்தரப்பட்ட அந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருகின்ற விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். அதில் மாற்றுக கருத்துக்கு இடமில்லை. எவரும் சந்தேகம் கொள்ளத் தேவையுமில்லை.

ஆனால் சிலர் இதனுள் விஷமத்தனமாக புகுந்து விளையாடி, இல்லாத பொல்லாத கதையெல்லாம் சொல்லி, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட முனைகின்றனர். தமது சொந்த அரசியலை செய்வதற்காக மக்கள் மத்தியில் பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். 

சிலர் அடிக்கடி உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து, அரசியல் நெருக்கடிகளை கொடுத்து, அதையும் இதையும் அள்ளி வைத்து, அவரை குழப்ப முயற்சித்தாலும் கூட அவர் இது விடயத்தில் நிச்சயம் தெளிவாகவே இருக்கிறார் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. நான் அவரை சந்திக்கின்ற போதெல்லாம் பிரதமரின் வாக்குறுதி பற்றி எடுத்துக்கூறி வருகின்றேன். 

முஸ்லிம் காங்கிரஸ் தலைமையினாலும் நாட்டின் தலைமையினாலும் தரப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்க முடியாது. 

இது மு.கா. தலைமையின் சொந்த அரசியல் இல்லை. எமது இயக்கத்திற்கு 95 வீதம் வாக்களித்து வருகின்ற இந்த ஊர் மக்களுக்கே ஏனையவர்களை விட மரத்தின் கனிகளை புசிப்பதற்கான அதிக உரிமை இருக்கிறது.

கல்முனை புதிய நகரமயமாக்கல் திட்டத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான அங்கீகாரத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனக்கு வழங்கியுள்ளார். சாய்ந்தமருதில் இருந்துதான் அத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. இதற்காக கரைவாகு வயல் பகுதியில் 23 ஏக்கர் காணி நிரப்பப்படவுள்ளது. சம்மாந்துறை தொடங்கி சாய்ந்தமருது ஊடாக மருதமுனை வரை புதிய நெடுஞ்சாலை ஒன்று அமைக்கப்படவிருக்கிறது.

சாய்ந்தமருது தோணாவை கடந்த 100 நாள் திட்டத்தில் எனது அமைச்சின் 50 மில்லியன் ரூபா செலவில் சுத்தம் செய்திருந்தோம். அதன் அடுத்த கட்ட அபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

4 கருத்துரைகள்:

மூட்டை அவ்வளவு பெரிசாக இல்லை

We have clear record of the cost to clean the thona. Machine hours, tipper days & labour days. We will produce whenever & wherever needed. AKP moulavi get ready to ......

சாய்ந்தமருது உள்ளுராட்ச்சி மன்றத்தை வைத்து ஒவ்வொருவரும் சொந்த அரசியல் செய்தால் அது முஸ்லீம் காங்கிரஸ் தலைமையிடம் பலிக்காது என்று சொல்லுவது எங்களுக்கு புரியவில்லையே. இந்த விடயத்தையே புரியும் படி சொல்ல முடியாத தலைமை...!!! அது சரி உங்களுக்கு பலித்தால் தான் என்ன?? பலிக்கவிட்டால் தான் என்ன?? தொடர்ந்து நீங்கள் விரும்பியவாறு மந்திரி பதவியில் தானே இருக்கிறீர்கள். நீங்கள் தலைமைத்துவத்தில் இருக்கு மட்டும், தனி நபர் காட்ச்சியான றிஸாத்தின் காட்டில் நல்ல மழைதான்.

சகோதரர் ஹக்கீம் அவர்களே, நீங்களும் ஹரீஸும் ( துக்ளக் மாதிரி எல்லோரும் பிரதி தலைவர்கள் ) இந்த மரம் நாட்டி படம் காட்டுவதை நிறுத்தி விட்டு, முதலில் இந்த தேசியப்பட்டியல் எம்பி பதவியை யாருக்கு கொடுப்பது என்பதை தீர்மானிங்கோ..!! அதுக்கே வக்கில்லை...!! பலிக்கும் பலிக்காது என்று வேற சண்டிப்பேச்சு..!! வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாக தமிழ் தரப்பு மிகவும் முனைப்புடன் பலவழிகளிலும் தங்களது அரசியல் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன என்றால் மரம் நாட்டி, கல்முனை மாநகரம் அபிவிருத்தி கதைத்து மக்களை பேகாட்டலாம் என்று நம்பாதீர்கள். அது காலம் மலையேறி விட்டது. கிழக்கின் எழுச்சி பற்றி மக்கள் கதைக்க வெளிக்கிட்டு விட்டார்கள். மாற்றம் தேவை....!!!!!

சகோதரர் ஹக்கீம் அவரகளே இந்த கட்சி என்ன உங்க வாப்பா உம்மா ஊட்டு சொத்தா இதை ஆரம்ப காலம் தொட்டு வளர்த்தவங்க நாங்க,இந்த சாய்ந்தமருதுக்கு கிடைக்க வேண்டிய விடயத்தை அது மற்றவர்களால் கிடைக்க விடாமல் தடையை ஏற்படுத்திக்கொன்டு அக்கிரமக்காரா நீ படுபாதகமான வேலயை செய்து கொன்டு இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறியாமல் இல்லை,பாதகனே எங்களைப்போன்றோரின் வோட்டுகளால் நீ பதவியில் இருந்து கொன்டு எங்களுக்கே அநியாயம் செய்து கொண்டிருக்கும் அக்கிரமக்காறன் நீ இந்தக்கட்சி எங்களைப்போன்றவரகளால் வளர்க்கப்பட்ட கட்சி நீ அதனை இப்போது ஆக்கிரமித்துக்கொண்டு எங்க ஊருக்கே வேட்டு வைக்கின்றாய்,பாதகனே நீ இதைப்பற்றி அல்லாஹ்விடத்தில் உனக்கு கேள்வி கணக்கு இல்லை என்றா நினைத்து கொண்டு இருக்கின்றாய் வைக்கோல் கந்தில் படுக்கும் நாய் தான் சாப்பிடுவதும் இல்லை மற்றவை சாப்பிட விடுவதும் இல்லை அதுபோல் தான் உன் செயல்பாடு உள்ளது

Post a Comment