August 13, 2016

முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த அமைப்புக்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைவர தயக்கம்

பொருளாதார ரீதியில் சுபீட்சமான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்திட்டங்களுக்கு, முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகள் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். 

வர்த்தக அமைச்சின் திருத்த யோசனைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

இன்று முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக சில பௌத்த குருமார் - அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் - பேசி வரும் பேச்சுக்கள் மிக மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளன. 

இவ்வாறான செயற்பாடுகள் நாட்டில் வர்த்தக – பொருளாதார துறையை மேம்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளது.  நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டு வந்து  அவர்களை இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம். இந்நிலையில், ஒரு சில தீய சக்திகள் இந்நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றமடையக் கூடாது என எண்ணுபவர்கள் மீண்டும் இனவாதம் - மதவாதத்தை தூண்டி இனங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்தி நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கு முயற்சிக்கின்றார்கள். 

இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே, மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் இனவாத செயற்பாடுகள் - அமைப்புக்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியில் அரசு எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய முடியாது போகும் - என அவர் மேலும் தெரிவித்தார். 

13 கருத்துரைகள்:

Ellam ni seitha thurokam thamilanukku

உன் கையால் இன வெறியை விட வேறு ஒன்றும் எழுத வராதோ

Small correction investors are coming may be ur muslim GCC arabs won't come...that is really good for srilanka.

It's an hour of need. Govt.must take steps to eradicate the racism from srilanka

நீங்கள் சலுகைகளுக்காக (பணம்/பதவி) என்னவும் செய்துகொண்டும், அங்கும் இங்கும் கோள் மூட்டிக்கொண்டும் இருந்தால் எப்படி?

பௌத்த குருமார்கள் சொல்கிறார்கள் உங்களிடம் இருந்து நாட்டை காப்பாற்ற
போராடுகிறார்களாம். இதில் அரசின் மௌனம் சம்மதம்.

சிங்களவர்கள் அன்றும் இன்றும் தங்களை எதிர்கின்ற தமிழர்களுக்கு தரும் மரியாதை கூட ஏன் உங்களுக்கு தருவதில்லை. ஏன்????.


இலங்கை தேசத்தின் விடிவுக்கு அன்றும் இன்றும் தடையாக இருக்கும் ஒரு கூட்டம் என்றால் அது உன் தமிழ் தீவிரவாதிகள் கூட்டம் தான். உங்களுக்கு வன்னி காட்டை விட்டால் உலகம் தெரியாது. பிரபாகரன் எனும் தீவிரவாதியால், தீவிரவாத சிந்தனைக்கு மழுங்கடிக்கப்பட்ட உன் கூட்டத்திற்கு இன வெறி, துரோகம் போன்ற வார்த்தைகளை தவிர ஒன்றும் தெரியாது. துரோகிகள் என்று தன் தீவிரவாத சிந்தனைக்குற்படாத எல்லோருக்கும் நீங்க பெயர் சூட்டுவீங்க நாங்க அதை பார்த்து கவலைபடணுமா? இன்னும் 100 வருடம் ஆனாலும் பழுதாய் போன என்ட்ரைகும் சாத்தியமில்லாத ஈழம் என்றும், செத்து ஒழிந்த பிரபாகரன் உயிரோடு வருவானென்றும் உன் கூட்டம் சொல்லிக்கொண்டே இருக்கும் மற்றைய இனங்கள் முன்னோக்கி எங்கோ போயிருப்பார்கள்.

உங்களுக்கும் இலங்கைக்கும் என்ன சம்பந்தம்? இலங்கை தேசத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கி ஐரோப்பாவில் போய் ஒழிந்துகொண்ட அடிமைகள் உங்களுக்கு இதை பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது.

Mr Mohendran is a dangerous hateful racist!

Sri & Mahen, Muslims have not taken up ____ yet, if we do, you cant bear it. Why dont you call back all those Tamilians who are working for GCC Arabs to Sri Lanka?? If you all have real backbone, DO IT.

tamilanukku yaaru thurokam saitha sritharan? neenka than summa poone paambe thookki vettikkulla vitta

உங்களுக்கு அரசு என்று என்ன மரியாதை தந்தது அப்பாவி தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடாமல் இனத்துவேசமும்,தனிநாடும்.இன்னும் இல்லாதததையல்லாம் கேட்டுக் கேட்டு கடைசியில் மக்கள் செத்து மடிவதுதான் மிச்சம் குரோதம் பேசுகிறவர்களின் பிள்ளைகள் லண்டனில் படித்து பிரஜா உருமையுபெற்று வாழ்கிறார்கள் அப்பாவி மக்களுக்கு தனி நாட்டுஆசையை ஊட்டி அவார்களின் பிள்ளைகளை பழி கொடுத்ததுதான் மிச்சம் யோசித்துப் பார் இப்போது இருக்கும் தமிழ் கட்சி களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் எத்தனை பேருடைய மகன்கள் யுத்த காலத்திலும் இறுதி யுத்ததிலும் செத்தார்கள் யாரும் சாகவில்லை அனைவரின் பிள்ளைகள் குடும்பம் எல்லாம் மேற்கத்திய நாட்டில் .இதுதான் தமிழ் மக்கள் மீது கொண்ட பற்றா அப்பாவி தமிழ் மக்களே சிந்தியுங்கள் குறுகிய கால வாழ்க்கையில் நிம்மதியாக வாழப்பழகுங்கள்

Antony இதை கேட்டு என் நவ துவாரங்களும் சிரித்துவிட்டது. உங்களுக்கு சிங்களவர் கொடுத்த மரியாதையை கொஞ்சம் பட்டியலிடவும். முஸ்லிம்களுக்கு எதிரான BBS சிங்களவர்களிடம் கடந்த தேர்தலில் துடைத்தெறியபட்டதை நீர் அறியவில்லையா? தமிழனை அழித்த ராஜபக்சவை சிங்களவர் அரசனாக இன்றுவரை பார்ப்பதையும் நீர் அறியவில்லையா? உலகத்திற்கே தெரியும் உன் கூட்டத்திற்கான மரியாதை சிங்களவரிடம் எப்படியென்று. இன்னும் 150 வருடங்கள் ஆனாலும் இல்லாத தமிழீழத்தை சொல்லி சொல்லி நீங்கள் அதே இடத்தில நின்றுகொண்டு மற்ற இனங்களின் முன்னேற்றத்தை கண்டு பொறாமை மட்டுமே பட்டுக்கொண்டு இருப்பீர்கள். மற்ற இனங்கள் எங்கோ போயிருப்பார்கள். உன்னை போன்றவர்கள் இந்த நாட்டின் சாபக்கேடுகள்

Post a Comment