August 22, 2016

முஸ்லிம்களை பாதிக்கும் தீர்மானங்களை எடுக்கமுடியாது, முஸ்லிம் நாடுகளை பகைக்கவும் முடியாது - ரணில்

"முஸ்லிம்கள் ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கே தமது ஆதரவை வெளிப்படுத்தினர். எனவே அவர்­களை பாதிக்கும் வகையிலான தீர்­மானங்களை எம்மால் மேற்­கொள்ள முடியாது"

இலங்­கையில் முஸ்லிம் பெண்கள் முகம் உட்­பட உடலை முற்­றாக மறைத்து அணியும் புர்கா அல்­லது நிகாப் எனப்­படும் ஆடைக்கு தடை­வி­திக்­கு­மாறு புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­மொ­ழி­யப்­பட்ட யோச­னையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட­ன­டி­யாக நிரா­க­ரித்­துள்ளார்.

தேசிய பாது­காப்பு கவுன்­சிலின் கூட்டம் சில தினங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற சமயம், புல­னாய்வுப் பிரிவின் உய­ர­தி­காரி ஒரு­வரே இந்த யோச­னையை முன்­வைத்­துள்ளார். 

நாட்டில் கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணம் போன்ற குறிப்­பிட்ட பிரிவு முஸ்­லிம்கள் மத்­தியில் தீவி­ர­வாதப் போக்கு அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வ­தா­கவும் அவர்­க­ளா­லேயே புர்கா அல்­லது நிகாப்  ஆடைகள் அணி­யப்­ப­டு­வ­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள மேற்­படி பாது­காப்பு புல­னாய்வுப் பிரிவு உய­ர­தி­காரி, எனவே இதனை தடை செய்­வது நாட்டின் பாது­காப்­புக்கு உகந்­தது என்றும் தனது முன்­மொ­ழிவில் குறிப்­பிட்­டுள்ளார்.

எனினும் இந்த யோச­னையை கேட்­ட­வுடன் கடும் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அவ்­வாறு தடை விதிப்­பது அர­சாங்­கத்தை கடு­மை­யாகப் பாதிக்கும் என்றும் முஸ்லிம் நாடு­களின் எதிர்ப்பை சம்­பா­திக்க வேண்டி வரும் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இலங்கை முஸ்லிம் சமூகம் கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் ஐக்­கிய தேசிய முன்­னணி அர­சாங்­கத்­திற்கே தமது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தினர்.

எனவே அவர்­களை பாதிக்கும் வகை­யி­லான தீர்­மா­னங்­களை எம்மால் மேற்­கொள்ள முடி­யாது என்றும் பிர­தமர் இதன்­போது மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்த ஆடை புழக்­கத்தில் இருப்­பதால் அதனைப் பயன்­ப­டுத்தி தீவி­ர­வாத தாக்­கு­தல்­களை நடாத்­து­வ­தற்­கான வாய்ப்­பி­ருக்­கி­றது என்­பதே குறித்த பாது­காப்பு புல­னாய்வு உய­ர­தி­கா­ரியின் வாத­மாகும். எனினும் மேற்­படி யோச­னையை முன்­மொ­ழி­வ­தற்கு முன்­ன­தாக, முப்­படை தள­ப­திகள் மூவரும் நாட்டின் சம­கால பாது­காப்பு நிலை­வ­ரங்கள் தொடர்பில் தேசிய பாது­காப்பு கவுன்சில் உறுப்­பி­னர்­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­துள்­ளனர்.

எனினும் அவர்­களில் எவரும் புர்கா அல்­லது நிகாப் ஆடை­யா­னது நாட்டின் பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக உள்­ள­தாக எந்த இடத்­திலும் சுட்­டிக்­காட்­ட­வில்லை என்றும் தெரி­ய­வ­ரு­கி­றது.

10 கருத்துரைகள்:

Dear All Muslims this is shows us there are some process going against Muslims. so please prepare for it. and react before big activities happen against us. dear Muslim Ministers open ur Eyes and and ur Mouth

அதற்குத்தானே ‘அறபி தெரிந்த கூட்டம்’ இருக்கிறது. அவர்கலை அனுப்பி சமாலிக்கலாம். ஜெனீவாவுக்கு அனுப்பி போர்க்குற்ற விசாரனைக்கு ஆப்பு அடிக்க ரைபன்ணீனோமே !

போர்க்குற்றத்திற்கு அரபிகள் தேவையில்லை வாக்களிக்க சிறிலங்கவே போதும் என்று நினைக்கின்றார்கள், ஏன் என்றால் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களுக்கு எதிராகத்தான் எப்பவும் வாக்களிப்பார்கள், அவர்கள் என்றும் சர்வதேச பயங்கரவாதி என்று உலகமே கூறியுள்ளது,

There are no war crimes in Sri Lanka.

Even if PM says no to such suggestion from defence, sooner or later that law will be imposed.
We Muslims keep going behind politicians in order to lick any leftovers. It's time for us to unite. Forget about the small differences we have. Stop following jamaaths and their ego filled , power hungry leaders. We ordinary people should reject them and unite among neibours , friends , Masjids.
Our community is divided , say 'NO' to " இயக்கம்" say ' YES' to "இஸ்லாம்" . Stop hating one another. The leaders of the eespective jamaths never going to untie because of their ego , status in the society , power hungry mentality etc.

thanks to voice srilanka for your valuable words.

as concern to the reply given by PM Ranil is not suitable or not proper answer at all . he should give the answer as srilankan law toward to the citizens exist, not to compromise islamic countries or the Local muslim community who supported to bring out this Government. his answer should be clear and professional. otherwise in future he may change his minority policy concern to their reaction.

உடலை முழுமையாக மூடுகின்ற ஆடைகளை அன்றி முகத்தை மூடுகின்ற ஆடைகளை மாத்திரம் தடை செய்யலாம். அவ்வாறு செய்தால்தான் நம் முன்னே உலாவும் நபர்களை குறைந்தபட்சம் யாரென்றாவது அறிந்து கொள்ளலாம்.

She didn't say anything wrong this time. Can you show evidence in Quran or sunnah where it says it's a must ?
This subject is a debatable one.
Personally I am not a fan of niqab. According to my knowledge its not a must. Having said that I am not telling the people who wears it to remove it unless if the law ask them to do so.
Remember if you have forced to do something which Islam didn't tell you to do, you won't get any sin for that.
Islam is a compassionate religion.

Post a Comment