August 04, 2016

முஸ்லிம் படு­கொ­லை­களை விசா­ரிக்க, விஷேட நீதி­மன்­றத்தை நிறுவு - நல்லாட்சி அரசிடம் கோரிக்கை


-விடிவெள்ளி-

முஸ்லிம் சமூ­கத்­திற்­கெ­தி­ரான இன படு­கொ­லை­களை விசா­ரிக்க விஷேட நீதி­மன்­ற­மொன்­றினை அமைக்­கு­மாறு சர்­வ­தேச சமூ­கத்­தி­டமும் நல்­லாட்சி அர­சாங்­கத்­தி­டமும்  தேசிய ஷுஹ­தாக்கள் நிறு­வனம் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்­ளது.

26 ஆவது தேசிய ஷுஹ­தாக்கள் தினத்­தை­யொட்டி நேற்று -03- புதன்­கி­ழமை தேசிய ஷுஹ­தாக்கள் நிறு­வனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, 

1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்றில் மிக முக்­கி­ய­மான ஆண்­டாகும். 1990 ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்தில் இரத்த வெள்ளம் பாய்ந்­தோ­டி­யது. கிழக்கு மாகா­ணாத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளிலும் முஸ்லிம் கிரா­மங்­க­ளிலும் ஜனா­சாக்கள் மலைபோல் குவிந்து கிடந்­தன.

இந்த கொடிய நினை­வு­களின் மைய­மான ஆகஸ்ட் 3 ஆம் திக­தியை இலங்கை முஸ்­லிம்கள் ஷு­ஹ­தாக்கள் தின­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தி நினைவு கூர்ந்து வரு­கின்­றனர். 

1915 ஆம் ஆண்டு ஆரம்­ப­மா­கிய இலங்கை முஸ்­லிம்கள் மீதான இன­வாதம் பயங்­க­ர­வாதம் இன்று வரை தீர்­வில்­லா­ம­லேயே அளுத்­கம வரை தொடர்­கின்­றது.

காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலைச் சம்­ப­வங்­களும் வடக்­கி­லி­ருந்து ஒரு இலட்­சத்­துக்கு மேற்­பட்ட முஸ்­லிம்கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட துய­ரச்­சம்­ப­வங்கள் முஸ்­லிம்கள் வர­லாற்றில் கறை­ப­டிந்­த­வை­யாகும்.

1990 களில் கிழக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து முஸ்­லிம்­களை இனச் சுத்­தி­க­ரிப்பு செய்து முஸ்­லிம்கள் மீது கட்­ட­விழ்த்து விட்ட இனப்­ப­டு­கொ­லை­களும் அழி­வு­களும் வர­லாற்றுப் பதி­வு­க­ளுக்­கு­ரிய பேர­வ­ல­மாகும்.

பொத்­துவில் தொடக்கம் அக்­க­ரைப்­பற்று ஒலுவில், சாய்ந்­த­ம­ருது, காத்­தான்­குடி ஏறாவூர், ஓட்­ட­மா­வடி வாழைச்­சேனை கிண்­ணியா மூதூர் என பல முஸ்லிம் பிர­தே­சங்கள் மீது மிகப் பெரி­ய­ள­வி­லான பயங்­க­ர­வா­தத்தை புலிகள் ஏவி முஸ்­லிம்­களை வெளி­யேற்ற முயன்­றனர்.

12.7.1990 அன்று புனித மக்­காவில் ஹஜ் யாத்­தி­ரையை முடித்து விட்டு கொழும்­பி­லி­ருந்து கல்­முனை வழி­யாக காத்­தான்­குடி திரும்பிக் கொண்­டி­ருந்த 68 முஸ்­லிம்­களை குருக்கள் மடம் பகு­தியில் வைத்து தமீழ விடு­தலைப் புலிகள் வெட்­டியும், சுட்டும் கடத்­தியும் கொலை செய்­தனர். அவர்­களின்  ஜனா­சாக்­களை கூட இன்று வரை காட்­ட­வில்லை.

3.8.1990 அன்று காத்­தான்­குடி முதலாம் குறிச்சி மீரா ஜும்­ஆப்­பள்­ளி­வாசல் மற்றும் ஹுஸை­னிய்யாப் பள்­ளி­வாசல் ஆகிய இரண்டு பள்­ளி­வாசல்­க­ளிலும் இரவு புனித இஷாத் தொழு­கையில் ஈடு­பட்டுக் கொண்­டி­ரந்த போது விடு­த­லைப்­பு­லி­க­ளினால் 103 பேர் சுட்டுக் கொலை செய்­யப்­பட்­டனர்.

ஏறாவூர் ஐயங்­கேணி, மற்றும் சதாம் ஹுஸைன் கிரா­மங்­களில் உறக்­கத்­தி­லி­ருந்த அப்­பாவி ஆண்கள் பெண்கள் குழந்­தைகள் கர்ப்­பி­ணித்­தாய்­மார்கள் என 116 பேர் வெட்­டியும் சுட்டும் கொல்­லப்­பட்­டனர்.

இத்­தனை நிகழ்­வு­களும் மூடி மறைக்­கப்­பட்ட இன்னும் பல துயர வர­லா­று­களும், மன்­னிக்­கப்­பட்­டாலும் மறக்க முடி­யாத நினை­வு­க­ளாகும்.

விலை மதிக்க முடி­யாத இத்­தனை உயிர்கள் உட­மை­களை இழந்து வடக்­கையும் கிழக்­கையும் பிரித்து நமது சமூ­கத்தின் அர­சியல் அதி­கா­ரத்தை தக்க வைத்­தி­ருக்கும் இச் சந்­தர்ப்­பத்தில் மீண்டும் வடக்­கையும் கிழக்­கையும் இணைப்­ப­தற்கு முட்டுக் கொடுக்கும் சில முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் இந்த முடி­வி­லி­ருந்து பின் வாங்கி எக்­கா­ரணம் கொண்டும் வடக்கு கிழக்கு இணை­யாமல் பாது­காத்துக் கொள்­வ­துடன் முஸ்லிம் சமூகம் தனித்­துவ அர­சி­யலை நடாத்­து­வ­தற்கு ஒரு அணி­யாக திர­ள­வேண்டும் என ஷுஹ­தாக்கள் சார்பாக அழைப்பு விடுக்கின்றோம்.

தமிழ் சமூகத்திற்கெதிரான இனச் சுத்திகரிப்பை விசாரிப்பதற்கு நியமிக்கவிருக்கும் விஷேட நீதிமன்றங்களில் ஒரு நீதிமன்றத்தினை முஸ்லிம் சமூகத்திற்கெதிரான இன அழிப்பினை விசாரிக்க அமைத்து தருமாறு சர்வதேச சமூகத்திடமும் நல்லாட்சி அரசாங்கத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 கருத்துரைகள்:

சிறந்த சிந்தனை

இதற்கு சரியான முடிவு சர்வதேசம்தான்,

Post a Comment