Header Ads



ராஜபக்ச கம்பனிக்கு, வக்காலத்து வாங்கிய அமைச்சர் - ஆத்திரத்துடன் வெளியேறிய சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் அமைச்சர் ஜோன் செனவிரட்னவிற்கும் இடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் கிசுகிசு வார இறுதி பத்திரிகையொன்று இதுபற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சி வெற்றியீட்ட வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்சவை கட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டுமென அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

“இதெல்லாம் பொய். மஹிந்தவினால் ஒன்றையும் செய்ய முடியாது” என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

“மேடம். வீதியில் இறங்கிப் பாருங்கள் மக்கள் மஹிந்த அல்லது கோதாவையே கேட்கின்றார்கள்” என ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

இதனால் கோபமுற்ற சந்திரிக்கா நீர் மஹிந்தவிற்கு வால் பிடிக்கும் அடியால் என ஜோனை திட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த ஜோன், “மஹிந்தவிற்கு மட்டுமல்ல நாம் கட்சியின் அனைத்து தலைவர்களுக்கும் வால் பிடித்திருக்கின்றோம். எமக்கு சுதந்திரக் கட்சி அரசாங்கம் அமைக்க வேண்டும் என்பதே தேவை” என தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்ட சந்திரிக்கா ஜோன் செனவிரட்ன ஓர் பயங்கரமான நபர் எனக் கூறி அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார் என ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. This may be TRUE..bcs there Black Sheeps inside the cabinets

    ReplyDelete

Powered by Blogger.