Header Ads



முஸ்லிம்கள் எத்தனை பேர், சொந்த இடங்­க­ளுக்கு திரும்­பு­வரென இனங்­காண வேண்­டும் - ரணில்

வடக்கில் மக்­களை துரி­த­மாக மீள்­கு­டி­ய­மர்த்­து­வ­தற்­கா­கவே அமைச்­சர்­க­ளான சுவாமிநாதன், ரிஷாத் பதி­யுதீன் மற்றும் பைஸர் முஸ்­தபா தலை­மை­யி­லான செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரி­வித்தார். 

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சார்ள்ஸ் நிர்­ம­ல­நாதன் பிர­ம­தரிடம் கேள்வி நேரத்தில் எழுப்­பிய வினா­விற்கு பதி­ல­ளிக்­கு­மு­க­மா­கவே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்­திய அர­சாங்கம் தனது பொறுப்­புக்­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது. அதன் பிர­காரம் தான் வட­மா­கா­ணத்தில் மீள்­கு­டி­யேற்­றத்தை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக அமைச்­சர்­க­ளான சுவா­மி­நாதன், ரிஷாத் பதி­யுதீன், பைஸர் முஸ்­தபா ஆகியோர் தலை­மை­யி­லான செய­ல­ணி­யொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

வட­மா­கா­ணத்தில் மக்கள் தமது சொந்த பிர­தே­சங்­க­ளுக்கு திரும்­பி­யி­ருக்­கின்ற போதும் அவர்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பான செயற்­பா­டுகளை முன்­னெ­டுக்க வேண்­டி­யுள்­ளது. 

அதனை துரி­தப்­ப­டுத்தும் முக­மா­கவே இந்த செய­லணி உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த செய­லணி மீள்­கட்­ட­மைப்பு மீள் குடி­யேற்றம் தொடர்­பாக ஆராய்ந்­த­றிந்து நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­வற்­காக உரிய செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும்.

இதற்­காக இச்­செ­ய­ல­ணிக்கு பணிப்­பாளர் ஒருவர் நிய­மிக்­கப்­ப­ட­வுள்ளார். 

வட­மா­காண முத­ல­மைச்­சரின் ஒத்­து­ழைப்­பு­ட­னேயே இந்த செய­லணி தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும். மாகாண சபையைப் பொறுத்­த­வ­ரையில் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றது. அத்­துடன் மேலும் பல செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

மாகாண சபையின் செயற்­பா­டு­களில் தலை­யீடு செய்­யவோ அல்­லது முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தவோ நாம் விரும்­ப­வில்லை.

மாகாண சபையின் முன்­மொ­ழி­வு­க­ளையும் உள்­வாங்கி பரி­சீ­லனை மேற்­கொள்­வ­தற்கு மீள்­கு­டி­யேற்றச் செய­லணி தயா­ரா­கவே உள்­ளது.

மீள்­கு­டி­யேற்­றத்தில் விசே­ட­மாக  பல்­வேறு விட­யங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. முரண்­பா­டு­க­ளின்றி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளது.

புத்­த­ளத்தில் இடம்­பெ­யர்ந்­துள்ள  முஸ்­லிம்­களில் எத்­த­னைபேர் புத்­த­ளத்தில் வசிக்க விரும்­பு­கின்­றார்கள், எத்­த­னைபேர் மீளவும் சொந்த இடங்­க­ளுக்கு திரும்ப விரும்­பு­வார்கள் என்­பதை இனங்­காண வேண்­டி­யுள்­ளது.

இவ்­வாறு பல விட­யங்கள் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டி­யுள்­ளன என்றார். 

1 comment:

  1. பிரதமரின் சரியான முடிவு இதை துரிதப்படுத்தி சரியான் முறையில் செயல் படுத்து வாராயின்
    பல்லின மக்களும் நிம்மதியாக வாழ முடியும்,

    ReplyDelete

Powered by Blogger.