Header Ads



பல்கலைக்கழக அனுமதிக்கான, வெட்டுப்புள்ளி முறையில் மாற்றம்

க.பொ.த.(உயர்தர) பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப்பு ள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்த மாவட்ட வெட்டுப் புள்ளிகள் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இதன் காரணமாகவே தமது சொந்த மாவட்டங்களில் பரீட்சைகளுக்குத் தோற்றாமல் வேறு மாவட்டங்களில் தோற்றுவதாகவும் இதனை தடுப்பதற்காகவே அமைச்சர் இந்த மாவட்ட வெட்டுப் புள்ளிகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளில் மாணவர்கள் தமது சொந்த மாவட்டங்களை விட்டு வெளி மாவட்டங்களில் பரீட்சைக்கு தோற்றியமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளமையும் அதற்கு அனுமதியளித்த இரண்டு பாடசாலை அதிபர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும் மாணவர்களுக்கான வினாத்தாள்கள் மாறி வழங்கப்பட்டமை தொடர்பில் நேற்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்கள் அடுத்து வரும் வருடங்களில் இடம்பெறாது எனவும் அவர் தெரிவித்தார். 

எனவே, இதுவரை பரீட்சைகளில் இடம்பெற்ற முறைக்கேடுகள் இனிவரும் காலங்களில் நடைபெறாத வண்ணம் பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 


No comments

Powered by Blogger.