Header Ads



துருக்கி இராணுவ சதிப்புரட்சி அதிகாரி, அமெரிக்காவில் தஞ்சம்

அமெரிக்காவில் நேட்டோ பணியில் இருந்த துருக்கி ரியர் அட்மிரல் ஒருவர் ஜூலை 15 இராணுவ சதிப்புரட்சி முயற்சி தொடர்பில் தேடி வரும் நிலையில் அமெரிக்காவில் தஞ்சம் கோரியுள்ளார்.

துருக்கி மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே ரியர் அட்மிரல் முஸ்தபா சக்கி உகுர்லு அமெரிக்காவில் அடைக்கலம் பெற்றுள்ளார்.

வெர்ஜினியாவில் இருக்கும் நேட்டோ கூட்டுப்படை கட்டளைத் தளத்தில் நிலைகொண்டிருந்த உகுர்லுவை கைது செய்ய துருக்கியில் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் உகுர்லு தனது இராணுவ தளத்திற்கு கடந்த ஜூலை 22 தொடக்கம் திரும்பவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் உகுர்லுவின் தஞ்சக்கோரிக்கையை அமெரிக்கா எற்றதா என்பது குறித்த விபரம் உறுதி செய்யப்படவில்லை.

துருக்கியின் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சுமத்தப்படும் மதகுரு பதுல்லாஹ் குலனை நாடு கடத்தும் படி துருக்கி அரசு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த விவகாரம் இரு நாட்டு உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று துருக்கி எச்சரித்து வருகிறது. 

No comments

Powered by Blogger.